கண்ணதாசனின் நெஞ்சில் எழுந்த தத்துவ அலைகள்- முனைவர் கவிஞர் இரவிபாரதி
கவியரசர் கண்ணதாசனின் நூற்றாண்டு  இந்த ஆண்டு.
(ஜூன் 24, 1927 – அக்டோபர் 17, 1981).
தமிழ் இலக்கியம் மற்றும் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
அவரது நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்புடன் கொண்டாட அரசும் , அவரது அனைத்து ரசிகர்களும் ஆவன செய்து வருகின்றனர். 
யூடியூப் முழுவதும் அவரது புகழ் பாடும் பட்டிமன்றங்களும் சிறப்புரைகளமாகப் பவனி வருகின்றன.
காலங்களில் அவன் வசந்தம் என்று இசைக்கவி ரமணன் 100 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடத்தியிருக்கிறார்.
கண்ணதாசனின்  குமாரர்கள் அவருக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் பல செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழக முதல்வரும் அவருக்கு நூற்றாண்டுப்  பகழ் மாலைகளைச் சாற்றி வருகிறார்.
கமலஹாசன், இளையராஜா, வைரமுத்து , முத்துலிங்கம், திருப்பூர் கிருஷ்ணன் போன்ற திரை மேதைகளும் அவருக்குப்  புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில்  மாபெரும் விழா ஒன்று நடைபெற இருக்கிறது.
சிங்கப்பூர் மலேஷியா போன்ற நாடுகளிலும் மா பெரும் விழாக்கள் நடத்தி வருகின்றனர்.
பத்திரிகைகளும் அவரது படைப்புகளை மீண்டும் பிரசுரித்து  வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 
குவிகத்தின் சார்பாக  ஏற்கனவே நாம் கண்ணதாசனைப் போற்றும் வகையில் தென்காசி கணேசன் அவர்களும்   உஷா கண்ணன் அவர்களும்  கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். 
இன்னும்  பல நிகழ்வுகள் நடத்தத் தீர்மானித்திருக்கிறோம். அதுபற்றி குவிகம் நண்பர்களும் தங்கள் கருத்தைக் கூறலாம்.  
உலகில் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடும் ஒரு கவிஞனை  – திரையுலகில் முத்திரை கவியரசரை நாமும் கொண்டாடுவோம். 
அடுத்த இதழில் இது பற்றிய  அறிவுப்பு வெளியாகும்.