அப்பாவின் பட்டுவேஷ்டிமீதுஅண்ணனுக்கு ஒருகண்தம்பிக்கு இரண்டு கண்பெண்ணானஎனக்கும்அதன் மீதானபார்வையைக்கண்டுஅம்மா சிரிப்பாள்அகலஜரிகை கரையிட்டுசற்றே பழுப்புநிறமானாலும்பளபளக்கும் பட்டுவேஷ்டியைதாவணியாய் அணிந்துகொள்ளதணியாத ஆசை இருந்தது.சுபநாட்களில்கல்யாணப்பந்தலில்அப்பாவின் பட்டுவேஷ்டிஅவரது மேனியில்அமர்க்களமாய் ஜொலிக்கும்திருபுவனம்பட்டாம்திருமணத்தில் மாமனார் சீராம்அருமையாய் அதைப்பேணுவார்’ஆளழகா துப்படிக்காரா என்பதுபோலசெல்வநிலை அதிகமில்லாத என்னைபட்டுவேஷ்டி பணக்காரனாக்குகிறது’என்று சொல்லி சிரித்துக்கொள்வார்கூட்டங்களில் அப்பாவின் கம்பீரத்தைசட்டென அடையாளம்காட்டும்அப்பாவால் வேஷ்டி அழகாகிறதாவேஷ்டியால்அப்பா அழகாயிருக்கிறாராபட்டிமன்றக்கேள்விகள்பட்டுவேஷ்டியைச்சுற்றியேவந்துகொண்டிருக்கும்ஒருநாளும் அதையார் தொடவும் அனுமதித்ததில்லைபொக்கிஷமாய்ப்பேணிபெட்டிக்குள் பத்திரப்படுத்துவார்சந்தன சோப்பிட்டுவேஷ்டிக்கு நோகாமல் துவைத்துவெய்யில்மறைந்ததும்நிழலில்காயவைத்துநேசமுடன் பாதுகாப்பார்பட்டுவேஷ்டியைபத்துமாதக்குழந்தைபோலத்தான்பெட்டியினின்றும் எடுப்பார்மடித்த இடம் கத்தியின் கூர்மையாய்வாளின்பளபளப்பாய்முப்பதுவருஷமானாலும்அழகாய் ஜொலிக்கும்.நாள்பட இருக்கவேண்டுமெனநான்கு வசம்புத்துண்டங்களைபட்டுவேஷ்டிக்குப்பக்கதில்போட்டிருப்பார்எதிர்பாரா அப்பாவின் மரணத்தில்நிலைகுலைந்து போய்விடவும்பட்டுவேஷ்டியைப்பற்றியெல்லாம்பலநாட்கள் நினைக்கவே இல்லைஅன்றுஅப்பாவின்பெட்டியைத்திறந்தபொழுதுஅதில் அந்த பட்டுவேஷ்டி இல்லை.சின்னக்கவர் ஒன்று தென்படவும்’திறந்துபார்த்தோம்அதில்பட்டுவேஷ்டியைவிலைக்குபோட்ட ரசீதும்இரண்டாயிரம் ரூபாயும் சில்லறையும்‘எனது மரண காரிய செலவுக்கு..’என்ற அப்பாவின் கையெழுத்திடகடிதமும்இருந்தது.
