டாக்டர் ஏ கே ராமானுஜன் – 300 ராமாயணம்

Image result for a k ramanujan

ஏ கே ராமானுஜன் (1929-1993)

மைசூரில் பிறந்த தமிழர்

அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மொழியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

சிகாகோ, ஹார்வர்ட், பெர்க்லி போன்ற பல்கலைக் கழகங்களில்  ஆசிரியராக இருந்தவர்.

பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர்

தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில்  வல்லுனர்

ஒரு கவிஞர், மொழி பெயர்ப்பாளர், நாட்டுப்புரவியல்  மற்றும் மொழியியல் வித்தகர்,

ஏராளமான கவிதைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

இவரது சிறப்பு சங்கத் தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகத்துக்கு அறிமுகப் படுத்தியவர்.

உதாரணத்துக்கு ஒன்று :

 

குறுந்தொகை 312 – இயற்றியவர் – கபிலர்,  குறிஞ்சி திணை – தலைவன் சொன்னது 
இரண்டறி கள்வி நம் காத லோளே
முரண்கொள் துப்பில் செவ்வேன் மலையன்
முள்ளூர்க் கான நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோர் அன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோர் அன்னள் வைகறை யானே.
இதை ராமானுஜம் ஆங்கிலத்தில் இப்படி எழுதியிருக்கிறார்!

My love is a two-faced thief.
In the dead of night
she comes like the fragrance
of the Red-Speared Chieftain’s forest hills,
to be with me.
And them, she sheds the petals
of night’s several flowers,
and does her hair again
with new perfumes and oils,
to be one with her family at dawn
with a stranger’s different face.

A K Ramanujam

 நாமும் அந்தப் பாடலை இப்படி எழுதியுள்ளோம் ( கபிலரும், ராமானுஜனும் மன்னிக்கட்டும் )
அடி என் காதலி!
இரவில் மலை  வீட்டிலிருந்து தனியாக வருகிறாய்!
வரும் போதே உன் வாசனையால்  என்னை மயக்குகிறாய்!
இரவு முழுதும் என்னுடன் கொஞ்சிக் கலக்கிறாய் !
விடியற்காலையில் ,
இரவுப்பூக்களின் இதழ்களை மெல்ல உதறுகிறாய் !
கலைந்த கூந்தலை  எண்ணையிட்டு சீவி முடிக்கிறாய்!
கள்ளமில்லா கள்ள முகத்துடன்
உன் வீட்டிற்குள் கலந்து கொல்கிறாய் !
அடி என் காதலி!
உனக்கென்ன இரண்டு முகங்களா?

 

அதெல்லாம் இருக்கட்டும்.. அதென்னா 300 ராமாயணம் என்று தலைப்பில் போட்டிருக்கிறதே என்று கேட்கிறீர்களா?

2011இல் இவருடைய  கட்டுரை டெல்லி பல்கலைக் கழகத்திலிருந்து தலைமை நீதி மன்றம் வழியாக உலக அரங்கிற்குப் போனது!

கூகில் சர்ச்சில் தேடிப்பாருங்கள்! அந்த சர்ச்சை புரியும்!

(அல்லது ஏப்ரல் குவிகத்திற்காகக் காத்திருங்கள்)

 

 

தேவி … ஸ்ரீதேவி …

300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம் பிடித்த ஸ்ரீதேவி பிப்ரவரி 28 இல்

துபாயில் அகால மரணமடைந்தார்.

அவரது பிரிவால் வாடும் ரசிகர்களுக்கும் குடும்பத்தாருக்கும்

இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!  

Related image

 

மது பாட்டில்கள் இருந்தனவா?

Related image

Image result for sridevi movies

Image result for sridevi movies

Image result for sridevi movies

Image result for i moondram pirai

 

Related image

“காதல் நெரித்தால்…” மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்

Image result for husband and wife in tamilnadu fight cartoon

 

டாக்டர் அழைப்பில் சுமதியைப் பார்க்க வந்தேன். இளம் வயதானவள். ஒரு அமைதியற்ற நிலை, தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தாள். சாயம் போன ஜீன்ஸ், கச்சிதமான சட்டை, அடர்த்தியான கூந்தல் பாதி முகத்தை மறைத்திருந்தது.

அவளுடன் வந்தவள், “நான் இவள் அம்மா” என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, “எப்படி இருக்கா, பாருங்க” என்று விசும்பினாள். சுமதி அவள் பக்கம் திரும்ப, கூந்தல் விலகியது. வீங்கிய கன்னம், சிவந்த கண்கள், நெற்றியில் காயமும் தெரிந்தது. நான் பார்த்துவிட்டதைக் கவனித்ததும், சுமதி அழத் தொடங்கினாள். அம்மா கன்றிப் போயிருந்த காயங்களைக் காட்டி, “காதலித்துக் கல்யாணம் ஆச்சு. இப்போ, மாப்பிள்ளையின் சந்தேகத்தால் அடிபட்டு எங்க வீட்டுக்கு வந்திருக்கா.” என்றாள்.

சுமதிக்கு MNC வங்கியில் டீம் லீடராக வேலை. 27 வயது. நவீன தோற்றம், உடல்சாரக் கொடுமையின் (Physical Abuse) பல அடையாளங்கள். அவளுடைய முகத்தில் துயரம், சஞ்சலம். டாக்டர், மருத்துவ ரீதியாக பார்த்துக் கொள்ள, அவளின் ஆபத்து காரணிகளின் (ரிஸ்க்) மதிப்பீட்டை ஒரு ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்ற முறையில் தொடங்கினேன்.

