ஜோதிட கேள்வி & பதில்

உங்கள் சார்பாக இன்றைய கேள்விகளைக் கேட்டவர்: குவிகம் சுந்தரராஜன் 

சாயின் சுட்டியான பதில்கள் இதோ!

 

Enga Veetu Pillai (1965) - Photos - IMDb1. கேள்வி:  அது என்ன கொறடா ? 

சாய் பதில்:   கட்சியின் சார்பாகக் கட்டளைகளை நிறைவேற்றுபவர் கொறடா.  நாடாளுமன்றக் கூட்டங்களில் தவறாது கலந்து கொள்ளக் கட்டளையிடுபவர். மேலும் தங்கள் கட்சித் தலைமையின் கொள்கைகளின்படி, சட்டமன்றங்களில் கொண்டு வரப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவாக அல்லது எதிராகவோ தமது கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என ஆணையிடும் அதிகாரம் படைத்தவர் . கொறடாவின் கட்டளையை மீறி நடந்து கொள்பவர்கள், சட்டமன்றத்திலிருந்து நீக்க, சட்டமன்றத் தலைவருக்குக் கொறடா பரிந்துரைப்பார்.

இது  எல்லாருக்கும் தெரியும். கொறடா என்றால் உருது மொழியில் குதிரைச் சவுக்கு என்று பொருள்.  ஆஜர் போல இதுவும் கடன் வாங்கிய சொல். ஆக ஆங்கிலத்தின் Whip என்பதற்குத் தமிழில் அரசியல் அவதாரம் எடுத்த சொல்! 

 

Classic Globe2. கேள்வி: பூலோகம், பூகோளம் — என்ன வித்தியாசம்?🌸 🌺 பூலோக வைகுண்டம் 🛕🙏, #பூலோகவைகுண்டம் #srirangam #ஸ்ரீரங்கம் | Bhagavathgeethai guide of life | Facebook

சாய் பதில்: பூலோகம் நாம் வாழும் உலகம்; பூகோளம் அந்த உலகத்தைப் பற்றிப் படிக்கும் வரைபடம்! பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் 

 

 

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் ...3. கேள்வி: எல்லோரும், எல்லாரும் — என்ன வித்தியாசம்?

சாய் பதில்:  இரண்டுமே சரி.  இலக்கணத்தில் சிறு வித்தியாசம்; “ஆ ஓ ஆகலும் செய்யுளில் உரித்தே” என்னும் இலக்கண விதியின்படி இது அமைகிறது. நடைமுறையில் எல்லாரும்  எல்லோரையும் சேர்த்துக்கொள்வர்!

‘எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்’ என்று  சொன்ன கண்ணதாசன்  ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ என்றும்   பாடியிருக்கிறார். 

 

4. கேள்வி: சங்கம் தமிழ்ச் சொல்லா?

தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் சங்கத்தை_பதிவு_செய்வது_எப்படி? ஒரு சங்கத்தின் செயல்பாடுகள் என்பது அச்சங்கத்துக்கும் அதன் ...சாய் பதில்:  தமிழில் சங்கம் ( சங்கு ஒலித்துக் கூப்பிடும் கூட்டம்) உண்டு; சமஸ்கிருதத்திலும் அதன் வேருண்டு. இந்த இரு மொழிகளுக்கிடையே பல ஒற்றுமைகள் சங்கமிக்கின்றன. இதை வைத்துக் கொண்டு உங்கள் வ வே சு அவர்கள் தலைமையில் ஒரு பட்டி மன்றம் நடத்தலாம். 

என சாய்? இதற்கு ஏன்  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம்? சாய் பதில்: சங்க காலம் வருத்தப்படாத வாலிபர்கள் காலம். 

 

காவி உடையில் திருவள்ளுவர்: பா.ஜ.,வால் சர்ச்சைகோவை: மீண்டும் வெடித்த சர்ச்சை ...5. கேள்வி: திருவள்ளுவர் சமணரா?

சாய் பதில்:  முதல் படம் காவி பூசப்பட்ட வள்ளுவர் படம் . இரண்டாவது படம்  1959 இல் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரபூர்வ படம்.  இந்தத்  திருவள்ளுவர் உருவப்படத்தை வரைந்தவர் ஓவியர் கே. ஆர். வேணுகோபால் சர்மா! விவாதம் இன்னும் தொடர்கிறது; வள்ளுவரோ மதங்களைக் கடந்து வாழ்கிறார்! 

 

1977 சம்பவம் "ரிப்பீட் மோட்".. MGR-ஐ ...

 6. கேள்வி: எம்.ஜி.ஆர்., விஜய் இருவருக்கும் உள்ள முக்கிய ஒற்றுமை, வேற்றுமை என்ன?

சாய் பதில்: இருவரும் திரையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள்; ஒருவர் அரசாண்டார், மற்றவர் அரசாள்கிறார். அரசியல் அரங்கில் அவர் படம் நேற்று ஓடியது. இன்று இவர் படம் ஓடுகிறது. காட்சிகள் மாறும். தர்பார் ஒன்றே. 

“எம்.ஜி.ஆர் என்பவர் ஒரு சகாப்தம், அவர் காட்டிய வழியில் மக்கள் சேவை செய்ய வந்தவன் நான்”  என்கிறார் விஜய்.