புத்தகம் :  Stories From Here And There (English)

எழுதியவர்:  Sunil Handa

Published by : Eklavya Education Foundation, Ahmedabad

 பக்கங்கள் : 418

விலை : ரூ. 150

       நான் வெளியூர்களுக்கு பயணம் செய்யும் போதெல்லாம், கையில் ஏதாவது ஒரு புத்தகம் ஒன்றை எடுத்துச் செல்வேன். இது என் நெடுநாளைய பழக்கம். கைபேசி வந்திராத நாட்களிலேயே நான் அருகில் அமர்ந்திருப்பவரிடம் பேச்சுக் கொடுப்பதை விட புத்தகங்களில் மூழ்குவதையே பெரிதும் விரும்பி இருக்கிறேன். முன்பெல்லாம் கனமான புத்தகங்களைத் தூக்கிச் செல்வேன். கடினமான புத்தகங்களைக் கூட பயணங்களில் மனமொன்றிப் படிக்க முடிந்தது. ஆனால், சமீப காலங்களில் நான் படிப்பதற்கு எளிதான புத்தகங்களை மட்டுமே எடுத்துச் செல்கின்றேன். ஆனாலும் கையில் புத்தகம் ஒன்று துணைக்கு வேண்டி இருக்கிறது.

    “ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர் அண்ட் தேர்”  என் பயணங்களுக்கு உற்ற துணையாக இருந்து வருகிறது. பலமுறை படித்திருந்தாலும், திரும்பத் திரும்ப என்னை படிக்கத் தூண்டும் நூல் இது.

   சுனில் ஹண்டா என்ற இந்நூலின் ஆசிரியர் பிட்ஸ் பிலானியில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஐ ஐ எம் அகமதாபாதில் எம்பிஏ படித்திருக்கிறார். இதற்குப் பிறகு படித்த ஐஐஎம்மிலேயே பேராசிரியராக பல வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார். பின்னாளில் ஏகலவ்யா எஜுகேஷன் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி ஒரு ஐசிஎஸ்இ பள்ளியையும் நடத்தி இருக்கிறார்.

   குட்டிக் குட்டி கதைகளால் நிறைந்திருக்கிறது ஹண்டா தொகுத்திருக்கும் இந்த சுவாரஸ்யமான நூல். நூலில் உள்ள கதைகளில் வெகு சிலவற்றையே ஹன்டாவே எழுதி இருக்கிறார். மீதி இருக்கும் கதைகளெல்லாம் அவர் பல நூல்களில் படித்து ரசித்தது. பலரிடமிருந்து பெறப்பட்டவை.

   உதாரணத்திற்கு ஒரு சிறுகதை.

Is your life worth saving ?

   A boy was drowning in a river and he shouted for help.

   A man passing by jumped in the river and saved the boy’s life.

   As the man was leaving, the boy said : “ Thank You”

  The man asked, “For what ?”. The boy replied : “For saving my life”.

  The man looked into the boy’s eyes and said : “Son, make sure when you grow up that your life was worth saving”

    இச்சிறுகதைகளை அவர் தன்னுடைய ஐஐஎம்மில் உடன் படித்த நண்பர்களுடன் அவ்வப்போது ஈமெயிலில் பகிர்ந்து வந்திருக்கிறார். அவர்கள் அனைவருக்கும் இந்தக் கதைகள் மிகவும் பிடித்துப் போய்விடவே, இவற்றைத் தொகுத்து ஒரு நூலாகச் செய்தால் என்ன என்ற எண்ணம் உதித்திருக்கிறது ஹண்டாவுக்கு.

   அப்படிப் பிறந்ததுதான் இந்நூல். எவ்வளவு முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் படித்து மகிழலாம் இந்நூலை.

   தேடிப்பிடித்து நீங்களும் படித்து மகிழுங்களேன் !