சுமதி நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அம்மா  இல்லத்தரசி, அப்பா ஸேல்ஸ் மேனேஜர், தம்பி நவீனுடன் சொந்த வீட்டில் வாழ்ந்தாள். பெற்றோர் கண்டிப்புடன் வளர்த்தார்கள். பொட்டு வைத்து, பாவாடை தாவணி அணிய வேண்டும். காலை-மாலை சாமி கும்பிடுவது, இதற்காகவே ஆறு மணிக்குள் இருவரும் வீடு திரும்ப வேண்டும். தாமதித்தால், வீட்டிற்கு வெளியே அரைமணி நேரம் நின்று, இரவு அரை சாப்பாடு, பாத்திரம் தேய்க்க வேண்டும். இருவரும் படிப்பில் கெட்டி. தெருவில் எடுத்துக்காட்டாக இருந்தார்கள், எல்லோரும் புகழ்ந்தார்கள்!

படிப்புதான் பெற்றோரின் கவனம். பாட்டு சொல்லித் தந்தார்கள், ஆனால் வெளியே எங்கும் பாடக்கூடாது. ஸ்கூலில் இருக்கும்வரை இவை பெரிதாகத் தெரியவில்லை. காலேஜ் சேர்ந்ததும் வித்தியாசங்களை சுமதி கவனிக்க ஆரம்பித்துத் தத்தளித்தாள். தன் ஆதங்கத்தைப் படிப்பின்மீது காட்டினாள். பெற்றோருக்கு மார்க் முக்கியம் என்பதால், படிக்காமல் மார்க்கைத் தவறவிட்டாள். அவள் பீ.ஈ. முடித்தவுடன் வேலையில் சேரச்சொன்னார்கள், அதை நிராகரித்து விட்டு, எம்.பீ.ஏ. சேர்ந்தாள். மற்ற விஷயத்தில் பெற்றோர் கண்டிப்பாக இருந்தாலும் படிப்பு என்பதால் சுமதியின் விருப்பத்திற்கு விட்டுக்கொடுத்தார்கள்.

எம்.பீ.ஏ. இரண்டாம் ஆண்டில் எதேச்சையாக அவளுடைய சீனியர், சுரேஷை சந்தித்தாள். கால் பந்து வீரர், இப்பொழுது மேனேஜர் வேலை. நாளடைவில் பழகத் தொடங்கினாள். கருணை உள்ளவனாக, சுதந்திர மனப்பான்மை உடையவனாகத் தோன்றினான். கட்டுடல் கொண்ட அழகன். பல பெண்கள் பேச்சுக் கொடுக்கப் பார்த்தாலும், அவர்களை தட்டிக் கழிப்பதைக் கவனித்தாள். காதல் வளர, சுமதி பூரித்துப் போனாள். நான்கு மாதங்கள் இந்த உல்லாசத்தில் போனது.

அதற்குப்பின், சுமதி ஏதேனும் ஆணுடன் பேசுகையில் சுரேஷ் அங்கு இருந்தால், முறைத்துப் பார்ப்பான். தன்னை எந்த அளவிற்கு நேசித்தால் இப்படிச் செய்கிறான் என்று எடுத்துக்கொண்டாள்.  இதன் தொடர்ச்சியாக, தோழிகளுடன் அவள் பேசுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. தோழிகள் அவளை எச்சரிக்கை செய்ய முயன்றார்கள். சுமதியைப் பொறுத்தவரை,  ‘காதலிப்பவருக்காக இதைக் கூட செய்யா விட்டால் எப்படி?’ என்றே தோன்றியது. சுரேஷுடன் நேரம் கழிக்க வீட்டில் விதவிதமான பொய்களைச் சொன்னாள், வருத்தமும்படவில்லை.

இப்படி உறவுகளைச் சுருக்கி விடுவதே உடல்சார் கொடுமையின் ஆரம்பமாகும். பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் இதைப் புரிந்து கொள்ளப்  பல மாதங்கள் ஆகலாம்.

சுமதி தன்னுடன் இல்லாத நேரங்களில், சுரேஷுக்கு அவள் தன்னை விட்டுச் சென்று விடுவாளோ என்ற எண்ணம் ஆட்கொள்ளும். தன்னை ஆசுவாசப்படுத்தவே குறுஞ்செய்தியில் அவள் எங்கே, யாருடன், என்ன பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று கேட்பான். இவளும் பதில் அனுப்புவாள். கொஞ்சம் தாமதித்தால் சுமதியை அழைத்துப் பேசுவான். சுமதி இதைத் தன்னை அரவணைப்பதாக  எடுத்துக்கொண்டு தன் காதலன்மேல் கர்வம் கொண்டாள்!

தன் பிடியில் எப்போதும் இருக்கச் செய்வது, துரத்துவது, எமோஷனல் (உணர்ச்சிகளின்) கொடுமை சார்ந்ததாகும். இவர்கள், தன்னுடைய பதட்டத்தையும், அவநம்பிக்கையும் கையாளத் தெரியாததால் வருவதே. சுமதி போன்றவர்கள் இதைச் சுமந்து கொள்வார்கள்.

 ஒரு நாள், சுமதி தன் கைப்பேசியை வீட்டில் மறந்துவிட்டு   கடைக்குச் சென்றுவிட்டாள். திரும்பி வந்ததும் பார்த்தாள், சுரேஷ் 50 குறுஞ்செய்தி, 20 முறை அழைத்திருந்தான்.  அவள் அம்மா, சுரேஷ் பதட்டப்பட்டு  தன்னை அழைத்ததைச் சொல்லி, அவனுக்குப் பரிந்து சுமதியைத் திட்டினாள். சுமதி உடனே சுரேஷை கூப்பிட்டு மன்னிப்புக் கேட்டாள். அவன் தாங்க முடியவில்லை என்றான். ஒரு வாரத்திற்கு அவளிடம் பேசவோ, பார்க்கவோ மறுத்தான்.

ஆதரவை மறுப்பது, அன்பைக் காட்டாமல் இருப்பது எல்லாம் ஸைக்கலாஜிகல் கொடுமையே. இவை, தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் விதம். வெளிப்படையாகத் தெரியாது.

