இம்மாதக் கதையாக  சுதா நகராஜ் அவர்கள்  தேர்வு செய்த படைப்பு

பரம்பரை                    விஜயராணி மீனாட்சி                நடுகல்

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கடவுளுக்கு அடுத்தபடியா கதை ஆசிரியர்களை நாம படைப்பாளி என்று சொல்கிறோம். அதற்கான காரணம் கதை ஆசிரியர்கள் புதிய உலகத்தை, புதிய மனிதர்களை, புதிய சிந்தனைகளை அவங்களோட கதையில் வருகிறார்கள்

2026 ஜூன் மாதம் வெளியான சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க கதைகள் இவை

‘இவர்கள் நண்பர்கள்’  பவானி உமாசங்கர்               தினமலர் வாரமலர்

எழுதிய என்ற படைப்பில், எந்த வயதானாலும் நண்பர்களின் தேவை எவ்வளவு முக்கியம் என்பதை ஆசிரியர் தனது கோணத்தில் இருந்து எழுதியுள்ளார். நாமும் நமது பார்வையை நேர்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வயதானவர்களுக்கு உணவும் ஓய்வும் மட்டும் போதும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது மட்டும் அவர்களுக்குப் போதாது; நண்பர்களின் தேவை எவ்வளவு அவசியமானது என்பதை ஆசிரியர் நெத்தியடியாகச் சொல்லியிருக்கிறார்

கனியுமாய் என் கனிகா          விஜி முருகநாதன்                 ஆனந்தவிகடன்

அன்பின் வலிமையை ஆசிரியர் நமக்கு ஒரு நோயாளியின் கதாபாத்திரத்தின் மூலம் உணர்த்துகிறார். அன்பு மனிதனை எவ்வாறு மாற்றுகிறது என்பதற்கு இந்தக் கதை ஒரு சிறந்த உதாரணமாகும். அன்புதான் உலகத்தின் மிகப்பெரிய ஆயுதம் என்பதை ஆசிரியர் தம்முடைய எழுத்தின் மூலம் நமக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.”

தயாபரி                    கிருத்திகா                           யாவரும்.காம்

மிகவும் வித்தியாசமானதொரு படைப்பு. ஒரு குடும்பத்தில் நடைபெறும் நிகழ்வுகளை அனைவரின் கோணத்திலிருந்தும் ஆசிரியர் கிருத்திகா எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள விதம் மிக அருமை. கதையின் முடிவில், தாய் தன் மகனின் முடிவை ஆதரிப்பது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.”

அன்புள்ள அடிமைகள்           நித்யா                      லேடீஸ் ஸ்பெஷல்

என்ன ஒரு அழகான கதைத் தலைப்பு! பெண்கள் அன்புக்கு அடிமைகள் என்பதை, கதையாசிரியர் வேறு ஒரு கோணத்தில் படம் பிடித்துள்ளார். ஆசிரியர் நித்யா அதனை நமக்கு மிக அழகாகக் கூறியுள்ளார். கதையைப் படிக்கும்போது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அதைவிடப் பெரிய திருப்புமுனை கதையின் முடிவுதான். ஒரு தோழி, தன்னுடைய தோழியின் வாழ்க்கைக்காக எவ்வளவு பெரிய சவாலை ஏற்கிறார் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். இது மிகவும் அருமையானதொரு படைப்பு.

இறுதியாக இம்மாதக் கதையாக தேர்வு செய்யப்படுவது

பரம்பரை                            விஜயராணி மீனாட்சி   நடுகல்

மூன்றாம் பாலின மக்கள் படும் பாட்டை தெரிவாக எடுத்துரைக்கிறார். அந்த கதையை அவர் எடுத்துகொண்டு  போயிருக்கும்  விதம் மிக அருமையா இருக்கிறது . ஒரு சாதாரண பாட்டில்  ஆரம்பித்து, கடைசியில் மூன்றாம் பாலினத்தோட உதவிக்கான கையா அதை முடித்திருக்கிறார். நம்ம ஒவ்வொருவரும் கடந்து கடந்து வந்த பாதையில ஒரு மூன்றாம் பாலினத்தவரைச் சந்தித்திருப்போம். அவர்கள் அப்புறம் என்ன ஆனார்களோ என்ற ஒரு தேடல் இருந்திருக்கும். அதற்கான விடை நமக்கு தெரிந்திருக்காது. அதற்கான பதிலை இந்தக் கதையில் சொல்லிஇருக்கிறார் ஆசிரியர் மிகவும் அருமை.