இராமாவதாரம் என்று சொல்லப்படும் கம்பன் காவியத்தை விளக்கிச் சொல்லும்போது கம்பனாகவே மாறிவிடுகிறார் நமது சிங்கப்பூர் கம்பன் ஏ கே வரதராஜன் ஐயா அவர்கள்.
அதேசமயம் , 11 ஆண்டுகளாகத் தொடர்ந்து நாயன்மார் வரலாற்றினை இசை நாடகமாகத் தரும்போது ஏ கே வி அவர்கள் சிங்கப்பூர் நாயனாராகவே மாறிவிடுகிறார்.
அவரது அற்புதமான படைப்பு ஆகஸ்ட் 16, 2026 ஆம் அன்று சிங்கப்பூரில் மேடையேற்றப்பட்ட “குங்குலியக் கலய நாயனார் ” இசை நாடகம்.
( இதன் காணொளி கீழே தரப்பட்டுள்ளது )
நேரில் பார்க்க இயலாதவர்களுக்கென்றே யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள இந்த நாடகத்தைப் பார்க்கும்போது
அதன் பாடல் வரிகளைப் பாராட்டுவதா,
அதற்குப் பொருத்தமாக இசை அமைத்தவரைப் போற்றுவதா,
பாடிய பாடகர்களை வாழ்த்துவதா,
நடித்தவர்களின் நடிப்பைப் புகழ்வதா ,
காட்சி அமைப்பை மெச்சுவதா,
எல் சி டி வடிவனைக் கண்டு வியப்பதா,
திரையின் பின்னணியில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்களின் திறமையை வாழ்த்துவதா
பொருளுதவி செய்த தாளாளர்களை வாழ்த்துவதா
ஒருங்கிணைத்த சிறார்களை ஊக்குவிப்பதா
ஆதரவு தரும் ரசிகப் பெருமக்களைப் போற்றுவதா
அனைத்துக்கும் பின்னணியில் சூத்திரதாரியாகத் திகழ்ந்த ஏ கே வி ஐயா அவர்களை வணங்குவதா
என்று தெரியாமல் மயங்குகிறோம்.
அனைவருக்கும் ஏகோபித்த பாராட்டுதல்கள்.
நம்ம மனதைத் தொட்டு கண்களைப் பனிக்க வைக்கும் அவர்களின் கலைச் சேவை என்றென்றும் தொடர வேண்டும்.
வண்ண விருந்தளித்த ஆடை, மேடை அலங்காரங்களுடன் இசையும் ஒளியும் கலந்து பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தியது ‘குங்கிலியக் கலைய நாயனார் என்கிறது சிங்கப்பூர் தமிழ் முரசு