 ஒரு வாரத்திற்குப் பின், சுரேஷை நேரடியாகச் சந்தித்து சுமதி மன்னிப்புக் கேட்டாள். சுரேஷ் மிகச் சோகமாக இருந்தான். திரும்பத் திரும்ப “எப்படி ஈடு கட்ட போகிற? எப்படித் தவித்தேன்!” என்று சொல்லி, பளாரென்று கன்னத்தில் அறைந்தான். அவள் தோளை குலுக்கி “சாரீ” என்றான். “எந்த அளவுக்கு நான் காயப்படுத்தியிருக்கேன்? ” என்று நினைத்து சுமதி ஏற்றுக் கொண்டாள்.

இது எல்லை மீறுவதின் அடையாளமாகும். உடல் + உணர்ச்சி வசப்பட்ட கொடுமை: மற்றவர் முன் தாழ்த்துவது, தகாத முறையில் கோபம் காட்டுவது, பிறகு பாசமாக பேசுவது.

 சுமதியின் வீட்டில் கல்யாணப் பேச்சு ஆரம்பமானது.  வந்து தேடுவது, கைப்பேசியில் அவள் நலனைக் கேட்பதிலிருந்து சுரேஷைபற்றி அவள் பெற்றோருக்கு நல்ல அபிப்ராயம். தங்களுக்கும் மேலான பாசம் என்று எண்ணி ஒப்புக் கொண்டார்கள். சுரேஷ், “பணத்தைப்பற்றி பேசி ஏன்  கொச்சைப்படுத்துகிறீர்கள்?” என்று சொல்லி வரதட்சிணை வாங்கவில்லை.

சுமதி சந்தோஷமாகக் கணவன் வீட்டிற்குச் சென்றாள். வீ.ஆர்.எஸ் பெற்ற மாமனார், இல்லத்தரசியான மாமியார், காலேஜ் படிக்கும் தங்கை. ஆரம்பத்தில் மிக இதமாகப் பொழுது போனது. பல சுதந்திரங்கள். ஸ்கர்ட், பான்ட்-ஷர்ட் அணிந்தாள். பாடவும் அனுமதித்தான்.

கல்யாணமாகி முதல் மாசச் சம்பளத்தில் தன் பெற்றோருக்கு இனிப்பு வாங்கி சுரேஷுடன் போய் கொடுக்க விரும்பினாள். சுரேஷை அழைத்தாள். சுரேஷ் “யாரைக் கேட்ட?”என்றான்.  மாமனார், “பிச்சைக்காரி போல வந்தே, இப்ப எங்க துட்டுல..” சொல்லி வாங்கினதைத் தூக்கி எறிந்தார். எல்லோரும் வெளியே சாப்பிடச் சென்றார்கள், சுமதியை வீட்டில் விட்டுவிட்டு.  கேட்காமல் செய்ததின் விளைவு என்று சுமதி தன்னைத் தேற்றிக்கொண்டாள்.

அவள் அம்மா வீட்டிற்கு சுரேஷ் வாரம் ஒரு முறை போவதால் (வேலை இடம் பக்கம்) சுமதியைப் போகவேண்டாம் என்றான். அவன் மாப்பிள்ளை உபசாரம் வேண்டாம் என்றதால் அவர்களும் அப்படியே விட்டார்கள். திரும்பி வந்து சுமதியிடம் அவர்கள் கவனிக்காததைச் சொல்வான். நாளடைவில் சுமதிக்குத் தன் பெற்றோர் மீதான மரியாதை, பாசம் குறைந்தது. அவர்களைப் பார்க்க நேராததால் எதையும் யாரிடமும் கேட்கவோ, பகிர்ந்து கொள்ளவோ முடியவில்லை.

ஒரு நாள், சுமதி ஆடை அணியும்பொழுது, அவள் மாமனார் உள்ளே வந்தார். சுரேஷிடம் சொன்னதும், அவரை அடித்து விட்டான்.

சுமதி ஒரு முறை தாமதமாக வீடு திரும்பியபோது சுரேஷ் அவளைக் கொச்சையாகப் பேசி,  அடிக்கப் போவதற்குக் கையை ஓங்கினான்,  அவன் அம்மா “டேய் அப்பா மாதிரி மிருகமாகாதே” என்று கூச்சல் இட்டதும், சுமதியைத் தன் பிடியிலிருந்து விட்டான். அவளை ஆறு மணிக்குள் வீடு வரச் சொன்னான். அம்மா வீட்டுக் கண்டிப்பை நினைத்து, சலித்துக் கொண்டாள்.

மற்றொரு நாள் 6 மணிக்குள் சுமதியால் வர முடியாதபோது சுரேஷ் அவளைச் சந்தேகித்து பல கேள்விகள் கேட்டான். வீட்டில் வேறு யாரும் இல்லை. அவன் நம்புவதாக இல்லை என்று அவளுக்குத் தோன்றியதும் பயந்தாள், மௌனமானாள் (அப்படியாவது அமைதி ஆவான் என்று நினைத்தாள்). சுரேஷ் கோபம் அதிகரிக்க, அவளைக் கீழே தள்ளி, பெல்ட்டால்  அடித்தான், காலால் உதைத்தான். தாங்க முடியாமல் அம்மா வீட்டிற்கு வந்தாள். அங்கு அவள் அப்பா அவளைத் திட்டி, அடித்துவிட்டார். இதன் பிறகே எங்களைப் பார்க்க நேர்ந்தது.

 இந்த மாதிரியான சூழ்நிலைகளில், காயம் அடைந்தவரின் கண்ணோட்டத்திலிருந்து அவர்களின் பிரச்சினைகள், சிக்கல்கள், சம்பவங்கள், இதற்கு முன் பட்ட காயம், குடும்பத்தினரைப்பற்றி விசாரிப்போம். இதிலிருந்து அவர்கள் தாக்குதலுக்கு ஆளானதை, அவர்களுடைய அச்சம், கோபம், சமாளிக்கும் திறன்கள், திக்கற்ற நிலை, குடும்பத்தினரின் பங்கேற்பு, ஒத்துழைப்பு, என்ற பல நுணுக்கங்களைப் புரிந்துகொள்வோம்.

