கண்ணா கருமை நிறக் கண்ணா – சௌரிராஜன்

Watch Naanum Oru Penn | Prime Video

இன்று நான் எடுத்துக்கொண்டுள்ள பாடல் *நானும் ஒரு பெண்* என்ற படத்தில் வரும் *கண்ணா கருமை நிறக் கண்ணா* *உன்னை காணாத கண்ணில்லையே* .

இந்தப்பாடலை அறியாத, பாடலைக் கேட்டு நெக்குருகாத ரசிகர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.

கவிஞர்  கண்ணதாசன் வந்தார், கதை, சூழல் கேட்டார், கண்ணனை நினைந்தார், காவியம் புனைந்தார். As they say, rest is history.
காலத்தால் அழியாத பாடல் உருவாகிவிட்டது.

இதோ *பல்லவி* :

*கண்ணா கருமை நிறக் கண்ணா* –

*உன்னை காணாத கண்ணில்லையே*

*உன்னை மறுப்பாரில்லை கண்டு* *வெறுப்பாரில்லை* –

*என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை*

 

*முதல் சரணம்* :

 

*மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா*

*நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா*

*இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா – நல்ல*

*இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா*

“இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா” என்ற வரி வரும்பொழுது ஒரு கோழி தன் குஞ்சுகளுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும். Only Birds of the same feather flock together என்பது தெரிந்தும் , என்னை இவர்களுடன் சேர்த்து விட்டாயே, இது நியாயமா என்று கண்ணனிடம் கேட்கிறாள். பிறகு, “நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா” என்று உரிமையுடன் சாடுகிறாள். உனக்கு உவப்பான தோட்டத்தில் உனக்கு மட்டும் நல்ல இடமாக நீ தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டாய். ( நல்ல இடமாக என்னை சேர்க்காமல்). நீ சிலைதானே, என் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய் என்று ஆற்றாமையை வெளிப் படுத்துகிறாள்.

*இரண்டாவது சரணம்* :

 

*பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா – அதில்*

*பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா*

*கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா – எந்தக்*

*கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா*

எனக்கு, பொன் போன்ற மனதை தந்தாய், பூப் போன்ற நினைவையும் ( மெல்லிய உணர்வுகளையும்) தந்தாய். ஆனால் பிறர் கண்களுக்கு என் மனமும், குணமும் தெரியாமல் செய்து, என் நிறம் மட்டுமே தெரியும்படி செய்து விட்டாயே. நியாயமா? யாரிடமாவது பட்ட கடனை அடைக்க வேறு வழி இல்லாமல் என்னை இப்படி படைத்தாயா என்று குமுறுகிறாள்.

ஒரு பெண்ணின் உணர்வுகளை ஓர் ஆண் கவிஞரால் எப்படி இவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்த முடிகிறது என்று கேட்டால் அதற்கு ஒரே பதில்தான் : அதுதான் கண்ணதாசன்.

இந்த பாடல் வெளிவந்தபோது, கருப்பாக பிறந்து அதனால் வேதனைப்பட்ட ஏராளமான பெண்களின் ஒட்டு மொத்த குரலாக, உள்ளக் குமுறலாக அது ஒலித்தது என்றால் அது மிகையில்லை. அதுவே பாடலின் வெற்றி.

பாடல் வெளிப்படுத்தும் சோகத்தை மனதில் கொண்டால், இதை *இனிய* பாடல் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. *இதயத்தை தொட்ட* பாடல் என்பதே சரி.

Naanum oru Penn] Kanna karumai nira kanna - Lyrical Delights
(*கருமை நிறக் கண்ணா*  பாடலைக் கேட்க  கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்) 
( இப்போது   சௌரிராஜன் உங்களை மேலும்  ஒரு சுவாரசியமான தளத்திற்கு அழைத்துப் போகிறார். )
Himavad Gopalaswamy Temple | Bandipur National Forest | Himavad Golapalaswamy Hill
ஆம், கண்ணனின் நிறம் என்ன, நீலமா, பச்சையா, கருப்பா?*நீல* மேக ஸ்யாமளன் என்கிறோம்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார்,

*பச்சைமா மலைபோல் மேனி*

*பவளவாய் கமலச் செங்கண்*

என்கிறார். அதையே கண்ணதாசன், ‘திருமால் பெருமை’ படத்தில் ‘மலர்களிலே பல நிறம் கண்டேன்’ என்ற பாடலில்

*பச்சை நிறம் அவன் திருமேனி*

*பவள நிறம் அவன் செவ்விதழே*

என்று பாடுகிறார்.

