2026 அக்டோபர் மாதத்திற்கான கதையாக திரு கிருஷ்ண.ஜனந்நாதன் தேர்வு செய்த கதை
சுய கெளவரவம் — லட்சுமி ராமானுஜம்: மங்கையர் மலர் 25.10.2026
=============================================================================================
சுய கெளவரவம் — லட்சுமி ராமானுஜம்: மங்கையர் மலர் 25.10.2026
தற்காலத்தில் நடுத்தர வர்க்க குடும்பங்களில் நடக்கும் பாச – கெளவரவ போராட்டங்களை எளிமையாக, அற்புதமாக விவரிக்கும் நல்ல கதை.
பாசமிகு தாய், பாசத்துடன் பிடிவாதம் மற்றும் கெளவரவத்தையும் வைத்திருக்கும் தந்தை, இவர்கள் மத்தியில் நாசூக்காக காய் நகர்த்தும் மகன், எல்லாவற்றையும் நன்றாக புரிந்துகொள்ளும் மகள், மருமகன். தொடக்கத்திலிருந்தே ஒவ்வொருவருடைய எண்ணங்களையும் மன ஓட்டங்களையும் விவரிக்கும் பாங்கு அருமை.
கடைசியில் சிக்கலை அவிழ்த்துவிட மகன் வைக்கும் ஒரு வாதம் மிக அருமை.
குறிப்பிடத்தக்க பிற கதைகள்
- எது அன்பு : ஜி. அபி. சதுர்புஜன் குவிகம் கதை முற்றம் நவம்பர் 2026
நெஞ்சை தொட்ட கதை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக்களை எந்த விதமான பிரதி பலன்களை எதிர்பாராமல் வளர்க்கவேண்டும் என்ற கருத்தை விவரிக்கும் நல்ல கதை.
- உடைந்த கல் : ஆழியார் விக்னேஷ். குவிகம் கதை முற்றம் நவம்பர் 2026
சிந்திக்க வைத்த கதை. எந்த வலியையும் தாங்கும் மனப்பக்குவம் இருந்தால் உயரலாம் என்ற கருத்தை எடுத்துரைக்கும் நல்ல கதை.
- குற்றங்கடிதல் ; அரா. சண்முகவல்லி நடுகல் நவம்பர் 2026
சமூக விழிப்பணர்ச்சி கூடிய கதை. போதைப்பொருள் உபயோகத்தால் சமூகமும் இளைஞர்களும் சீரழிவதை மையமாக வைத்து எழுதப்பட்ட நல்ல கதை.
- தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்
பாலமுருகன். லோ திண்ணை 06.10.2026
தற்கால நடுத்தர வர்க்க குடும்பங்களின் மன அழுத்தங்களை பிரதிபலிக்கும் கதை. பெற்றோர்களே ஆச்சரியப்படும்படி அவர்கள்மனதை புண்படுத்தாமல் ஒரு மகள் வெளிப்படையாக எடுத்துரைத்து சிக்கலை தீர்த்துவைப்பது நல்ல ஒரு ட்விஸ்ட்.
- புது கூட்டணி : கல்பனா ராஜகுமாரி
பெண்கள் பற்றி புதிய சமுதாய பார்வை. நல்ல கதை. “வாழ வந்த வீட்டுல அவங்க வாழ வழி நம் அமைத்து கொடுக்கணும். குடும்ப விஷயத்துல கலந்துக்க உரிமை கொடுக்கணும். அப்பதான் அந்த வீடு அவர்களோட வீடுனு தோணும்” என்ற கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நல்ல கதை.
- வேலைக்காரி : வீ. பக்கிரிசாமி சங்கு அக்டோபர்-டிசம்பர் 2026
மனதை உலுக்கிய யதார்த்தமான கதை. மேல் அடுக்கு மக்கள் தங்களிடம் வேலை செய்பவர்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளை புரிந்துகொள்ளாமல் இருப்பதை சுட்டிக்காட்டும் நல்ல கதை.
