
படிக்கும் சவாலுக்குத் தயாரா ? குறைந்த பட்சம் இதைச் செய்யவேண்டும்.
அச்சு இதழ் , மின் புத்தகம், ஆடியோ புத்தகம் இவற்றுள் எதை வேண்டுமானாலும் படிக்கலாம்.
1. மாதம் ஒரு நாவல் ! ( குறைந்தது 150 பக்கம் ) – 30 மதிப்பெண்
2. மாதம் மூன்று குறு நாவல்கள் ( குறும்புதினம் மாத இதழ் படித்தாலும் சரி!) – 30 மதிப்பெண்
3. மாதம் ஐந்து சிறுகதைகள் /கட்டுரைகள் ( உதாரணமாக , குவிகம் சிவசங்கரி சிறுகதைத் தேர்வில் வந்த கதைகள் , குவிகத்தில் வரும் கதைகளைப் படிக்கலாம்) – 25 மதிப்பெண்
4. மாதம் 5 கவிதைகள் (விருட்சம் சொல் புதிதில் படிக்கலாம் ) – 15 மதிப்பெண்
மொத்தம் மதிப்பெண்கள் 100.
100 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறுபவர்கள் அனைவர் பெயர்களும் குவிகம் இதழில் வரும்.
அவர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் 100 ரூபாய் பரிசளிக்கப்படும்
ஜனவரி 1 முதல் ஜனவரி 31 தேதிக்குள் படித்ததை இந்த கூகிள் பாரத்தில் பிப்ரவரி 7 தேதிக்குள் பதிவு செய்யவேண்டும்.
https://forms.gle/MsUi67frUU8oEDq56

ரூபாய் 100 என்பது வாசகர்கள் மீது நீங்கள் செய்யும் மதிப்பீடோ? பணம் முக்கியமில்லை தேர்வு ஆவதுதான் முக்கியம் என்றால் இனி ஒரு ரூபாய் என மாற்றலாம்.
LikeLike
தங்கள் கருத்துக்கு நன்றி. இந்தப் போட்டி நண்பர்களைப் படிக்க வைக்கவும், படித்ததைப் பகிர்ந்து கொள்ளவும் மட்டுமே! முதலில் நீங்கள் சொல்வது போல ஒரு ரூபாய் என்றுதான் யோசித்தேன். பின்னர் குறுக்கெழுத்துப் போட்டிக்கு ரூபாய் 100 என்று வைத்தது போல இதற்கும் நூறு என்று வைத்துள்ளோம். இது மாதா மாதம் தொடரும்.
LikeLike