Music show on Kannadasan’s songs. March 4 evening - MYLAPORE TIMESசுதந்திரச் சுடர்கள் | பாரதியார் நினைவு நாள்: பாரதியின் இலக்கிய வீச்சுDangers of external religiosity and hypocrisy

 

பகவத்கீதை கூறும் ஒரே தீர்ப்பு, இன்று செய்த நல்ல காரியமோ அல்லது தீய செயலோ அதற்குரிய பலாபலனை அனுபவித்தே தீர வேண்டும்.துரோகம் செய்தவருக்கு கடவுளின் கருணை கிடையாது, தப்பிக்கவும் முடியாது.

பிறர் மனதை தெரிந்தே காயப்படுத்துவது, கண்ணீருக்கு காரணமாக இருப்பது, ஏமாற்றுவது போன்ற குற்றச்செயல்கள் மிகப்பெரிய பாவம். கடவுளே நேரடியாக தண்டிப்பார். எனவே, நேர்மை,நல்ல ஒழுக்கம், மரியாதை, கடின உழைப்பு, சேமிப்பு, சுயமாக சிந்தித்து செயல் படல் இப்படித் தான் வாழவேண்டும்.

அதற்கு, ஒருவனிடம், நேர்மை, தன்னம்பிக்கை, துணிவு, இவை இருக்கவேண்டும். தன்னை நல்ல எண்ணங்களால், உயர்த்தி நினைப்பவன், வாழ்வில் முன்னேறுவதுடன், பிறரின் செயல்களைப் பற்றிக் கவலையும் படமாட்டான்.
பகவத் கீதையில் (அத்தியாயம் 6, ஸ்லோக எண் 5) இறைவன் கண்ணன்,

உத்தரேத் ஆத்மநாத்மாநம் நாத்மாநம் அவஸாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந:

என்கிறார். அதாவது

மனிதன் தன் சொந்த மன வலிமையால் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
தன்னைத் தானே ஒருபோதும் தாழ்த்திக் கொள்ளக் கூடாது. மனதை வென்றவனுக்கு அந்த மனமே சிறந்த நண்பன். வெல்லாதவனுக்கு அதுவே எதிரி.

விஷயப்பற்றுதல் உள்ள மனத்தினால் தன்னைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.
எவனால் மனம் வெல்லப்படுகிறதோ அவனுக்கு அம் மனம் நல்ல உறவாகும். மனத்தை வெல்லாதவனுக்கு அதுவே கொடிய விரோதியாகும்.

மந ஏவ மநுஷ்யாணாம் காரணம்,
பந்த மோக்ஷயோ: பந்தாய விஷயா சங்கி
முக்த்யை நிர் விஷயம் மந

என்கிறபடி உலக விஷயங்களில் செல்லும் மனமே நமது உயர்வுக்குப் பகையாகிறது. அவ் விஷயங்களில் பற்று அற்று உள்ள மனம் நமக்கு ஆத்ம நன்மையைச் செய்வதால் அதுவே நமது நெருங்கிய நல் உறவாகும்.

நெஞ்சமே நல்லை நல்லை
உன்னைப் பெற்றால் என் செய்யோம்.
இனியென்ன குறைவினம்!

என்று ஆழ்வார் தம் மனத்தைக் கொண்டாடிப் பாடியது இங்கே நோக்கத்தக்கது.

பாரதி கீதையை மொழிபெயர்த்தபின் கீதை முன்னுரை என்ற கட்டுரையில் கீதை குறித்த தனது அணுகுமுறை என்ன என்று விளக்கினார். இறைவன் எங்கும் இருக்கிறான் , எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தல் வேண்டும் என்பதே அவன் கீதையில் கண்ட உண்மை.இறுதியாக ‘கண்ணன் பாட்டிலும்’, ‘பாஞ்சாலி சபதத்திலும்’ பல இடங்களில் பகவத் கீதையைக் காண்கிறோம். அதற்கு, மனதையே உதாரணம் காட்டுகிறான்.
மனதின் உள்ளே ஏன் இருள் என்ற கேள்விக்கு, 75 சதவிகிதம் ஒளியை 25 சதவிகித இருள் மறைக்கிறது என்கிறான். வானம் மற்றும் பூமியை இணைப்பதே ஒளி என்றும் கூறுகிறான்.

ஒரு மனிதனுக்கு, பாதிக்குமேல் பிர்சினைகள் வருவதற்குக் காரணம் மனம். அதாவது, Physical phenomenon என்பதைவிட, Mental phenomenon என்பதிலேயே வாழ்வை நடத்துகிறான் என்பார் சுவாமி சின்மயனந்தா அவர்கள்.
ஒருவனுக்கு அடிப்படையாகப் பெற வேண்டிய குணநலன்கள் உடல் வலிமை, கல்வித்தரம் ஆகியவை இருந்தாலும் அவனது நல்லெண்ணமும், சமுதாய உணர்வும் அவனைப்
புகழ்படச் செய்கின்றன . எனவே தான் பாரதி அதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றான் .
பாரதியின் புதிய ஆத்திசூடியில், ஐம்பொறி ஆட்சி கொள் என்பதைக் கூறும்போது, மனமானது, மெய் (தொடு உணர்வு), வாய் (சுவை), கண் (பார்வை), மூக்கு (வாசனை), செவி (கேட்டல்) ஆகிய ஐந்து புலன்களால் ஏற்படும் ஆசைகளை அடக்கி, கட்டுக்குள் வைத்து, அவற்றின் வழிகாட்டுதலில் செயல்படாமல், தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். ஐந்து விதமான உணர்வுகளுக்கு அடிமையானவர்கள் வாழ்வில் துன்பங்களை அடைகிறார்கள் என்பதே நிஜம்.
அப்படி ஒரு உயர்ந்த நல்ல மனம் பற்றி, நமது இலக்கியங்களில் தொடர்ந்து பலர் பாடி இருக்கிறார்கள்.
வள்ளுவன், திருக்குறளில், மனத்தைப் பற்றிக் கூறும்போது,