இது, உடல்-உணர்ச்சி கொடுமைகள் சார்ந்ததே என்பதை அவளுக்குப் புரிய வைக்கவே அவள் கைகளின் ஒவ்வொரு வடுக்களை வைத்து, நிகழ்ந்ததை விவரிக்கச் சொன்னேன்.  நிகழ்வுகளை நினைவூட்ட, “ஏன் பொறுத்துக் கொள்ளவில்லை” என்று அவள் மனத்தில் இருந்த சஞ்சலம் நீங்கித் தெளிவு பெற, மெதுவாக தன் சுதந்திரம் சுருங்கியதை, உறவுகள் முறிந்ததைப் பார்க்க தைரியம் வந்தது.

 ஆதங்கங்ளைக் கையாளும் முறைகளை ஆலோசித்தோம். சுமதிக்குத் தெளிவாயிற்று, அவள் சுரேஷை தேரந்தேடுத்ததே பெற்றோரின் கண்டிப்பு, வீட்டில் விதித்திருந்த சட்டங்களிலிருந்து விடுபடுவதற்கே என்று. சுரேஷ், கொடுத்த சுதந்திரத்தில் தன்னுடைய விருப்பப்படி ஆடை, அலங்காரம், பாட்டு் வாழ்வில் வந்ததால், சுரேஷ் மீது ஈர்ப்பு என்றாள்.

 அம்மா வீட்டிற்கு வந்தபின், முதலில், கணவர் வீட்டிற்குப் போக பயம் என்றாள். அவன் அழைப்பிற்குப் பதில் பேசாமல் இருந்தாள். சுரேஷ் அவளை வீட்டில் சந்தித்து, கெஞ்சி மன்னிப்பு கேட்டுக் கொண்டான். அம்மா வீட்டில் அதே சட்டங்கள், கண்டிப்பு, உடைத் தடைகள் இருந்ததால் சுரேஷுடன் சென்றாள். எங்களை ஆலோசிக்கவில்லை, தானாகச் சிந்திக்கவில்லை. மூன்றாவது நாள் அடி வாங்கியதும், திரும்பி வந்தாள்.

 தன் நிலையை முழுமையாகப் புரிந்துகொள்ளாததால் இப்படி இயங்க நேரிடும்.

சுமதி, சுரேஷுக்கு எடுத்துச் சொன்னதால், அவனும் எங்களைப் பார்க்க ஒப்புக் கொண்டான். தன்னுடைய மனநிலையைப்பற்றி விவரித்தான். தன் அப்பா அம்மாவை அடிப்பதைப் பார்த்து, இப்படிச் செய்தால்தான் மரியாதை, பேச்சைக் கேட்பார்கள் என்ற எண்ணம். சுமதி தன்னை விட்டுப் பிரிந்துவிடுவாளோ என்ற அச்சம். தன் வளர்ப்பு, அச்சத்தைப்பற்றிச் சொல்ல அவனுடைய நிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது.

 சுரேஷ் போன்ற நடத்தை, அவர்களின் குறைந்த சுய மதிப்பிடு / சமாளிக்கும் திறன்களினால் நேரலாம்.

சுரேஷின் பயங்கள், அவற்றைச் சந்திக்கும் முறைகளை உரையாடலுக்கு எடுத்துக் கொண்டோம். சுரேஷுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளுவது கடினமாக இருக்கிறது என்பதை  மையமாக வைத்து, அவன் உறவை உருவாக்கும் முறைகள், வெறுப்புகளைக் கையாளும் விதங்கள் என்னவென்று ஆராய்ந்தோம். பல வாரங்களுக்குப் பின் சுரேஷ் தெளிவு பெற்றான். ஆனால் மாற்றங்களை எப்படி செயல்படுத்த முடியும் என்ற  அச்சம் இருந்தது.

 முதல் கட்டமாக, சுமதி என்னைப் பார்க்க வரும் நேரத்தில் அவளைத் தொலைபேசியில் அழைக்கக் கூடாது. மனதை திடப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பட்டியலிட்டோம். சுரேஷ் உடற் பயிற்சியை தேர்ந்தெடுத்தான். உட்கார்ந்து இருந்தால், அந்த மனநிலையிலிருந்து  விடுபட அச்சத்தைத் தாளில் எழுதிக் கொள்ளலாம். சுரேஷ் வியந்தான், இவ்வளவு வழிகள் உள்ளதே என்று!

அதேபோல், தான் என்னைப் பார்க்க வரும் நாட்களிலும் இதையே கடைப் பிடிக்க வேண்டும் என்றேன். அடுத்தது, சுமதியை வேலையில் அழைக்கவோ, பேசவோ கூடாது என்று.

சுமதியின் காயங்களைக் குறித்து உரையாட, இருவரையும் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். இருவரும் தங்கள் உறவு,  மனக்காயங்கள்பற்றிப் பேசி, வேதனைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நேரத்தில் ஒரு ஹோம் வர்க் – தங்களைப்பற்றி இல்லாமல், கைகளைக் கோர்த்துக்கொண்டு வேறு ஏதாவது பேச வேண்டும். பிரச்சினைகள் குறைந்து வருவதை கைகளின் வெப்ப நிலை மாற்றத்தில் உணர்ந்தார்கள்.

மாற்றங்கள் ஊக்கம் அளிக்க, இருவரும் தவிர்க்க வேண்டிய நடத்தைகள், சொற்களைப் பட்டியலிட்டோம். சுரேஷ், தான் மாமனார், மாமியார்பற்றி சொன்ன தவறான தகவல்களைப்பற்றியும் பகிர்ந்து கொண்டான். அவரவர் கசப்புகளை, எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

மனம்விட்டுப் பேசியதால், நெருக்கம் வளர்ந்தது. விரும்பிக் கல்யாணம் செய்துகொண்டதால், மன்னிக்க மனம் வந்தது.