அதே ஆழ்வார் வேறொரு பாசுரத்தில் *காரொளி* வண்ணனே, கண்ணனே கதறுகின்றேனே…. என்கிறார். ( காரொளி வண்ணன் = கருமேகத்தை ஒத்த மேனி நிறமுடையவன் ).

கவி மரபு என்று எடுத்துக்கொண்டால் கவிகள் பச்சை, நீலம், கருப்பு ஆகிய வண்ணங்களில் பேதம் பார்ப்பதில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

( இந்த கவி மரபைப்பற்றி நான் சொல்லவில்லை, ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் கூறி இருக்கிறார்கள் ).
கருநீலம், கரும்பச்சை, கருப்பு என்பதெல்லாம் கலந்து சொல்வது கவிகளின் மரபு.

எது எப்படி இருப்பினும் நம் கண்ணதாசன் , ஆண்டாளின் பரம பக்தர். தனது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ புத்தகத்தில் ஆண்டாளுக்கு என தனி ஒரு அத்தியாயமே ஒதுக்கி இருக்கிறார். கண்ணனின் மேனி வண்ணத்தை பற்றி ஆண்டாள் என்ன சொல்கிறார்?

திருப்பாவையில், ” *கார்* மேனி செங்கண் கதிர்மதியம் பொல் முகத்தான்” என்றும் ,

நாச்சியார் திருமொழியில் ” கண்ணன் என்னும் *கருந்தெய்வம்* காட்சி பழகிக் கிடப்பேனை …” என்றும் கூறுகிறார்.

ஆண்டாள் வழி கவிஞர் வழி.

“கண்ணா *கருமைநிற* கண்ணா “.

அதே மாதிரி, திரைப்பாடலில், என் நிலைக்கு நீதானே காரணம் என்று சொல்லி , நீ மட்டும் நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்து இருக்கிறாய் என்று கண்ணனை குற்றம் சாட்டும் தொனியில் பாடுவது கூட ஆண்டாளின் தாக்கம்தான்.

நாச்சியார் திருமொழியில் பெருமாளை பற்றி கூறும்போது *பெண்ணின் வருத்தமறியாத பெருமான்* என்கிறார் ஆண்டாள்.

*கண்ண னென்னும் கருந்தெய்வம்*
*காட்சி பழகிக் கிடப்பேனை*

*புண்ணில் புளிப்பெய் தாற்போலப்*
*புறநின் றழகு பேசாதே*

*பெண்ணின் வருத்த மறியாத*
*பெருமா னரையில் பீதக*

*வண்ண ஆடை கொண்டு என்னை*
*வாட்டம் தணிய வீசீரே*

பொருள் :

கண்ணன் என்னும் கருந் தெய்வத்தையே எண்ணி உருகி ,அவனோடு வாழ்வதாக கற்பனை கண்டு அந்தக் காட்சியே பழகிக் கிடப்பவளை , அவனை அடைய முடியவில்லையே என்று ஏற்கனவே மனம் நொந்து புண்ணாக இருக்க அதை மேலும் புண்ணாக்கும் விதமாக பழிப்பு காட்டாதீர்கள். (புண்ணில் புளிப்பு எய்தது போல – ஆஹா ).