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
அதாவது,
மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே என்று எளிதாக, இயல்பான உண்மை நெறியை குறள் கூறுகிறது.

தாயுமானவர்,

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே!”
நெஞ்சகமே கோயில் ; நினைவே சுகந்தம்; அன்பே
மஞ்சனநீர் பூசை கொள்ள வாராய் ! பராபரமே!

அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிவிட்டு விட்டால்
இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே !
தாயுமானப் பெம்மான் தன்அடியை ஏத்துதற்குக்
காயும் வினைஅகலும் காண்.

அன்பெனும் மனமே அனைத்திற்கும் அடிப்படை என்கிறார்.

கவியரசு கண்ணதாசன் பல்வேறு பாடல்களில் மனம் பற்றிப் பாடியுள்ளார். இந்தப் பாடலில், ஒருவனின் மனமும் குணமுமே வாழ்விற்கு அமைதி மற்றும் மகிழ்ச்சி தரும்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது
வள்ளல் ஆகலாம்

வாழைப் போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல
ஒளியை வீசலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம்
மலர்கள் ஆகலாம்

யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்
மனம் .மனம் அது கோவில் ஆகலாம்

கவிஞர் வாலி கூறும்போது,

பொருள் கொண்ட பேர்கள்
மனம் கொண்டதில்லை
தரும் கைகள் தேடி
பொருள் வந்ததில்லை

மனம் என்ற கோயில்
திறக்கின்ற நேரம்
அழைக்காமல் அங்கே
தெய்வம் வந்து சேரும்

என்கிறார். மனம் உண்மையாக திறக்கப்படும் (எந்தப் பாசாங்கும் இல்லாமல் உண்மையான திறந்த நிலை) நேரத்தில், ஆழ்ந்த உண்மை, இறை உணர்வு, வெளிச்சம் நம்முள் தோன்றிவிடுகிறது.அதாவது, இறை உணர்வு வெளி சடங்குகளால் கிடைப்பதல்ல; மனம் திறக்கும் நேரத்தில்தான் அது நம்முள் தோன்றும் என்று கூறுவது மிக அழகான சிந்தனை.
ஆகையால், எந்த நிலையையும் நிரந்தரமென்று நினைக்காமல், மனதைத் திறந்து வைத்து இறைவனின் அருளை பெற்று வாழ்வதே உண்மையான வழியாகும்.

அதற்கு ஒருவன் சொந்த தர்மத்தையே கடைப்பிடிக்க வேண்டும் என்பதைக் கீதையில், கண்ணன், அத்தியாயம் 18 – ஸ்லோகம் 47ல்,

ஶ்ரேயான்ஸ்வத4ர்மோ விகு3ண: ப1ரத4ர்மோத்1ஸ்வனுஷ்டி2தா1த்1 ।

ஸ்வபா4வநியத1ம் க1ர்ம கு1ர்வன்னாப்1னோதி1 கி1ல்பி3ஷம்

நாம் நமது ஸ்வ-தர்மத்தை (பரிந்துரைக்கப்பட்ட தொழில் கடமைகளை) செய்யும்போது, இரண்டு மடங்கு நன்மை கிடைக்கும். பறவைக்கு பறப்பது போலவும், மீனுக்கு நீச்சல் அடிப்பது போலவும் நமது ஆளுமைக்கு அது இயற்கையாகவே இருக்கிறது. இரண்டாவதாக, அது மனதிற்கு வசதியாக இருப்பதால், அது கிட்டத்தட்ட தன்னிச்சையாக செய்யப்படுகிறது, மேலும் உணர்வு பக்தியில் ஈடுபடுவதற்கு சுதந்திரமாகிறது.

மறுபுறம், நாம் நமது கடமைகளைச் சுமையாகக் கருதி விட்டுவிட்டு, நமது இயல்புக்குப் பொருந்தாத பிறருடைய கடமைகளைச் செய்தால், நம் ஆளுமையின் உள்ளார்ந்த விருப்பத்திற்கு எதிராகப் போராடுகிறோம்.

அற்புதமான இறைவனின் இந்தக் கூற்று பலவித பிரச்சினைகள் நிறைந்த உலக வாழ்க்கையில் ஒருவன் எப்படி நடக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறது. இறைவனை நினைத்துக் கொண்டு இருந்தால், பிரச்னைகளோடு போராடும் மனத் துணிவையும் நம்பிக்கையையும் தருவான் என்பதே வாழ்வின் யதார்த்தம்.