————————————————————————————————————————————————-

இம்மாதச் சிறந்த கதை: ஈன்ற பொழுது – எழுதியவர்: யாத்திரி – வாசக சாலை

————————————————————————————————————————————————-

தான் கர்ப்பிணியாக இருந்த போது – தன்னை வதைத்த மாமியார் – நாத்தனார் ஆகியோரைப் பழி வாங்கச் சபதம் ஏற்று – அம்பாள் திருக்கோலம் தாங்கி – முழு விரதமிருக்கும் நோன்புப் பெண்மணியின் உள்ளத்தில் உண்டாகும் ஆனந்த மாற்றம் – அதுதானே ஆன்மீக ஏற்றம்!

இக்கதையே முதல் கதையாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறது.

இத்தோடு போட்டியிட்டு – இதன் தரத்தை நெருங்கிய ஏனைய கதைகள்:

1) கேசவர் – சாளை பஷீர் (வாசகசாலை)
தலைமுடிப் பிரச்சினையை – தெற்கத்திய மண் வாசனையோடும் – இஸ்லாமியச் சூழலோடும் சொல்லப் பட்ட கதை

2) தீ இனிது – பெருமாள் முருகன் – காலச்சுவடு

தன் நிலத்தின் பழங் குப்பைகளைத் தீ வைத்து எரிப்பதற்காகக் கிளம்பும் இரண்டு சிறுவர்களின் யதார்த்தப் பார்வையில் விரியும் கதை

3) ஈடன் ஸ்கூல் – ஆயிஷா நடராஜன் – ஆனந்த விகடன்

முற்றிலும் புதிய களம் – லேபரெட்டரி எலிகளாகப் பலி கொடுக்கப்படும் மாணவச் சிறார் குறித்த அதிர்ச்சிப் பார்வைக் கதை