இங்கு இப்படி ஒரு பெண் வேதனையில் உழல்கிறாள் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாத, என் வருத்தம் அறியாத அந்தப் பெருமானின் இடையில் உடுத்திய மஞ்சள் வண்ணப் பட்டாடையை என் மீது கொண்டு வந்து வீசுங்கள்.. அதனை நுகர்ந்து என் மன வாட்டத்தைச் சற்றே தணித்துக் கொள்கிறேன்.நான் என்ன செய்ய? கண்ணதாசன் பாடல் எடுத்தால், திருக்குறள், கம்பராமாயணம், திவ்யபிரபந்தம் என்று மனம் தாவுகிறது.
சரி கம்பராமாயணம், பாரதி பாடல், ஆழ்வார் பாசுரம் என்று எடுத்தால் , கண்ணதாசன் ஞாபகம் வருகிறது. மனதை கட்டுப்படுத்த தெரியவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள்.

குவிகம் இலக்கியவாசல்

 

இலக்கிய சிந்தனையின்   நிகழ்வும்  குவிகம்  இலக்கிய வாசலின்   நிகழ்வும்  இணைந்து  வருகிற ஆகஸ்ட் 26, சனிக்கிழமை ஸ்ரீனிவாச காந்தி நிலையம் , அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டையில் நடைபெற இருக்கின்றன.

இலக்கிய சிந்தனையின் சார்பில் திரு தேவராஜ சுவாமிகள்                     ‘ ஸ்ரீ ராமானுஜர்’ என்ற தலைப்பில் பேசுகிறார் !

குவிகம் இலக்கியாவாசல் சார்பாக திரு சதுர்புஜன், திரு சிந்தாமணி சுந்தரராமன் , டாக்டர் பாஸ்கரன் ஆகிய மூவரும் ,  “எனக்குப் பிடித்த கதை” என்ற தலைப்பில் பேச இருக்கின்றார்கள்.

இத்துடன்  குவிகம் பதிப்பகத்தின் இரண்டாவது பதிப்பாக சுரேஷ் ராஜகோபாலின்  ” நான் என்னைத் தேடுகிறேன்”  என்ற கவிதைத் தொகுப்பு வெளிவருகிறது.

அதன் வெளியீட்டு விழாவும்  நடைபெறும் .

 

 

அனைவரும் வருக!

  குவிகம் இலக்கியவாசலின் 28வது நிகழ்வாக கண்ணன் அவர்கள் ” “தமிழில்  விஞ்ஞான  எழுத்துக்கள் ” என்ற தலைப்பில் ஜூலை 29ஆம் தேதி பேசினார்.

அதே சமயம் இலக்கிய சிந்தனையின் சார்பில் புதுவை ராமசாமி அவர்கள் “கவிக்கோ அப்துல் ரஹ்மான்’பற்றிப்பேசினார்.

 

குவிகம் இலக்கியவாசல் 25

 

(நன்றி: சு.ரவி)

சென்ற மார்ச் மாதம் 24ஆம் தேதி நம்மை விட்டுப் பிரிந்த அசோகமித்திரன் அவர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில்

“அசோகமித்திரன் – என் பார்வையில் ” என்ற தலைப்பில்     டாக்டர் பாஸ்கர் அவர்கள் உரை நிகழ்த்துவார்கள் !

இடம்:  

ஸ்ரீனிவாச காந்தி நிலையம் , அம்புஜம்மாள் தெரு,  ஆழ்வார்பேட்டை 

நேரம் :

மாலை 7.00 மணி , சனிக்கிழமை ஏப்ரல் 29, 2017

அனைவரும் வருக ! 

 

 

 

 

இலக்கியவாசல் 20

குவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வாக

“எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் – த. ஜெயகாந்தன்”

ஆவணப்படமும் அதன் இயக்குனர் திரு ரவி சுப்ரமணியனுடன் உரையாடலும் இடம் பெறுகின்றன
கவிதை மற்றும் கதை வாசிப்பு – வழக்கம்போல்

நாள் : நவம்பர்  19,  2016
சனிக்கிழமை
நேரம்:  மாலை 6.00 மணி
விவேகானந்தா அரங்கம் ,
PS உயர்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மடம் சாலை , மயிலை, சென்னை 600004 

அனைவரும் வருக

வரப்போகும் ஆகஸ்ட் மாத இலக்கியவாசல்

இன்றைய இலக்கிய யுகத்தின் மாபெரும் எழுத்தாளர்/பேச்சாளர் எஸ் ரா என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் குவிகம்  இலக்கியவாசலுக்காக கே கே நகர் டிஸ்கவரி பேலஸ் அரங்கில் ஆகஸ்ட் 20 மாலை ஆறரை மணிக்கு  “சமீபத்தில் படித்த புத்தகங்களில் பிடித்தது” என்ற தலைப்பில் பேசுகிறார்.

