குவிகம் சிவசங்கரி சிறுகதைத் தேர்வின்  4 வது ஆண்டு விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 13, ஜூலை 26  அன்று கோலா கோலாமாகக் கொண்டாப்பட்டது.

பசும்புல்என்ற தலைப்பில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 12 கதைகளின் தொகுப்பு வெளிடப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாதம், கதை, கதாசிரியர், வெளிவந்த இதழ், நடுவர் ஆகிய விவரங்கள் இதோ! 

 

 ஜூலை  2025.  மரண ருசி- கவிப்பித்தன்-  காலச்சுவடு – ஷைலஜா

ஆகஸ்ட்.  அகிலாக்கா – பிறைநுதல் – வாசகசாலை –   மஞ்சுளா சுவாமிநாதன்  

செப்டம்பர். சந்தைக் கடை – பெருமாள் முருகன்-  காலச்சுவடு – – எஸ் ராஜகோபாலன் 

அக்டோபர். மீட்பு – எஸ் வி வேணுகோபாலன் – ஆனந்தவிகடன் – லதா ரகுநாதன் 

நவம்பர். ஆபரேஷன் பகத் சிங் – ஆயிஷா நடராசன் – அம்ருதா  -எஸ் ராமமூர்த்தி 

டிசம்பர். காணுமாறு காணேன் – நிர்மல்  -சொல்வனம்  -கணேஷ்ராமன் 

ஜனவரி. பற்றாக்குறை! – பத்மினி பட்டாபிராமன் – தினமலர் – இராய செல்லப்பா

பிப்ரவரி. பசும் புல் – சரவணன் சந்திரன் – உயிர்மை – செல்லம் ஜரீனா 

மார்ச். பிறந்தநாள் பரிசு – ராமராஜன் மாணிக்கவேல்-  சொல்வனம்  -மா சுவாமிநாதன்

ஏப்ரல். செத்த வீடு – ஜே கே – சொல்வனம் – உமா – மாலதி 

மே. மூடிய சாளரம் – எம் கோபாலகிருஷ்ணன்-  காலச்சுவடு  -பானுமதி வெங்கடேஸ்வரன் 

ஜூன். பரம்பரை – விஜயராணி மீனாக்ஷி –  நடுகல் – சுதா நாகராஜ் 

 

சிவசங்கரி அவர்கள்  வாழ்த்துரை வழங்க , வ வே சு அவர்கள் தலைமையுரை ஆற்ற,  டாக்டர் பாஸ்கரன் சிறப்புரை ஆற்ற விழா சிறப்பாக நடைபெற்றது. 

விழாவின் நிகழ்ச்சிகளை ஷ்ருதி டி வி நண்பர் அழகாகக் காணொளியாக்கி நாம் ரசிக்கத் தந்திருக்கிறார். பார்த்து மகிழுங்கள். 

தொடர்ந்து இந்த நல்ல பணிக்குப் பொருள் உதவி செய்து  12 சிறுகதை ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பரிசாக ரூபாய் 3000  வழங்கி வரும் பத்மஸ்ரீ சிவசங்கரி அவர்களுக்கு குவிகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி !