குவிகம் மின்னிதழ் ஒரு பெரிய உரு மாற்றத்திற்கு ( METAMORPHOSIS) தயாராக உள்ளது.

அதாவது மாதம் ஒரு இதழாக வந்துகொண்டிருக்கும் குவிகம் மின்னிதழ்  இனி மாதம் இரு முறையாக வரப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து  குவிகம்  கதை முற்றம்  என்ற பகுதி ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி வரும்.  அதில் சிறுகதைகள் மட்டும் இருக்கும். மற்ற கட்டுரைகளோ, கவிதைகளோ, தொடர்களோ  இருக்காது. அவை வழக்கம்போல  15 ஆம் தேதி    குவிகம் மின்னிதழில் இடம் பெறும். 

இந்தக் குவிகம்  கதை முற்றம்  பகுதியில் ஒரு வரிக் கதை,  நாலு வரிக் கதை, ஒரு பக்க கதை,  4/5 பக்கங்களில் வரும் முழுக் கதை, 10-15 பக்கங்களில் வரும் நெடுங்கதை வெளிவரும்.

அவ்வப்போது சிறுகதைப் போட்டிகள் நடைபெறும்.

பரிசு பெற்ற கதைகள் முத்திரைக் கதைகளாக வெளிவரும்.

குவிகம் சிவசங்கரி தேர்வு, அன்னை ஸ்வர்ணாம்பாள் போட்டி, மற்ற சிறுகதைப் போட்டிகளில்  பரிசு பெற்ற கதைகள்  அனுமதியுடன் வெளியிடப்படும்.

தி ஜானகிராமன், கு அழகிரிசாமி, கி ராஜநாராயணன் ,ஜெயகாந்தன், சுஜாதா,  இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி, சூடாமணி , மௌனி போன்ற பிரபல கதாசிரியர்களின் கதைகள்  பொக்கிஷங்கள் என்ற தலைப்பில் வெளிவரும்.

உலகின் சிறந்த கதைகளை மொழிபெயர்த்துத் தரப்படும். 

மேலும் பிரபலமான கதைகளின் சுருக்கமும் வெளிவரும். 

விஞ்ஞானக் கதைகள், சரித்திரக்  கதைகள்,  பெண்ணியக் கதைகள், மாய யதார்த்தக் கதைகள், கட்டுடைத்த கதைகள், கவிதைக்  கதைகள், நகைச்சுவைக் கதைகள், திகில் கதைகள், புராணக் கதைகள், துப்பறியும் கதைகள், சித்திரக் கதைகள் , சிறுவர் கதைகள்  போன்ற பல வகையான கதைகளை நீங்கள் இங்கே எதிர்பார்க்கலாம். 

தொடர் கதைகள் வராது.

 மாத இதழ்களில் இப்படி சிறுகதைகளுக்கென்ற அர்ப்பணித்துக் கொண்ட  மின்னிதழ்   வேறு எதுவும் இல்லை என்றே  தோன்றுகிறது.

இந்தக் குவிகம் கதை முற்றம்  ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதியன்று வெளிவரும்.

இதற்கு இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு. சில மாதங்களாக குவிகத்திற்கு நிறைய சிறுகதைகள் வருகின்றன. அவற்றுள் பெரும்பாலான கதைகள் மிகச் சிறப்பாகவும் இருக்கின்றன. அதனால் சில மாதங்களில் 5/6 சிறு கதைகளையும் பிரசுரித்திருக்கிறோம்.

குவிகம் மின்னிதழில் 30 க்கும் மேற்பட்ட  மின் பக்கங்கள் ( ARTICLES)  பல மாதங்களில் வந்துள்ளன. அது படிப்பவருக்கு சற்று சோர்வைக் கொடுக்கக் கூடும்.

அதுமட்டுமல்லாமல்,  ஆடியோ , வீடியோ, குறும்படம், கார்ட்டூன், விமர்சனம், துணுக்குகள்  போன்றவற்றைப் பதிவிட முடியாமல் தவித்தோம்.

அவற்றையெல்லாம் சீராக்க இந்த குவிகம் மாதம் இருமுறை உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். 

புதிதாக சிறுகதை எழுதும் இளைஞர்களுக்கு இது ஒரு  சிறந்த கதை மேடையாகத் திகழும். 

வாருங்கள் புதிய சரித்திரம் படைப்போம். 

குவிகம் மின்னிதழ், குவிகம் கதை முற்றம் இரண்டிற்கும் ஒரே லிங்க் தான்.

https://kuvikam.com