ஹெமிங்க்வே  எழுதிய உலக பிரசித்தி பெற்ற ஆறு  வார்த்தை கதை! மிகச் சிறந்த சின்னஞ் சிறுகதை   (சிசிறு கதை) 

” விற்பனைக்கு: குழந்தையின் செருப்பு – ஒருமுறை கூட அணியவில்லை.”

 

குழந்தை பிறக்குமுன் வாங்கி வைத்த செருப்பு – குழந்தையின் மரணம்  ? – செருப்பை விற்கும் அவலம் ? –

ஆறு வார்த்தைகளில் ஒரு கண்ணீர் கதை!

 

 இன்னொரு திகில் சிசிறு   கதை – பிரெடெரிக் பிரௌன் எழுதியது:

 தலைப்பு : சத்தம்

“உலகத்தின் கடைசி மனிதன் தன் அறையில் தனியே அமர்ந்திருந்தான். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது…!”

 

நம்ம பாரதியார் கூட இது மாதிரி சிசிறு கதை எழுதியிருக்கிறார் ( அவர் தொடாத விஷயமே இல்லை) 

கடவுள் கேட்டார்  – “பக்தா ! இது தான் பூலோகமா?”

 

இந்தப் பாணியில் நாமும் எழுதுவோமே என்று யோசித்ததின் விளைவு:

 

  • விற்பதற்கு குழந்தை வந்தது
  •  பால் கசந்தது – பக்கத்தில் பாட்டில் !
  •  கத்தியால் குத்தியவன் துடித்தான் – துடித்த உடல் நின்றது!
  •  பசிக்கு விலை உடல் என்றாள்.
  •  அடுத்த  தடவை என்னை கனவில் தான் காண்பாள்!
  •  பால் பொங்கியது- அணைத்தேன்!
  •  நாணத்தோடு நின்றேன்- வரையத் தொடங்கினான்!
  •  மனதில் அவளைப் பூட்டிவிட்டு சாவியைத் தொலைத்து விட்டேன்!
  •  பிறந்த பெண் குழந்தை மரணம் . பெற்றோர் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!
  •  திருவிழாவில் நான் தொலையவில்லை – தொலைத்தார்கள்!
  • ” என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் ..! ”  போஸ்ட் மார்ட்டம் செய்ய வந்த டாக்டர் திணறினார்!