சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து  குவிகம்  கதை முற்றம்  என்ற பகுதி ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி வரும்.  

அதில் சிறுகதைகள் மட்டும் இருக்கும்.

இந்தக் குவிகம்  கதை முற்றம்  பகுதியில் ஒரு வரிக் கதை,  நாலு வரிக் கதை, ஒரு பக்க கதை,  4/5 பக்கங்களில் வரும் முழுக் கதை, 10-15 பக்கங்களில் வரும் நெடுங்கதை வெளிவரும்.

அவ்வப்போது சிறுகதைப் போட்டிகள் நடைபெறும்.

பரிசு பெற்ற கதைகள் முத்திரைக் கதைகளாக வெளிவரும்.

குவிகம் சிவசங்கரி தேர்வு, அன்னை ஸ்வர்ணாம்பாள் போட்டி, மற்ற சிறுகதைப் போட்டிகளில்  பரிசு பெற்ற கதைகள்  அனுமதியுடன் வெளியிடப்படும்.

 பிரபல கதாசிரியர்களின் கதைகள்  பொக்கிஷங்கள் என்ற தலைப்பில் வெளிவரும்.

உலகின் சிறந்த கதைகளை மொழிபெயர்த்துத் தரப்படும். 

மேலும் பிரபலமான சிறு கதைகளின் சுருக்கமும் வெளிவரும். 

விஞ்ஞானக் கதைகள், சரித்திரக்  கதைகள்,  பெண்ணியக் கதைகள், மாய யதார்த்தக் கதைகள், கட்டுடைத்த கதைகள், கவிதைக்  கதைகள், நகைச்சுவைக் கதைகள், திகில் கதைகள், புராணக் கதைகள், துப்பறியும் கதைகள், சித்திரக் கதைகள் , சிறுவர் கதைகள்  போன்ற பல வகையான கதைகளை நீங்கள் இங்கே எதிர்பார்க்கலாம். 

தொடர் கதைகள் வராது.

 மாத இதழ்களில் இப்படி சிறுகதைகளுக்கென்ற அர்ப்பணித்துக் கொண்ட  மின்னிதழ்   வேறு எதுவும் இல்லை என்றே  தோன்றுகிறது.

இந்தக் குவிகம் கதை முற்றம்  ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதியன்று வெளிவரும்.

குவிகம் கதை முற்றத்திற்குக் கதை அனுப்புபவர்கள்  தங்கள் சிறுகதைகளை editor@kuvikam.com  என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.  மின்னஞ்சல் SUBJECT இல் ‘குவிகம் கதை முற்றம் ‘  என்பதை மறக்காமல் தெரிவிக்கவும்.

கதைகள் பிரசுரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதா இல்லையா என்ற  தகவல் ஒரு மாதத்தில் தெரிவிக்கப்படும்.  

கதைகள் 800  வார்த்தைகளுக்குள் இருக்கவேண்டும்.  

வித்தியாசமான கதைகளையே  எதிர்பார்க்கிறோம். 

அதன் முதல் இதழ் உங்கள் கண்களில் இப்போது பவனி வருகிறது.