Music show on Kannadasan’s songs. March 4 evening - MYLAPORE TIMESசுதந்திரச் சுடர்கள் | பாரதியார் நினைவு நாள்: பாரதியின் இலக்கிய வீச்சுDangers of external religiosity and hypocrisy

 

 

 

 

 

 

குருஷேத்திர இறுதிப் போருக்கு முன்னர், போரிட மறுத்த அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் அளித்த அறிவுரைகளே கீதை ஆகும். கீதைக்கு மூலம் மகாபாரதமே.

அர்ஜுனன் என்ற ஒற்றை மனிதனுக்குக் கூறிய கீதை, மனித சமுதாயத்திற்க்கே கூறப்பட்ட வாழ்வியல் நெறியாகும்.உபநிஷத்துக்கள் , திருக்குறள் போன்ற நீதி நூல்கள் போலவே பகவத் தீதையும் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான ஒன்றாகும்.

பகவத் கீதை 18 பகுதிகளில் 700 சுலோகங்களைக் கொண்டதாகும். {சில பதிப்புகளில் 711 சுலோகங்களும் உண்டு} ஒவ்வொரு பகுதியும் யோகம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சவுணர்வுடன் தனிப்பட்ட உணர்வை இணைக்கும் அறி்வே யோகமாகும். எனவே ஒவ்வொரு பகுதியும் முற்றான உண்மையை உணர்வதற்காக வெளிப்படுத்தப்படும் அறிவாகும் என்பதையே அது உணர்த்துகிறது.

பகவத் கீதையின் பகுதிகள் 1 முதல் 6 வரை கர்ம யோகமும், 7 முதல் 12 வரை பக்தி யோகமும், 13 முதல் 18 வரை ஞான யோகமும் முக்கியப் பொருளாகப் பேசப் படுகின்றன.

பகவத் கீதை 6000 வருடங்களுக்காவது முந்தையது என்று நம்பப்படுகிறது.

பகவத்கீதை அருளப்படும்போது பாண்டவர்கள் நின்று கொண்டிருந்தது போர்க்களத்தில். போரில் கொல்வது நீதியாகாதா? கௌரவர்கள் பாண்டவர்களைக் கொல்லத் துணிந்தது எத்தனை முறை? நீதி வெல்லவும், அநீதி அழியவுமே கிருஷ்ணன் இங்கே அவர்களைப் போரிடத் தூண்டுகிறான்.

துரியோதனனே போரைத் தூண்டினான். இறுதியாகத்தான் பாண்டவர்கள் போரைக் கைக்கொண்டார்கள். நாட்டைக் காப்பதே இராணுவ வீரனின் தொழில். தன் நாட்டை இழந்தும் அதை மீட்காமல் இருந்த அர்ஜுனனையே கிருஷ்ணன் போருக்குத் தூண்டுகிறான்.

அர்ஜுனன் போரிடாவிட்டால் நிச்சயம் கோழை என்றே சொல்லப்பட்டிருப்பான். அதன் விளைவு என்ன ஆகியிருக்கும். அவர்களுக்கு நாடும் கிடைக்காமல், ஒன்றும் கிடைக்காமல் அழிவை அடைந்திருப்பார்கள்.

இறந்தால் சொர்க்கம், வென்றால் நாடு என்கிறானே, நாட்டைச் சாக்காகக் கொண்டு பிறரைக் கொல்லலாமா?

ஒருவன் மற்றவர்கள் நாட்டையெல்லாம் திருடலாமா? அப்படி ஒருவன் தன் நாட்டைத் திருடினாலும் அதைவிட்டுக் கொடுத்துவிட்டு போய்விட வேண்டுமா? நாட்டை மீட்க வேண்டும் என்றால் கொல்ல வேண்டியிருக்கிறது வேறு வழியில்லை என்றால் கொன்றுதான் ஆகவேண்டும்.

அத்தியாயம் 4, ஸ்லோக எண் 39ல் ,

ஶ்ரத்தாவான் லபதே ஞானம் தத்பரஹ ஸந்யதேந்த்ரியஹ ।

ஞானம் லப்த்வா பராம் ஶான்திமசிரேணாதிகச்சதி

இந்த ஸ்லோகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஒரு மனிதன் உன்னதமான ஆத்ம ஞானத்தை அடைவதற்கு தேவையான மூன்று முக்கிய தகுதிகளை விவரிக்கிறார்:

1. ஸ்ரத்தை : சாஸ்திரங்கள் மற்றும் குருவின் உபதேசங்களின் மீது வைக்கப்படும் அசைக்க முடியாத தூய்மையான நம்பிக்கை.

