குவிகம் திருக்குறள் போட்டி

அறிவுடைமை | திருக்குறள் | Athikaram 43 | Thirukkural 421-430 | Arivudamai

 

திருக்குறளில் 43 வது அதிகாரம்  “அறிவுடைமை”  .

அந்த “அறிவுடைமை”   என்ற அதிகாரத்தின் தலைப்பையே கதைத் தலைப்பாக வைத்து வித்தியாசமான கதைக்களம் கொண்ட கதைகள் வரவேற்கப்படுகின்றன.

  1. அந்தக் கதையில் “அறிவுடைமை”  . என்ற அதிகாரத்தில் வரும் 10 குறட்பாக்களின் அர்த்தம் / பொருள் / கருத்து கதையோடு இயைந்து வரவேண்டும். அது கதா பாத்திரங்கள்  மூலம் உரையாடலாகவோ அல்லது கதை வர்ணணையாகவோ வரலாம்.

உதாரணமாக,

” நல்லா தெரிஞ்சுக்க! உன்கிட்டே எவ்வளவு சொத்து இருந்தாலும்  அதால உனக்கு பெருமையில்லே ! அதைப் பத்தி எனக்கும் கவலையில்லை ! குமரன் கிட்டே சல்லிக் காசு கிடையாது. ஆனா அறிவு இருக்கு! அவன்  உன்னை விட பல மடங்கு உசந்தவன். (10). அதனால அவனைத்தான் கட்டிப்பேன்!” வள்ளி தீர்மானமாகச் சொன்னாள். 

இது 10 வது  குறளின் கருத்து.

(அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர். 

பொருள்: அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.)

 

  1. கதையில் திருக்குறள் / திருவள்ளுவர் பற்றி நேரடியாகக் கூறக்கூடாது.
  2. சமூகக் கதைகள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
  3. 10 குறட்பாக்களின் பொருளும் கதைப் போக்கில் வரவேண்டும். ஆனால் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள வரிசையில் வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
  4. குறளின் பொருள் வரும் இடத்தில் குறளின் எண்ணைக் குறிப்பிடவேண்டும் (1-10)
  5. குறளின் கருத்து, உரையாடலில், வர்ணணையில், கதை சொல்லியின் எண்ணத்தில் வரலாம்
  6. குறட்பாக்கள் கதையில் வரக் கூடாது.
  7. 800 வார்த்தைகளில் கதை எழுதப்படவேண்டும்.
  8. வழக்கமான கதையாக இல்லாமல் புதிய சிந்தனை கொண்ட கதையாக இருத்தல் அவசியம்.
  9. கதையை editor@kuvikam.com மின்னஞ்சலுக்கு யூனிகோடில் WORD DOCUMENT இல் அனுப்பவேண்டும்.
  10. கதாசிரியர் பெயர், புனைபெயர், மின்னஞ்சல், கைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிடவேண்டும்.
  11. ஒருவர் ஒரு கதையை மட்டும் அனுப்பவேண்டும்.
  12. கதை வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 31 ஆகஸ்ட் 2026

நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு  சிறந்த கதைக்கு 1000 ரூபாய் பரிசு!

இது ஒரு சாம்பிள் போட்டிதான் .

இதன் வெற்றியின்  அடிப்படையில் 133 அதிகாரங்களுக்கும் போட்டி பின்னர் நடைபெறும்.