Old indian father with his young son spending time at park. Stock Photo | Adobe Stock                               

 ‘ஹலோ எங்கே இருக்கிறீர்கள் முகுந்த்?’

 ‘வந்து கொண்டே இருக்கிறேன் மாலா, வீட்டுக்கு வந்து டாக்டரிடம் சென்றது பற்றி சொல்கிறேன்’

 ‘சரி’

 ‘அச்சச்சோ மறந்து விட்டேனே, ஹலோ’

 ‘இப்பொழுது தானே சொன்னேன், நான் வழியில் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்று, ஃபோனை வை’

 ‘இல்லை இல்லை, அப்பாவிற்கு குலாப்ஜாமூன் ரொம்ப பிடிக்கும், அதனால் வரும் பொழுது கொஞ்சம் வாங்கிட்டு வாருங்கள்’

 ‘சரி சரி’

 xxxxxxxxxxxxxxx

 ‘அப்பா மெதுவாக இறங்கி வாருங்கள், இந்தக் கடையில் குலாப்ஜாமூன் வாங்கிக் கொள்ளலாம்’

‘அப்பா இங்கேயே நின்று கொள்ளுங்கள், நான் காரை எடுத்து வருகிறேன்’

xxxxxxxxxxx

‘சார் சமீர் சாகப், வாருங்கள், என்ன வீட்டில் யாரும் இல்லையா?’

‘இல்லை, எல்லோரும் ஊருக்குப் போய் இருக்கிறார்கள், எனக்கு சாப்பிட வேண்டும்’

‘உங்களுக்குப் பிடித்த பிரட் பகோடா செய்து தருகிறேன், தம்பி சாருக்கு கொஞ்சம் காரசாரமான பேல்பூரி கொடு. மிகவும் பிரியம்’

‘கொஞ்சம் மிக்சர் தாப்பா’

‘இந்த ஓசி கிராக்கி தொல்லை ரொம்ப ஜாஸ்தியா போயிடுத்து சாப்பிடு’

 ‘மாதவ் யாருப்பா இது?’

 ‘யாருக்குத் தெரியும் சமீர் சாகப், ஐயா கை நீட்டினார், காசு இல்லை போல் இருக்கிறது இப்படி நிறைய பேர் கிளம்பி வந்துவிடுகிறார்கள்’

 ‘அப்பா அப்பா இங்கே என்ன பண்ணுகிறீர்கள்? ஏம்பா, என் அப்பா என்ன சாப்பிட்டார்கள் அதற்கு எவ்வளவு?’

‘சார் பெருசாக ஒன்றும் சாப்பிடவில்லை, எனக்கு ஒன்றும் வேண்டாம்’

‘அது எப்படி, எங்க அப்பா சாப்பிட்டதை நான் பார்த்தேன், எவ்வளவு என்று சொல்?’

 ‘இல்லை சார் விட்டு விடுங்கள்’

‘இல்லை இல்லை, இந்தா பத்து ரூபா வைத்துக் கொள், இதற்கு மேல் ஆயிடுச்சின்னா சொல்லு’

‘இல்லை சார்’

‘சார், இவர் உங்கள் அப்பாவா?’

‘ஆமாம் என்ன அவருக்கு?’

‘ஒன்றுமில்லை, வயதாகி விட்டதல்லவா, மறதி வியாதி’

‘அப்படியா’

ஆமாம் நான் காரை நிறுத்தி வருவதற்குள் இறங்கி இங்கே வந்துவிட்டார்’

‘நான் ஒன்று சொல்லலாமா?’

‘சொல்லுங்கள்’

‘இந்த வயதான காலத்தில் மறதி உள்ள இவரை ஏன் நீங்கள் வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறீர்கள்? ஏதாவது இல்லத்தில் சேர்த்து விடலாமே?’

  ‘என்ன சார் சொல்லுகிறீர்கள்! நான் சின்ன வயதில் காணாமல்  போயிருந்த போது அப்பா என்னை தெரு தெருவா சுற்றி தேடி வருவார்கள், என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்திருக்கிறார், இப்பொழுதும் அவர் வீட்டில் தான் நாங்கள் இருக்கிறோம், தவிர எங்களுடன் அவர் இல்லை, நீங்கள் கொடுத்த யோசனைக்கு நன்றி, ஒருபோதும் நான் அப்பாவை என்னிடமிருந்து பிரித்து விட மாட்டேன்’

 “ஹலோ ‘ராதிகா முதியோர் இல்லமா?’ கொஞ்சம் எங்க அம்மாவை பேச சொல்லுங்கள், நான் சமீர் பேசுகிறேன்!’