நன்றி: திண்ணை வார இதழ் – 22.06.26 

https://puthu.thinnai.com/2026/06/22/%e0%ae%ae%e0%af%80-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88-hypertextual-literature-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%af%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d/

மீ உரை Hypertextual Literature டிஜிட்டல் யுகத்தின் புதிய இலக்கியப் பரிமாணம்

 ஏ.நஸ்புள்ளாஹ்  என்ற ஆசிரியர் திண்ணை இதழில் புதிய இலக்கியப்  பரிமாணத்தைப் பற்றிக் கூறியிருக்கிறார் . அதுதான்  ‘மீ உரை’ வடிவம்.  

“மீ உரை  ஒரு குறிப்பிட்ட உரையிலிருந்து வேறொரு உரைக்கோ அல்லது தகவலுக்கோ வாசகரை அழைத்துச் செல்லும் இணைப்புகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பாகும். காகிதப் புத்தகத்தில் நாம் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்வது போலன்றி, மீ உரையில் வாசகன் தனது விருப்பப்படி உரையின் போக்கைத் தீர்மானிக்க முடியும். ஒரு சொல்லையோ அல்லது வாக்கியத்தையோ சொடுக்கும்போது, அது வாசகனை ஒரு புதிய கதைக்களத்திற்கோ, விளக்கத்திற்கோ அல்லது வேறொரு கவிதைக்கோ அழைத்துச் செல்லும். இது ஒரு நேர்க்கோட்டுப் பாதையை விட, ஒரு விரிந்து பரந்த வலைப்பின்னல் போன்றது.

வாசகன் கதையின் தொடக்கத்திலிருந்து முடிக்கே செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும் சுதந்திரம் வாசகருக்கு வழங்கப்படுகிறது.

​வாசகனின் பங்கேற்புவாசகர் ஒரு மௌனமான பார்வையாளர் இல்லை அவர் கதையின் போக்கை வடிவமைக்கும் இணை ஆசிரியர் ஆக மாறுகிறார். ஒரு கதையில் ஏதேனும் ஒரு முடிவை எடுப்பதன் மூலம் கதையின் பாதையை மாற்றும் வாய்ப்பு அவருக்கு உண்டு.

கவிஞர்கள் ஒரு கவிதையை எழுதும்போதே, அது இணையத்தில் வாசகனின் மனநிலைக்கேற்ப விரிவடையும் வகையில் வடிவமைக்க முடியும். உதாரணமாக, ஒரு இயற்கை கவிதை வாசிக்கும்போது, வாசகன் சொடுக்கும் கிளையில் அந்த இயற்கையின் ஒலியையும், படங்களையும் இணைக்க முடியும்.

இந்த வடிவத்தை முன்னெடுக்கும் கவிதைச் சொல்லிகள், கவிதையைத் தேக்கநிலையிலிருந்து அசைவியக்கத்திற்கு மாற்றுகிறார்கள். இவர்கள் கவிதையை ஒரு முடிவுற்ற படைப்பாக பார்க்காமல், வாசகனின் தேடலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு உயிர் அமைப்பாக கருதுகின்றனர்.

கவிதை  இனி வாசிக்கப்படுவது மட்டுமல்ல அது வாசகனால் கட்டமைக்கப்படும், உணரப்படும், அனுபவிக்கப்படும் ஒரு மாபெரும் அனுபவம்.

மைக்கேல் ஜாய்ஸ் (Michael Joyce) எழுதிய “ஆஃப்டர்நூன், எ ஸ்டோரி” (afternoon, a story) என்பது 1987-ல் உருவாக்கப்பட்டு 1990-ல் வெளியிடப்பட்ட உலகின் முதல் மற்றும் மிக முக்கியமான ஹைப்பர்டெக்ஸ்ட் நாவல் (Hypertext Fiction) ஆகும்.

இது பாரம்பரியமான வரிசை முறைக்கு மாறாக, வாசகர்கள் கணினித் திரையில் இணைப்புகளைச் (links) சுட்டிக் கிளிக் செய்து படிக்கும் மாறுபட்ட அனுபவத்தைத் தந்தது.

 இது நேர்கோட்டில் செல்லாமல், ஒவ்வொரு முறையும் வாசகர் தேர்வு செய்யும் இணைப்புகளுக்கு ஏற்ப வெவ்வேறு கதைக் கிளைகளாக விரியும்.தொழில்நுட்பம்: இது Storyspace என்ற ஹைப்பர்டெக்ஸ்ட் மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

பல கல்வி நிறுவனங்களில் பின்நவீனத்துவ இலக்கியத்தின் ஒரு முக்கியப் பாடமாக இது சேர்க்கப்பட்டுள்ளது.

மீ உரை கவிதை பற்றிய ஒரு காணொளி 

 

இதற்கு ஒரு முயற்சியாக  நாமும் கூகிள் ai மூலமாக  பாரதியார் பாடல் ஒன்றை உருவமைத்தோம். அது முழுதும் சரியாக வரவில்லை என்றாலும் இப்படி  மீ உரை யாக நாமும் செய்யலாம் என்பதற்கு முதல்படியாக இருக்கிறது. தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இதனை மேலும் சிறப்பாகக் கொண்டுவரலாம்.  “

பாரதியாரின் புதிய கோணங்கியை மீ உரையில் பார்க்க ( ஆடியோ இல்லை ) கீழே கொடுத்திருக்கும் லிங்க்கை சொடுக்கவும். 

 

https://share.google/aimode/t3rkZv5zBsbctd6od