குடும்பத்தினரையும் ஒவ்வொருவராகச் சந்தித்தேன். பிறகு இணைந்து பார்க்கையில், அவர்களின் பங்கேற்பையும், பொறுப்பையும் வரிசைப்படுத்தினோம்; அவர்கள் கடைப்பிடித்து வர, என் பங்கு முடிவடைந்தது.

காதல் என்பது ஒருவர் மேல். ஆனால் கல்யாணமோ இரு குடும்பத்தினருடன். கலாச்சாரங்கள்,  உறவுகள் இணைந்து மலர, விட்டுக் கொடுக்கும் சுபாவம் உறவை மேம்படுத்தும், ஏற்ற-தாழ்வு தெரியாது.

ஆனால், இன்னல்களை, கசப்புகளை, வெறுப்புகளை ஒருவர்மேல் மட்டும் குவித்தால் அது கொடுமையே. எப்பொழுதும், “என்ன நடந்து விடுமோ?” என்ற பதட்டத்துடன் இருப்பதும் கொடுமையின் அடையாளமாகும். அடிமை போல் கெஞ்சி, மறு நிமிடம் கையாலோ, சொல்லாலோ அடித்து, “நான் சொல்வதே சட்டம்” என்பதும் கொடுமை.

கொடுமை கலந்திருந்த உறவைப் புதுப்பித்தார்கள் சுமதி-சுரேஷ் ஜோடி! மாற வேண்டும் என்ற உறுதி இருந்தால்தான் மாற முடியும்!

 

 

நீங்க சொல்லுங்க குருஜி…! நித்யா சங்கர்

 

Related image

‘நீங்க சொல்லுங்க குருஜி… இது எந்த ஊர் நியாயம்..?’

அந்த ஆசிரமத்தின் அமைதியான, தெய்வீகமான, நிசப்தமான
சூழ்நிலையைக் கிழித்துக்கொண்டு சென்றது அந்தக் குரல்.

கண்ணை மூடிக் கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இருந்த குருஜி
மெதுவாகக் கண்ணைத் திறந்து குரல் வந்த திசையை நோக்கினார்.

சரவணன்…. அடிக்கடி ஆசிரமத்திற்கு வந்து குருஜியிடம்
ஆசி வாங்கிச் செல்பவன்.

‘என்னப்பா சரவணா…? இன்னிக்கு என்ன குழப்பம்..? யாருக்கு
என்ன அநியாயம் நடந்து விட்டது..?’ என்றார் குருஜி புன்முறுவலோடு.

‘குருஜி… உங்களிடம் முன்பே சொல்லியிருக்கேன்.. இரண்டு
வருடமா நான் செய்யும் வேலையிலே எனக்கு அமைதியில்லே…
பிரச்னைகள் வந்துட்டே இருக்கு. எப்படா இந்த வேலையிலிருந்து
மாறி வேறு இடத்துக்குச் செல்வோம் என்று துடிச்சிட்டிருக்கேன்..’

‘ஆமா.. சொல்லியிருக்கே.. இப்போ என்ன ஆச்சு..?’

‘ஒரு ஆறு மாதம் முன்னாலே ஒரு ஜோசியரைப் பார்த்தேன்.
என் பிரச்னைகளைச் சொன்னேன். அவர் என் ஜாதகத்தைப்
பார்த்து சில பரிகாரங்கள் பண்ணச் சொன்னார். ஸ்ரீரங்கம் சென்று
ரங்கநாதனுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து, ஆராதனை பண்ணி
வேண்டிக்கொள்ளச் சொன்னார்.

பின் பழனி சென்று அந்தப் பழனிஆண்டவனுக்கு பால் காவடி எடுத்து,                                                                                              அபிஷேகம் பண்ணி, ஆராதனைசெய்து மனமுருக வேண்டிக் கொள்ளச் சொன்னார். முழு நம்பிக்கையோடு எல்லா புகழ் பெற்ற கம்பனிகளுக்கும் நம்பிக்கையோடு அப்ளிகேஷன்ஸ் போடச் சொன்னார். அவர் சொன்னபடியே ஸ்ரீரங்கம் சென்றேன். ரங்கநாதனையும், தாயாரையும் வேண்டிக் கொண்டேன்.
அந்தப் பழனி ஆண்டவனையும் தரிசித்து மனமுருக வேண்டிக் கொண்டேன். எல்லாக் கம்பனிகளுக்கும் நம்பிக்கையோடு அப்ளிகேஷன்ஸ்  போட்டேன்…. ஒரு மாசமாச்சு .. இரண்டு மாசமாச்சு… மூன்று மாசமாச்சு..
ஒரு தகவலும் இல்லை… என் மனதிலிருந்த நம்பிக்கையும் கரைஞ்சு
போகத் தொடங்கிடுச்சு… என் வேண்டுதல்களுக்கு பலனில்லாமல் 
போயிடுச்சோ என்ற வேதனை வாட்டத் தொடங்கிடுச்சு….

பதினஞ்சு நாட்களுக்கு முன்னாலே என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அம்மன்
கோவிலுக்குச் சென்றேன்.. அம்மனை நமஸ்கரித்து நின்றேன்…
அக்கோவிலிலிருந்த சிவபெருமான் சந்நிதியையும், பிள்ளையார்
சந்நிதியையும் மூன்று முறை வலம் வந்தேன். ஏனோ அப்போதிருந்த
மனக்குழப்பத்தில் ஒன்றுமே வேண்டிக் கொள்ளத் தோன்றவில்லை..
‘கடவுளே காப்பாற்று… நல்லதே நடக்கட்டும்.. நல்லபடியாயிருக்கட்டும்..’
என்று நினைத்துக்கொண்டு அந்தத் தெய்வங்களை நமஸ்கரித்தேன்.
அக்கோயிலுக்குப் போய் வந்த இரண்டாம் நாள் ஒரு பெரிய கம்பனியிலிருந்து
 எனக்கு இன்டர்வியூ கார்டு வந்தது.. இன்டர்வியூ அட்டென்ட்
செய்ய, நல்ல பொஸிஷனில் எனக்கு வேலையும் கிடைத்தது.. இதோ
அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர்…’ என்றார் சரவணன் ஒரே மூச்சில்.

