
கட்சிகள் எல்லாம் ஓட்டுக்காகத் தான் எல்லாம் செய்கின்றன – நாட்டுக்காக இல்லை.
கட்சிகள் தங்கள் வளர்ச்சியில் கண்ணாக இருக்கிறார்கள். நாட்டின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை!
இது காங்கிரஸ் , பி.ஜே.பி முதல் சமீபத்திய ஏ ஏ பி வரை எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும்.
ஆளும் கட்சியின் மசோதாவை முடக்க சென்ற முறை பி ஜே பி செய்ததை இப்போது காங்கிரஸ் செய்கிறது! கூச்சல்! குழப்பம்! ஒத்திவைப்பு!
இன்னொருவர் முன்னாள் நீதிபதி! ‘மகாத்மா காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்டு’ என்கிறார்.கோட்சேக்கு சிலை வைக்க வேண்டும் என்று சிலர் கூக்குரலிடுகின்றனர்.
இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் ‘தென்னகப் பெண்கள் கருப்பாக இருந்தாலும் நல்ல கட்டுடன் இருக்கின்றனர்’ என்று பேரவையில் பேசிவிட்டு நான் என்ன தப்பா சொன்னேனா? என்றும் வினவுகிறார்.
ஆனால் லண்டனில் பேசப்போன பெண்மணியை தேசிய ஆபத்து என்று கூறிப் போக விடாமல் பேச்சு உரிமையைப் பறிக்கிறார்கள்!
ஒரு முதலமைச்சர் கட்சியின் அத்தனை பேரும் அவருக்கு எதிராகத் திரும்பியும் ராஜினாமா செய்ய மறுக்கிறார். இன்னொரு முதலமைச்சர் தீவிரவாதியை சிறையிலிருந்து விடுவிக்கிறார். மற்றொரு அமைச்சரின் உதவியாளர் அவர் தொந்தரவு பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலே சி பி ஐ ஆளும் கட்சியின் இயந்திரமாகச் செயல் படுகிறது!
சாதாரண மனிதனைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை! ( கவலைப் பட்ட ஆர். கே லக்ஷ்மண் அவர்களும் மறைந்து விட்டார்)
இதெற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகள் இடும் கட்டளைகளுக்கு அதிகாரிகள் (Bureaucrats) அடிமைகளாகச் செயல்படுவதனால் தான்.
அந்த அதிகாரி வர்க்கம் திருந்தினால் நாடே திருந்திவிடும்!
செய்வார்களா?
=====================================================
ஆண்டு : 2 மாதம் : 3

Editor and Publisher’s office address:
S.Sundararajan
B-1, Anand Flats,
50 L B Road, Thiruvanmiyur
Chennai 600041
போன்: 9442525191
email : ssrajan_bob@yahoo.com
ஆசிரியர் & பதிப்பாளர் : சுந்தரராஜன்
துணை ஆசிரியர் : விஜயலக்ஷ்மி
இணை ஆசிரியர் :அனுராதா
ஆலோசகர் :அர்ஜூன்
தொழில் நுட்பம் : ஸ்ரீநிவாசன் ராஜா
வரைகலை : அனன்யா
பக்கம் – 26