 சொல் புதிது – பொருள் புதிது – பேசும் விதமோ புதுமைப் பொலிவு!

அனைவரும் வாருங்கள்!!

வந்தால் பேசும் நம் தமிழுக்குப் பெருமை!

நம் செவிக்கு விருந்து !

நம் அறிவுக்குத் தீனி. 

இலக்கிய வாசல் -அறிவிப்பு – 23 ஜூலை , 20 ஆகஸ்ட் நிகழ்வுகள்

குவிகம் இலக்கிய வாசலின் .இந்த மாத நிகழ்வு  “கதை கேளு – கதை  கேளு” என்ற தலைப்பில் கதை சொல்லும் நிகழ்வாக நடக்க இருக்கிறது. 

தேதி          : ஜூலை 23, சனிக்கிழமை
நேரம்        : மாலை 6 மணி
இடம்         : ஸ்ரீனிவாச காந்தி நிலையம்,
அம்புஜம்மாள் தெரு, ஆள்வார்பேட்டை.
பொருள்  : “கதை கேளு – கதை கேளு”

சென்ற ஆண்டு  ஜூலை மாதம் நடந்த ‘சிறுகதைச் சிறுவிழா’  நிகழ்வில் சிறுகதைகள் வாசிக்கப்பட்டன.

இம்முறை கதை படிப்பதற்குப் பதிலாக கதை சொல்லும் நிகழ்வாக அமையும்.

இதுவரை பதினைந்து ‘கதை சொல்லிகள்’ உங்களுக்காகக்  கதை சொல்லத் தயாராக இருக்கிறார்கள்! 

அனைவரும் வருக !

 

அடுத்த மாதம் ஆகஸ்ட் 20 சனிக்கிழமையன்று பிரபல எழுத்தாளர்                                             எஸ். ராமகிருஷ்ணன் குவிகம் இலக்கிவாசலுக்கு வந்து இன்றைய இலக்கியம் பற்றி உரையாற்றுகிறார் !  

( இடம் : டிஸ்கவரி  பேலஸ் புத்தக நிலையம், கே கே நகர் ) 

அனைவரும்  வருக !

 

 

குவிகம்

     குவிகம்- 29 , மே 2016                                       (email: editor@kuvikam.com)

அன்புள்ள குவிகம் வாசகர்களுக்கு,

வணக்கம்

நீங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்தில் ஒருவர் ! ஆம். குவிகம் வாசகர்களின்  எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேற்பட்டுவிட்டது !

அதாவது, உங்கள் குவிகம் இதழ் இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பப்படுகிறது. ( அதில் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று கேட்பது புரிகிறது) 

இன்றில்லாவிட்டாலும் நாளை படிக்கப் போகிறார்கள் ! 

edit1

குவிகம் இருபத்தொன்பது மாதங்களாக வருகிறது.

மாதம் 25 மின்-பக்கங்கள்  – மொத்தம்  725 பக்கங்கள் வந்துள்ளன. கடந்த ஐந்து மாதங்களாக நமது குவிகத்தை  kuvikam .com என்ற தனி அமைப்பில் கொண்டுவந்துள்ளோம். அதற்குப்பிறகு  2766 பார்வைகள்  1327 பார்வையாளர்கள். போதாதுதான்.  இன்னும் நிறைய வாசகர்களை நமது தளத்துக்கு அழைத்து வரவேண்டும் ! 

உங்களுக்கு ஒரு வேண்டுகோள் !  

