9, 99, 999,

இந்த எண்களைத் தமிழில்   படியுங்கள்

9

90

900

ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்று தானே சொல்கிறோம்?

சங்க கால மக்கள் இவற்றை வேறு மாதிரி சொல்லி வந்தார்களாம். அதற்கு அவர்கள் சொல்லும் விளக்கம் பொருத்தமாகவே  இருக்கிறது.

பரிபாடலில் ( திருமால் 3: 77-79) திருமாலைப் புகழ்ந்து பேசும் பாடல் ஒன்று உள்ளது .

அது இப்படி துவங்குகிறது,

பாழ்என கால்என பாகுஎன ஒன்றுஎன

இரண்டுஎன மூன்றுஎன நான்குஎன  ஐந்துஎன

ஆறுஎன ஏழுஎன எட்டுஎன தொண்டுஎன

 

ஆக , நாம் ஒன்பது என்றழைக்கும் 9 ஐ அவர்கள் தொண்டு என்றே அழைத்தார்கள் என்பது புலனாகிறது.

மேலும் பாழ் என்றால் 0, கால் என்றால் 1/4 ,பாகு என்றால் 1/2 . அருமை ! அருமை!!

இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து நாம் 90ஐ தொண்ணூறு என்றும், 900ஐ தொள்ளாயிரம் என்று அழைப்பது தவறு என்று கூறப்படுகிறது.

ஏனென்றால்,

பத்து, இருபது, முப்பது,நாற்பது, ஐம்பது,அறுபது,எழுபது, எண்பது, இவற்றிருக்குப் பிறகு ஒன்பது, என்று தான் இருக்க வேண்டும். நாம்  தொண்ணூறு என்று சொல்கிறோம். அது தவறு

அதைப்போல நூறு, இருநூறு. அந்த வரிசையிலும் 900 ஐ தொள்ளாயிரம் என்று சொல்கிறோம். அது தவறு அதைத் தொண்ணூறு என்று தான் சொல்லவேண்டும்.

9000 ஐ தான் தொள்ளாயிரம் என்று சொல்லவேண்டும்.

இப்படிச் சொல்கிறார் முனைவர் பாக்யமேரி என்ற ஆசிரியர்  தன் தமிழ் இலக்கிய வரலாறு என்று நூலில்!

லாஜிக் சரியாகத் தானே இருக்கிறது !

கலைஞர்  தேர்தலில் வெற்றி பெற்றால்,  பொங்கலைத் தமிழ் ஆண்டின் துவக்கம் என்று அறிவித்ததைப் போல இந்த எண்களையும் மாற்றலாம் !