மூன்று இதழ்கள் – இரண்டு வெளியீடு – ஒரு புத்தகம்
அதுதான் வசந்த மலர் !
விருட்சம் – குவிகம்- பூபாளம் மீறு இதழ்களும் இணைந்து வெளியிட்ட வசந்த மலர் 26!
https://heyzine.com/flip-book/e0d498d3fb.html
இதன் வெளியீட்டு விழா 12/4/26 ஞாயிறு மாலை நமது வழக்கமான அளவளாவல் நிகழ்வில் வெளியிடப்பட்டது.
விருட்சம் சார்பாக அழகியசிங்கர்
குவிகம் சார்பாக சுந்தரராஜன்
பூபாளம் சார்பாக ஹரிஹரன், மதுவந்தி , டாக்டர் பாஸ்கரன்
மலரை வெளியிட்டு எப்படிக் கொண்டுவந்தோம் என்பதைப் பற்றிப் பேசினார்கள்.
கதை கட்டுரை கவிதை எழுதி அனுப்பிய எழுத்தாளர்களுக்கும் , சிறப்பாக வடிவமைத்த கிருபானந்தனுக்கும், விளம்பரம் தந்து உதவிய சாய் சங்கரா மேட்ரிமோனியல் நிறுவனர் பஞ்சாபகேசன் அவர்களுக்கும், முன்பதிவு செய்து மலரை வாங்கிய வாசக நண்பர்களுக்கும் விழாவில் நன்றி கூறிச் சிறப்பித்தோம்.
வசந்த மலரில் பிரசுரிக்கப்பட்ட
கதைகளைப் பற்றி அனுராதா ஜெய்சங்கர் அவர்களும்
கவிதைகளைப் பற்றி கணேஷ்ராம் அவர்களும்
கட்டுரைகளைப் பற்றி சௌரிராஜன் அவர்களும்
சிறப்பான முறையில் உரை நிகழ்த்தி அசத்தினார்கள்.
அதன் காணொளி இங்கே !
https://youtu.be/jZUz8rpSSLU?si=QeYNqWgGW71_mRIw
வ வே சு அவர்கள் வழங்கிய வாழ்த்துரை:
ஒருமித்த மனத்தோடும், கொண்ட பற்றில் குறையாத ஆர்வத்தோடும், உண்மை பிறழாமலும் உழைத்தால், என்ன பயன் கிட்டும் என்பதை இன்றைய ‘வசந்த மலர்” வெளியீடு நிரூபித்துவிட்டது.
விருட்சம்,பூபாளம், குவிகம் ஆகிய மூன்றும் என்றுமே ஒரு வெற்றிக் கூட்டணி. மூன்று இதழாசிரியர்களுக்கும் எனது முதல் பாராட்டு.
வசந்தப் பெயர் ஈந்த மதுவந்தி, படைப்புகளின் வரிசையை ஒருங்கிணைத்த பாஸ்கரன், தோள் சுமந்து துணை நின்ற ராஜாமணி ஆகியோருக்கு அடுத்த பாராட்டு.
அமெரிக்க மண்ணில், இதை நிஜ இதழாக வெளியிடத் துணைநின்ற, கிருபானந்தன்,சுந்தரராஜன் இல்லத்தார் ,அங்கு பங்கேற்ற நண்பர்கள் ஆகியோருக்கு என் பாராட்டு.
இதழில் வெளிவந்துள்ள கதை,கவிதை, கட்டுரைகளைத் திறனாய்வு செய்த ( மிகச் சுருக்கமாக ஆனால் எதையும் விடாத, ஒருவருக்கொருவர் சளைக்காத) மூவருக்கும் ( அனுராதா, கணேஷ்ராம், செளரிராஜன்) ஆகியோருக்குப் பல நூறு பாராட்டுகள் .
இதை சாதனை செய்த
குவிகம் இரட்டையருக்கு
இரு கோடி பாராட்டுகள்!
இந்தப் பாராட்டுப் பட்டியலில் நிறைவாக, பங்கேற்று வாழ்த்திய, பின்னூட்டி மகிழ்ந்த அனைத்துக் குவிகம் நண்பர்களுக்கும் இதயம் கனிந்த எண்ணற்ற பாராட்டுகள்.
அன்புடன்
வவேசு
மதுவந்தி அவர்களின் வாழ்த்துரை:
உண்மை இது வெறும் புகழ்ச்சி இல்லை.
கதைகளைப் பற்றிப் பேசிய அனுராதா மிக அழகாக கதையின் முடிச்சுகளை அவிழ்க்காமல் திறமையாக சொன்னார்.