( பயப்படாதீர்கள்! காகித விலையேற்றம் காரணமாக பத்திரிகையின்  விலையை  ஏற்றப் போகிறோம் என்று  சொல்லப்போவதில்லை – சொல்லவும் முடியாது. )

உங்கள் கருத்துகளைத் தற்போது நேரில் சந்திக்கும்போதும், போனில் பேசும்போதும் சொல்கிறீர்கள் ! தயவுசெய்து இமெயில் மூலமாக அல்லது குவிகத்தின் பக்கங்கள் மூலமாக   எது பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை, பரவாயில்லை , மோசம் என்ற கமெண்ட்ஸ்களையும்,  மற்ற உங்கள் பொதுக்  கருத்துகளையும் எங்களுக்கு எழுதுங்கள் ! 

மற்ற நண்பர்களின்  ஈ -மெயில்களையும் editor@kuvikam.com என்ற  நமது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் –  அவர்களையும் நம் குவிகத்தில் குவிக்கலாம் !   

நன்றி !

 

இலக்கியவாசல் முதலாம் ஆண்டுவிழா அழைப்பிதழ்

நண்பர் கிருபானந்தனும் நானும் இணைந்து அமைத்த குவிகம் இலக்கிய வாசல் என்ற அமைப்பு  நண்பர்களின் நல்லாதரவோடு  ஓராண்டைப் பூர்த்தி

செய்கிறது.

சென்ற வருடம் சித்திரைத் திங்களில் துவங்கிய இந்த வாசலுக்கு

 திருப்பூர்   கிருஷ்ணன், வா.வே.சு, ஜெயபாஸ்கரன், பிரபஞ்சன்,   பதின்மூன்று சிறுகதை ஆசிரியர்கள், நீரை அத்திப்பூ, சாரு நிவேதிதா, ஸ்ரீஜா வெங்கடேஷ், அசோகமித்திரன், அழகியசிங்கர், ரவி தமிழ்வாணன், பாம்பே கண்ணன், ஞாநி 

ஆகிய இலக்கிய வித்தகர்களுடன், மற்றும் பல இலக்கிய நண்பர்கள், வாசகர்கள்  வந்து சிறப்பித்தை நாங்கள் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறோம்.

இந்த நிகழ்வுகளின் வலைப் பதிவுகளையும் ஒலி வடிவங்களையும்

ilakkiyavaasal.blogspot.in  என்ற  வலைப்பூவில் பார்க்கலாம். கீழே உள்ள வலைப் பதிவுகளைச் சொடுக்கினால் தாங்கள் அந்த நிகழ்வின் புகைப்பட -ஓலி வடிவைக் கண்டு – கேட்டு ரசிக்கலாம்.

இந்த சித்திரை மாதத்தில் முதலாம் ஆண்டுவிழா சற்று பெரிய அளவில் நடைபெற உள்ளது. ” இயல் இசை நாடகம்” என்று மூணு நிகழ்ச்சிகள்

இயலுக்கு, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி ,பிரபஞ்சன் என்ற இலக்கிய சிகரங்களைப் பேசக் கேட்டு  கவுரவிக்கிறோம்.

இசைக்கு  ஒரு வில்லுப்பாட்டு.

நாடகத்திற்கு , கோமல் சாமிநாதனின்  நாடகம்.

எங்கே ? எப்போது?

இந்த இதழின் கடைசிப்பக்கம் பார்க்க

 

இலக்கிய வாசல் – 12 வது நிகழ்வு – அறிவிப்பு

பன்னிரெண்டாம் நிகழ்வு

நாடகங்கள்-நேற்று இன்று நாளை

Image result for ஞாநி

சிறப்புரை:     திரு ஞாநி 

தொடர்ந்து கலந்துரையாடல்

வழக்கம் போல் சிறுகதை  ஒன்றும் –  கவிதை ஒன்றும் படிக்கப்படும்

அனைவரும் வருக !

இடம்: J G கண்ணப்பன் வாசுகி அரங்கம்,

68, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,

(ஹோட்டல் பிரசிடென்ட் எதிரில்)

சென்னை 600004 

சனிக்கிழமை 19 மார்ச் 2016,  மாலை 6.30 மணி

அனைவரும் வருக 

 

இலக்கிய வாசல் 11வது நிகழ்வு