மருமகள் அனன்யா வீரராகவன் உதவியால் இந்த ஆண்டு நவராத்திரி சமயம் புத்தகக் கொலு ஒன்றை AI மூலம் வெளியிட்டுள்ளேன்.
அதில் நாள் 1 என்பதை அழுத்தினால் 15 புத்தகங்கள் 5 படிகளில் இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு புத்தகத்தையும் அழுத்தினால் அதன் அட்டைப்
படம் பெரியதாக விரியும்.
நண்பர்களை புத்தகக் கொலுப் படியில் இருக்கும் 15 புத்தகங்களில் எத்தனை படித்திருக்கிறார்கள் என்பதைப் பதிவிட வேண்டினோம் . அத்துடன் அன்றைய நாளில் வெயிட்ட 15 புத்தகங்களில் அவர்களுக்குப் பிடித்த புத்தகத்தின் சிறப்பு பற்றி 50 வார்த்தைகளுக்குள் பதிவிடும்படி வேண்டிக்கொண்டோம்.
ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த பதிவைத் தேர்ந்தெடுத்து, விஜயதசமி அன்று 10 பரிசுகள் வழங்க உத்தேசித்திருக்கிறோம்.
கொலுப்படியைப் பார்க்க இந்த லிங்க்கை அழுத்தவும்.

