குவிகம் கதை முற்றம் – இனி சந்தாதாரர்களுக்கு மட்டும்? 

கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட குவிகம் கதை முற்றம் மின்னிதழ், செப்டம்பர் 2026 முதல் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று வெளிவந்து கொண்டிருப்பதை வாசகர்கள் நன்கு அறிவீர்கள்.

இப்போது, வருகிற ஜனவரி 1, 2027 முதல், குவிகம் கதை முற்றத்தைச் சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்பிதழாக மாற்றலாம் என்ற ஓர் எண்ணம் எங்களுக்கு உதித்துள்ளது.

இந்த இதழில், பல்வேறு எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள், பரிசு பெற்ற கதைகள், ஒருபக்கக் கதைகள், குறுங்கதைகள், சித்திரக் கதைகள், முத்திரைக் கதைகள், கதைச் சுருக்கங்கள், பொக்கிஷக் கதைகள், திரைக்கதைகள், கதை விமர்சனங்கள் எனப் பல்வேறு வகையான படைப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.

ஒவ்வொரு மாதமும் சுமார் 60 முதல் 80 A4 பக்கங்கள் கொண்ட அழகிய PDF இதழாக இது வடிவமைக்கப்படும். சந்தாதாரர்களுக்கு மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

ஆண்டு சந்தா வெறும் ரூ.100 மட்டுமே!

குவிகத்தின் எந்தவொரு இலக்கிய முயற்சியும் லாப நோக்கத்தைக் கொண்டதல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், கதை எழுதும் எழுத்தாளர்களின் படைப்புகளை அங்கீகரிப்பதுடன், அவர்களுக்குச் சிறிய அளவிலாவது சன்மானம் வழங்க வேண்டும் என்பதுதான்.

நம்முடைய இந்த முயற்சிக்கு 300 நண்பர்கள் ஆதரவு அளித்து, ஆண்டுக்கு ரூ.100 வீதம் சந்தாதாரர்களாக இணைந்தால், மாதந்தோறும் ரூ.2,500-ஐத் தரமான கதைகளைப் படைக்கும் எழுத்தாளர்களுக்குச் சன்மானமாக வழங்க முடியும். இது அவர்களுடைய எழுத்துப் பணிக்கு நாம் அளிக்கும் சிறிய அங்கீகாரமாகவும் ஊக்கமாகவும் அமையும்.

கதை இலக்கியத்தை வளர்ப்போம்! கதை எழுதும் எழுத்தாளர்களை ஊக்குவிப்போம்!

இது இப்போதைக்கு உங்களுக்கான ஒரு முன் அறிவிப்பு மட்டுமே. சந்தா விவரங்கள் மற்றும் இதழின் திட்டங்கள் குறித்த விரிவான அறிவிப்பு அடுத்த குவிகம் கதை முற்றம் இதழில் வெளியாகும்.

உங்கள் ஆதரவையும் அன்பையும் எதிர்பார்க்கிறோம்!

நன்றி!

குவிகம்