கணேஷ் ராம் கவிதைகளை கவி மனம் அறிந்து கவிதையின் மையப் புள்ளியை சரியாக அடையாளம் காட்டி பேசினார்.
சௌரி ராஜன் எல்லா கட்டுரைகளின் சாராம்சத்தை சொல்லி வசந்த மலரை வாசித்தே ஆக வேண்டும் என கேட்பவருக்கு உணர்த்தினார் .
அருமையான அறிமுகம்.
ரேவதி பாலு அவர்களின் வாழ்த்து:
இன்றைய குவிகம் அளவளாவல். மூன்று இதழ்கள் ஒரு மலர் இரு வெளியீடுகள் ஜூம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
குவிதம் சுந்தரராஜனின் நிகழ்ச்சி அறிமுக உரைக்குப் பின்பு தீபாவளி மலர் வெளியீடு பற்றி அழகிய சிங்கரும் வசந்த மலர் வெளியீடு பற்றி ஹரிஹரன் மதுவந்தி ஆகியோரும் சுருக்கமாக கூறினார்கள். டாக்டர் பாஸ்கரன் வசந்த மலரில் தான் ஆற்றிய பங்கை அதாவது கதை கவிதை கட்டுரைகளை வரிசை படுத்தி கொடுத்ததைப் பற்றி சுருக்கமாக சொன்னார்.
வசந்த மலரில் வெளியான கதைகளை விமர்சிக்க வந்த அனுராதா ஜெய்சங்கர் கதை முடிவை கூறாமல் சஸ்பென்ஸ் ஆக முடித்தது சுவாரசியமாக இருந்தது . அடுத்து கணேஷ் ராம் என்னை கவிதை விமர்சனத்திற்கு கூப்பிட்டது அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் இருக்கும் சம்பந்தம் போல் தோன்றுகிறது என்று வேடிக்கையாக குறிப்பிட்டாலும் அவர் விமர்சித்த விதத்தில் அந்த கவிதைகளை உடனே மறுமுறை படிக்க வேண்டும் போல தோன்றியது. சௌரிராஜனின் கட்டுரைகளை பற்றிய விமர்சனமும் மிகவும் ரசிக்கத்தக்க விதத்தில் அமைந்தது. எல்லோருமே அவரவருக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் தங்கள் விமர்சனங்களை முடித்துக் கொண்டது சிறப்பு . கடைசியில் முத்தாய்ப்பாக ரமணனும் ஆசான் வாவேசுவும் தங்கள் கருத்துக்களை கூற நிகழ்வு சிறப்பாக முடிந்தது.
தரும ராஜேந்திரன் :
திரைகடலோடியும் இலக்கியம் வளர்க்கும் விருட்சம் குவிகம் பூபாளம்
இந்திய அமெரிக்க நிகழ்வுகள் சிறக்க வாழ்த்துகள்.
இரண்டாவது வண்ண மயமான வெளியீடு அமெரிக்காவின் சியேட்டிலில் கிருபானந்தன் மகன் கிரண் அவர்கள் இல்லத்தில் 20 பேர் பங்குபெற்ற நேரடி நிகழ்வாக நடைபெற்றது.
அமெரிக்காவில் இந்த மலரை அச்சு வடிவில் கிருபானந்தனின் மகன் விவேகானந்தன் மூலம் கொண்டுவந்தது இன்றைய நிகழ்ச்சியின் முக்கியக் கட்டம்.
கிருபாநந்தன் வரவேற்புரை வழங்கி குவிகம் அமைப்பு பிறந்த கதையையும் மூன்று இதழ்கள் இணைந்து தீபாவளி, வசந்த மலர் வெளியிட்ட விவரங்களை யும் விளக்கினார்.
சியேட்டில் இலக்கிய மாலை அமைப்பாளர் குரு பிரசாத் அவர்கள் வசந்த மலரை வெளியிட குழந்தைகள் மூவர் பெற்றுக்கொண்டனர்.
விவேகானந்தன், அமேசான் மூலம் இந்தப் புத்தகத்தை கொண்டுவர எப்படிச் சாத்தியமானது என்பதை விளக்கினார்.
பின்னர் குவிகம் அளவளாவலில் நடைபெற்ற வசந்தமலர் நிகழ்வின் காணொளி 10 நிமிடங்களில் சுருக்கிய பதிப்பு யாக வண்ணத் திரையில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்வின் காணொளி :
https://youtu.be/s7KhxXlqIOQ?si=TlHi9of5lAlaNwz6
ஜூம் மூலம் ஒளிபரப்பான இந்த நிகழ்வை இந்தியாவில் இருந்த நண்பர்களும் பார்த்து மகிழ்ந்தது கூடுதல் சிறப்பு.