‘ சரி.. அதுதான் எல்லாம் நல்லபடியா நடந்து விட்டதே… இதிலென்ன
குழப்பம்..?.. இப்போதுதான் உனக்கு அது அமைய வேண்டிய காலம்
கனிந்து வந்திருக்கு…’ என்றார் குருஜி புன்னகையோடு.

‘ஸ்ரீரங்கம் வரை சென்று ரங்கநாதருக்கும், தாயாருக்கும் அபிஷேகம்
ஆராதனை பண்ணினேன். பழனி சென்று முருகனுக்குக் காவடி எடுத்து,
அபிஷேகம் செய்தேன். அந்த மாலவனோ, முருகனோ உதவிக்கு
வரவில்லை. வீட்டுப் பக்கத்திலேயுள்ள கோவிலுக்குச் சென்று, 
அம்மனையும், சிவபெருமானையும், பிள்ளையாரப்பனையும் தரிசித்தேன்.
வேண்டிக் கொள்ளக் கூட இல்லை… அவர்கள் என் பிரச்னைகள் புரிந்து
உடனே உதவி இருக்காங்க… இதுக்கென்ன குருஜி அர்த்தம்..?’

மெதுவாகச் சிரித்தார் குருஜி.. ‘உன் ஜாதகப்படி இப்பொழுதுதான்
அதுக்கான நேரம் வந்திருக்குன்னு அர்த்தம்.. எதெது எப்படி எப்படி
எப்போது நடக்கணுமோ அதது அப்போது அப்படி நடக்கும்னு அர்த்தம்’

‘அப்படின்னா அந்த ஜோசியர் சொன்னது தப்புன்னு சொல்றீங்களா..?’

‘இல்லை… அவர் சொன்னது கரெக்ட்தான்… நீ அவரைப் போய்ப்
பார்க்கும்போது ரொம்ப மன உளைச்சலில் இருந்திருக்கே… உனக்கு
தன்னம்பிக்கையே இல்லாமல் இருந்தது… உன் மனதுக்குச் சற்று ஆறுதலும்
நம்பிக்கையும் தேவைப்பட்டது. அதுக்குத்தான் உன் தன்னம்பிக்கை
லெவலை அதிகமாக்கத்தான் ரங்கநாதனுக்கும் முருகனுக்கும் அபிஷேகங்கள்.
 நீ போய் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டுத் தன்னம்பிக்கையோடு
எல்லாக் கம்பனிகளுக்கும் மும்முரமாக அப்ளிகேஷன்ஸ் போட்டே…
உன் ஒரே குறிக்கோள்..’நல்ல வேலை தேடிக் கொள்வது’ என்று
இருந்தது. அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம்
செய்தே….’

‘ஆமாம் குருஜி… இப்போ எனக்குக் கிடைச்சிருக்கிற வேலைக்குத்
தேவையான ஒர் எக்ஸாம் பாஸ் பண்ண வேண்டியிருந்தது. அதையும்
இரண்டு மாசம் முன்னே எழுதி பாஸ் பண்ணிட்டேன்…’

‘பார்த்தியா… அதைத்தான் சொல்ல வந்தேன்.. சரவணா.. ஒன்று
மட்டும் நினைவில் வெச்சுக்கோ… நீ கடவுளைப்பற்றி நினைக்கும்
நினைப்புகளும் நாமாவளிகளும் உன் புண்ணியக் கணக்கில் சேர்ந்து
கொண்டே இருக்கும். எல்லாவற்றுக்கும் பலன் நிச்சயமாக உண்டு.
நீ செய்த அபிஷேகங்கள் உனக்கு இந்த வேலை கிடைக்கப் பாதையை
ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த வேலைக்கு வேண்டிய எக்ஸாமை பாஸ்
பண்ணிட்டே… அதேபோல் இந்தப் புதிய கம்பனியில் உனக்குக் கிடைத்த
இந்த பொஸிஷனில் இருந்தவருக்கு வேறு நல்ல வேலையை அமைத்துக்
கொடுத்தது. இதற்கெல்லாம் சிறிது காலம் ஆகுமல்லவா.. அதுதான்
ஆகியிருக்கு…’

‘ஆமாம் குருஜி… நீங்க சொல்றது சரிதான்… நான் ஸ்ரீரங்கத்திலேயும்,
பழனியிலேயும் மனமார வேலைக்காக வேண்டிக் கொணடேன்.. ஆனால்
அம்மன் கோயிலில் ஒன்றுமே வேண்டிக் கொள்ளவில்லையே’ என்றான்
சரவணன் குழப்பத்தோடு..

‘சரவணா… நீ கடவுள் முன்னே நின்று கண்களை மூடி சில
நிமிடங்கள் அவரை மனதில் நிறுத்தி தியானம் செய்தாலே போதும்.
உனக்கு என்ன வேண்டும்… எப்போது, எப்படி அதை நிறைவேற்ற
வேண்டும்னு அந்தக் கடவுளுக்குத் தெரியும். நீ தனியாக வேண்டிக்
கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லெ.. அந்தக் கடவுள்
நிறைவேற்றிக் கொடுப்பார்..’ என்றார் குருஜி.

கண்களில் நீர் தளும்ப நின்றிருந்தான் சரவணன்.

—————————————————–

 

கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ்:——சிவமால்

மோகன் : டேய் மதன்.. உன் ·ப்ரண்டு என்ன லூஸா..? என்கிட்டே
சௌக்கியமான்னு கேட்டார்… ‘ரொம்ப சௌக்கியம்னு’
சொன்னேன். கோபமா மூஞ்சியைத் திருப்பிட்டுப் போறார்..!

மதன் : (நக்கலாக) டேய்.. அவர் ஒரு டாக்டர்.. எல்லோரும்
சௌக்கியம்னு சொன்னா அவருக்குக் கோபம் வராதா..?
நம்ம உடம்புக்கு ஏதாவது வந்தாத்தானே அவர் நாலு காசு
பார்க்க முடியும்..!