2. அர்ப்பணிப்பு: அந்த ஞானத்தை அடைவதையே தனது வாழ்வின் மிக உயர்ந்த லட்சியமாகக் கொண்டு செயல்படுதல்.

3. புலனடக்கம்: நமது ஐம்புலன்களையும், மனதையும் உலக விஷயங்களில் சிதறவிடாமல் கட்டுக்குள் வைத்திருப்பது.

இந்த தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் ஒருவருக்கு ஞானம் கைகூடும். சிரத்தை என்ற வார்த்தை ஆழ்ந்த பொருள் கொண்டது. உறுதியான நம்பிக்கையோடு இறைவனின் சொற்களை ஏற்று நடந்தால், நல்லதே நடக்கும். நினைத்ததும் கிடைக்கும்.
அதைத்தான்,

பரித்ராணாய சாதூனாம் வினாஷாய ச துஷ்கிருதம் |
தர்ம-சம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே

நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் நான் யுகம் தோறும் அவதரிக்கிறேன்
என்று கண்ணன் கூறுகிறான்.

மஹாகவியும் , அதே கருத்தை,

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள் எங்கள் தாய்—அவர்
அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்
என்கிறான்.

கம்பன், இளங்கோ, காளிதாசன் முதலிய பல பெரும் புலவர்களின் பெயர்களைச் சொல்லி பாராட்டும் பாரதி, பாணிணி, ஆதி சங்கரர் , தாகூர், பங்கிம் சந்திர சட்டர்ஜி மற்றும் ஆங்கிலப் புலவர்கள் ஷெல்லி, கீட்ஸ் போன்ற ஆளுமைகளும் அவனை ஆட்கொண்டனர்.

ஆழ்வார்கள், சைவப் பெரியார் நால்வர் ஆகியோர் செல்வாக்கும் அவனது பாடல்களில் உள்ளது. குறிப்பாக மாணிக்க வாசகரின் திருப்பள்ளி எழுச்சி போலவே பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி இருக்கிறது. சங்கப் புலவர்களின் செல்வாக்கு மிகவும் காணப்படுகிறது. ஆயினும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக பகவத் கீதையின் செல்வாக்குதான் பல பாடல்களில் தூக்கி நிற்கிறது.
தனது தேசிய கீதங்கள் பாடல் தொகுப்பில், பாரதி எழுதிய சத்ரபதி சிவாஜி சைன்யத்திற்குக் கூறியது என்பது ஒரு நீண்ட பாடல். ஆனால் ஒவ்வொரு மாணவனையும் சிறு வயதிலேயே மனப்பாடம் செய்யச் சொல்லவேண்டிய பாடல். இதில் கீதையின் சாரம் வருகிறது. உத்திஷ்ட! யசோ லப= எழுந்திரு! புகழடை! என்ற வீர வாசகம் வருகிறது. இது கண்ணன் கீதையில் இட்ட உத்தரவு.

ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!
அதிரத மனர்காள்! துரகத் ததிபர்காள்
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்!
வேலெறி படைகாள்! சூலெறி மறவர்காள்!

கால னுருக்கொளும் கணைதுரந் திடுவீர்.
மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச்
செற்றிடுந் திறனுடைத் தீரரத் தினங்காள்!
யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக!

மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா
ஆற்றல்கொண் டிருந்ததில் வரும்புகழ் நாடு!
வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்
பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!
தர்மமே உருவமாத் தழைத்தபே ரரசரும்
நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு!
வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை
ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு!

பாரதப் பூமி பழம்பெரும் பூமி;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!

கண்ணன் கூறிய பகவத் கீதையை நேரடியாகவும் இன்னும் பல இடங்களில் மறைமுகமாகவும் போதிக்கிறான்.

கண்ணதாசன், இருவரையும் உள் வாங்கி,

நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு?
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு

பாலைவனம் என்ற போதும் நம்நாடு
பாறை மலை கூட நம் எல்லைக்கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்
+
வானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை

பசியென்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து புலியாக சீறும்
நிலத்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்

எழுதி இருக்கும் இந்தப் பாடலில், கடைசி சரணம், கீதை மற்றும் பாரதி சொன்ன கருத்துக்களை மிக எளிதாக, அதே சமயம் தீர்க்கமாக தந்திருக்கிறான்.

அடுத்த மாதம் சந்திப்போம்.