நம்  கேள்வி – சாய் பதில்

1. கேள்வி:

ஜெயமோகனின் விஷ்ணுபுரம் எப்படி?

சாய் பதில்:  

படிக்க ஆரம்பிப்பது கொஞ்சம் கஷ்டம். புரிவது கொஞ்சம் சிரமம். அதையெல்லாம் கடந்து விட்டீர்கள் என்றால்  அது நாவல் அல்ல; தனி உலகம் என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.  படித்து முடித்தால் விஷ்ணுபுரத்தை விட்டுத் திரும்ப மனம் வராது. படிக்கத் தொடங்கினால் மற்ற வேலைகளை மறந்துவிடுவீர்கள்!

2. கேள்வி:

நூலக ஊழலைத் தடுக்க என்ன வழி?

நூலக ஊழல்: எழுத்தாளர்கள் கண்டனம்-4

சாய் பதில்:

நூலகங்களைத்   திறந்து வைத்தால்  மட்டும்போதாது . அதில் உள்ள புத்தகங்களையும் கிறந்து பார்க்கவேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட  குழு என்னென்ன புத்தகங்களைத்  தேர்ந்தெடுத்திருக்கிறது  என்பதைப்  பொதுமக்கள் பார்க்கக்கூடிய  வெப் சைட்டில் போடவேண்டும்.

பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் புத்தகங்களை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

அதன்பின் , வாங்கிய புத்தகங்களின் பட்டியலையும்  அதே வெப் சைட்டில் போடவேண்டும்.

நூலகங்களில் இருக்கும் அனைத்துப் புத்தகங்களின் பட்டியலும் வெப் சைட்டில் தெரியவேண்டும்.

இதெல்லாம் செய்தால் ஊழலை ஒழிக்க முடியுமா? கொஞ்சம் குறையலாம்.

இதெல்லாம் முடியாதா?  பேசாமல்  ‘நூலகத்தில் ஊழல்’ என்று A I மூலம்  ‘சிவன் பிள்ளையார்’ அல்லது ‘நயன் டீன்’ என்ற புனைபெயரில் புத்தகம் எழுதி எல்லா லைப்ரரிக்கும்  10 பிரதிகள் அனுப்பலாம்.

3. கேள்வி:

புது ராமாயணப் படத்தின் சிறப்பு என்ன?

அர்ஜூனின்  ரீல்ஸ் பாருங்க!  க்ளிக் பண்ணுங்க !

 

 

4. கேள்வி: தமிழில் பிரபலமான கவர்ச்சி நூல் எது?

சாய் பதில்: எல்லா எழுத்தாளர்களும் தொட்டிருக்கிறார்கள். ஜெயகாந்தன் (ரிஷி மூலம், சினிமாவுக்குப் போகிற சித்தாள்) புஷ்பா தங்கதுரை, அறிஞர் அண்ணா,  சாண்டில்யன், சுஜாதா , சாரு நிவேதிதா, தி ஜா , சில பெண் எழுத்தாளர்கள், இன்றைக்கு முகநூலில் கதை எழுதும் பலர் எல்லாரும் ஆபாசம் என்று முத்திரையைக் குத்தாமல்  குத்தியிருக்கிறார்கள்.

ஆனால் எழுதப்பட்ட நூல்களைவிட, ஆபாசமாகப் பேசும் சிலருடைய பேச்சுகள்தான் அதிகப் பிரபலம்! 

5. கேள்வி: அனிருத் – காவ்யா திருமணத்திற்கு எப்படி வாழ்த்து சொல்வது?

அனிருத் ரவிச்சந்தர், காவ்யா மாறன், திருமணம், கிரீஸ், ரஜினிகாந்த், destination wedding, கலாநிதி மாறம்

சாய் பதில்: அனிருத் இசையில் காதல் இனிக்கட்டும்; காவ்யா வாழ்க்கையில் கவிதை மலரட்டும்! இருவரின் வாழ்க்கையும் என்றும் டூயட்டாக ஒலிக்கட்டும்!  தேனோடு கலந்த தெள்ளமுதம் மாதிரி , இசையோடு கலந்த  கிரிக்கெட்டுமாக கோடி கோடியாய்  இனிமையாக வாழட்டும்.