மோகன் : !!!

 

திருக்கருகாவூர்த் தாயே! – சு ரவி

Related image

தருப்பையை ஏந்தும் முனியின்
தகித்திடும் சாபம் வந்து
கருப்பையைத் தாக்கும் நேரம்
கதறிய வேதிகைக்குக்
கருவினைக் காத்துத் தந்த
கருணையே! முல்லைப் பூக்கள்
அரும்பிடும் கருகா வூரின்
அன்னையே, அழகே, போற்றி!

இல்லறம் பேணிக் காத்தும்
இன்னமும் மழலைச் செல்வம்
இல்லைஎன் றேங்குவோர்தம்
இதயதா பத்தைப் போக்கி
நல்லதோர் பிள்ளைச் செல்வம்
நல்கிடும் தாயே! வாச
முல்லைசூழ் கருகா வூரின்
முழுமுதற்பொருளே, போற்றி!

தாயவள் கருவில் ஜீவன்
தரிக்கின்ற நேரம் தொட்டு
சேயினைக் கர்ப்பத் திற்குள்
செவ்வனே புரந்தச் சேய்க்கும்
வாயுவும், உணவும் தந்து
வாழவைப் பாயே, தாயே!
வாயவிழ் முல்லைக் காட்டின்
வண்ணமே, பாதம் போற்றி!

சந்ததம் உந்தன் பாதம்
சரணமென் றடைவோர் வாழ்வில்
சந்ததி தழைக்கச் செய்வாய்!
சத்கதி அமையச் செய்வாய்!
சந்தனத் தென்றல் சூழும்
சந்தமே!  தாய்மைப் பேறே!
வந்தனை செய்தோம் முல்லை
வனத்துறை வாழ்வே, போற்றி!

விரிதரும் வானம், ஆங்கே
விளங்கிடும் கோள்கள், மீன்கள்
எரிதழல் என்னச் சுற்றும்
எண்ணரும் தீக்கோளங்கள்
திரிதரும் அண்டம் யாவும்                                                                                                                                                                                              தேவியுன் கருவே அன்றோ?                                                                                                                                                                                          திரிபுர  சுந்தரீ!  எந்தன்
திருக்கரு காவூர்த் தாயே!

 

தலையங்கம்

 

 

 

 

 

குரங்கணி தீ விபத்து - பலி 16 ஆக உயர்வு

(நன்றி: தந்தி )

16 உயிர்களைப் பலிவாங்கியது போடி  அருகே உள்ள  குரங்கணி வனப்பகுதி. மலை ஏறுவதற்காக உற்சாகமாகச் சென்ற இளைஞர்களும், பெண்களும், குழந்தைகளும் திடீரென்று ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி உயிரை இழந்திருப்பது கொடுமையிலும் கொடுமை!

அரசு இயந்திரம் சரியில்லை, அனுமதி  பெறவில்லை, தவறான பாதையில் சென்றுவிட்டார்கள் என்றெல்லாம் கூறுவதில் எந்தவிதப் பயனும் இல்லை.

காட்டு இலாக்கா தன் பொறுப்பை சரிவரச் செய்ய அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துதரவேண்டும்.

உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் மட்டுமன்றி இழப்பீடும் தர அரசு முன்வர வேண்டும் !

 

 

 

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

  

 

 

 

 

 

 

 

 

 

 

ஃப்ளாஷ் பேக் – விழா!

சுமார் 30-40  வருடங்களுக்கு முன்னால் –

அதாவது  டிவி,நெட்,யூடியூப் எல்லாம் நம்மை ஆக்கிரமிப்பு செய்யும் முன்பு  சினிமா மட்டுமே ஒரு நல்ல பொழுதுபோக்காக இருந்தது. அப்போதைய சினிமாக்கள் கூடியவரையில் நல்லனவற்றையே, கலை நயத்துடன் சொல்லி வந்தன. ஓரிரண்டு கலைஞர்களைத் தவிர, மற்றவர்கள் சினிமாவை   அதன் பெருமைக்காகவும் , கலை வளர்ச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்திவந்த பொற்காலம் –

தங்களது திறமையாலும், தொழில் மீது கொண்ட பக்தியாலும், படைப்புகளாலும் மட்டுமே பெயர் பெற்ற மூன்று பிரபலங்களுக்கு  11-3-2018 ஞாயிறன்று மாலை ஒரு பாராட்டு விழா நடைபெற்றது – மூன்று மணி நேரம், இனிமையான ’அந்தக் கால சினிமா’ நினைவுகளில் கரைந்தது!

சென்னை ‘ரசிகாஸ்’  கலை மற்றும் பண்பாட்டு அமைப்பின் சார்பில், திரு.முக்தாசீனிவாசன் (மூத்த திரை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்) திரு.சித்ராலயா கோபு (மூத்த வசனகர்த்தா, மற்றும் இயக்குனர்), திரு.C.V.ராஜேந்திரன் (மூத்த திரைஇயக்குனர்) ஆகியோருக்கு விருது மற்றும் பாராட்டு விழா – திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தத் திரை உலக ஜாம்பவான்களின் பங்களிப்பு, தமிழ்த் திரையுலக வரலாற்றில் மகத்தானது, மறக்க முடியாதது. பேரா.பிரகாசம், டெல்லி கணேஷ், சித்ரா லக்‌ஷ்மணன், ரமேஷ் கண்ணா, மோகன்ராம், காந்தி கண்ணதாசன், எம்எஸ்வி ஹரிதாஸ் என ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டம் – பேசுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் ஏராளமான விபரங்கள் – நேரமோ குறைவு.   இருந்தாலும் கிடைத்த நேரத்தில் அனைவரின் பங்களிப்பும் சுவையாகவும், சிறப்பாகவும் இருந்தது.

