சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இரண்டாவது அடுக்கில் உள்ள புத்தக வெளியீடு அரங்கத்தில் 9 ஜூலை 2026 அன்று அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டியின் பரிசு வழங்கும் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழா நாயகரான ராய செல்லப்பா அவர்களும் அவரது அனைத்து குடும்பத்தினரும் ஒருங்கிணைந்து பாங்காகக் கொண்டாடியது பார்வையாளர்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் நிறைவாக இருந்தது.
முதல் பரிசு Rs 5000 , 10 சிறுகதைகளுக்கு
இரண்டாம் பரிசு Rs 2000, 10 சிறுகதைகளுக்கு
மூன்றாம் பரிசு Rs 1000 , 15 சிறுகதைகளுக்கு
ஆகிய மொத்தம் 35 எழுத்தாளர்களுக்கு பரிசு மழையே பொழிந்திருக்கிறார் ராய செல்லப்பா அவர்கள்!
எழுத்தாளர் சார்பாக அவருக்கு நன்றி!
திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் தலைமையுரை அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவை கலந்து கேட்போருக்கு இலக்கிய விருந்தாக அமைந்தது.
சிறப்புரை ஆற்றிய தினமலர் வெங்கடேஷ் அவர்கள் சிறுகதைகளின் இலக்கணங்களைத் தொகுத்து வழங்கினார்.
பரிசு பெற்ற அனைவரையும் துணைவருடன் மேடைக்கு அழைத்து அமரச் செய்து பரிசை வழங்கிய விதம் சிறப்போ சிறப்பு.
இந்த நிகழ்வின் காணொளியை இங்கே காணலாம் :

மிகவும் சரியாக திட்டமிடப்பட்டு, சிறப்பாக நடத்தப்பட்டிருக்கும் விழா!. தன் குடும்பத்தினர் அனைவரையும் இந்த விழாவில் ஈடுபட வைத்த திரு.செல்லப்பா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திருப்பூர் கிருஷ்ணன், வெங்கடேஷ் இருவரின் உரையும் எழுத்தாளர்களுக்கு பல தகவல்களை வழங்கின. எழுத்தாளர் உஷா சுப்பிரமணியம் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு மேடையேற்றியதும், பார்வையாளர்களை பேச வைத்ததும் புதுமை!
LikeLike