முக்தா V சீனிவாசன்:

எண்பத்தி எட்டு வயதானவர். 1947ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் ‘கிளாப்’பாயாகச் சேர்ந்தவர், பத்து வருடங்களில் தானே ஒரு படத்தை இயக்கி, அரசு விருதைப்பெறும் அளவுக்கு உயர்ந்தார். முதல் படம் முதலாளி (ஏரிக்கரையின் மேலே புகழ்), தொடர்ந்து ஏராளமான வெற்றிப் படங்கள்.  திட்டமிட்ட நேர்மையான உழைப்பு அவரைத் தயாரிப்பாளர் நிலைக்கு உயர்த்தின. தன் சகோதரர் திரு முக்தா ராமசாமி, தயாரிப்பு நிர்வாகத்தைத் திறம்படக் கவனிக்க, வெற்றிமேல் வெற்றிப் படங்கள் முக்தா பிலிம்ஸில் உருவாயின!

இதயத்தில் நீ, பனித்திரை, தவப்புதல்வன், அந்தமான் காதலி, கீழ்வானம் சிவக்கும், அவன் அவள் அது, சூரியகாந்தி போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்தார். திரு.சோ அவர்கள் திரைக்கதை வசனத்தில் வந்த அத்தனைப் படங்களும் வெற்றிப் படங்களே – பொம்மலாட்டம் படப் பாடலை – வா வாத்தியாரே வூட்டாண்டே, நீ வராங்காட்டினா வுடமாட்டேன் – திரு சீனிவாசன் அவர்கள் மேடையிலேயே பாடி மகிழ்ந்தார்!

ஆரம்ப காலங்களில் கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார் – பின்னர் காங்கிரஸ் அவரை அரவணைத்துக் கொண்டது. தானே இராட்டையில் நூல் நூற்பார் – காந்தீயக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பார் – இன்றும் கதர் ஆடைதான் – விடுமுறைநாட்களில் மெளன விரதம்!

அவர் எழுதிய ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’ – தொடராக துக்ளக் இதழில் வெளிவந்தது –ஒரு முக்கியமான ஆவண நூலாகத் திகழ்கிறது. நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். நான்கு வேதங்களைப் பற்றிய நூல் – சதுர்வேதி –எல்லோருக்குமானது, எளிமையானது.

ஏற்புரையில் அவரது நினைவாற்றலும், மனித நேயமும், நேர்படப் பேசும் தன்மையும்ஒருங்கே வெளிப்பட்டது!

சி.வி.ராஜேந்திரன்:

’தென்னிந்திய சாந்தாராம்’ எனப் புகழப்பட்ட டைரக்டர் ஸ்ரீதரின் சகோதரர் இவர். மீண்டசொர்க்கம் முதல் அவருக்கு அசிஸ்டெண்டாய், அசோசியேட்டாய்ப் பணிபுரிந்தவர். தனது படங்கள் எல்லாம் சிறப்பாக அமைந்ததற்குக் காரணம் ஸ்ரீதரிடம் தான் கற்றுக்கொண்ட சினிமாதான் என்கிறார். நில் கவனி காதலி, வீட்டுக்கு வீடு,கலாட்டாக் கல்யாணம், சுமதி என் சுந்தரி, ராஜா, நீதி, வாழ்க்கை, சிவகாமியின்செல்வன் என இவரது வெற்றிப்படப் பட்டியல் தொடர்கிறது. பாடல் காட்சிகளைப்படமாக்குவதில் இவருக்கு இணை இவரேதான் என்ற பெயர் பெற்றவர்.

‘சித்ராலயா’ கோபு:

1936 ஆம் ஆண்டு பிறந்த இவர் டைரக்டர் ஸ்ரீதரின் பால்ய சிநேகிதர். தன்னுள்ளிருந்த ‘ஹ்யூமரிஸ்ட்’டை      வெளிப் படுத்தியவர் ஸ்ரீதர்தான் என்கிறார். ஸ்ரீதருடன் ஆரம்ப காலம் முதல் பணியாற்றியவர். எல்லாப் படங்களின் நகைச்சுவைப் பகுதிகளையும் எழுதியவர். காதலிக்க நேரமில்லை படத்தின் டைட்டில் கார்டில் ”கதை,வசனம் – ஸ்ரீதர் – கோபு” என்று தனக்கு நிகரான அந்தஸ்தைக் கொடுத்த ஸ்ரீதரைப்பற்றிப் பெருமைப்படுகிறார். இவர் முதன் முதலாக டைரக்ட் செய்த படம், ஏவிஎம் மின் “காசேதான் கடவுளடா”! மிகச் சிறந்த, நல்ல நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரர்– காதலிக்க நேரமில்லை, கலாட்டாக் கல்யாணம், சுமதி என் சுந்தரி, வீட்டுக்கு வீடு,உத்தரவின்றி உள்ளே வா போன்ற நல்ல நகைச்சுவைப் படங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவையே! சோவுடன் தனக்கிருந்த தனிப்பட்ட நட்பை மிகவும் சிலாகித்துக் கூறுகிறார்.

ஸ்ரீதர், நடிகர் திலகம், கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன், ஆகிய திறமை மிக்ககலைஞர்களுடன் பணி புரிந்ததைப் பெருமையாக எண்ணி மகிழ்கின்றனர் சி விஆரும், கோபுவும்!

நிகழ்ச்சி துவங்குமுன்,  சுமார் 35 நிமிடங்களுக்கு, இந்த மூன்று ஜாம்பவான்களின்படங்களிலிருந்து வசனம் மற்றும் சில காட்சிகளின் ”க்ளிப்பிங்” காட்டப்பட்டது.அரங்கத்தில் எழுந்த கைதட்டல்களும், சிரிப்பும், மகிழ்ச்சியும் இவர்களின் புகழை உரத்துச் சொல்வதாய் அமைந்திருந்தன !

ஓர் இனிமையான ஃப்ளாஷ் பாக்” தான் – சந்தேகமே இல்லை!

Image result for காதலிக்க நேரமில்லை  Image result for காதலிக்க நேரமில்லை   Image result for vaa vaathyare uttaande song by cho