மெல்லிசை மன்னர் சோக இசையைப் பரப்பிவிட்டு சென்றுவிட்டார்!

தமிழ்ப் பாடல்கள் உள்ளவரை அவரது இசையும் இனிமையும் நிலைத்து நிற்கும்!

அவரது பிரிவால் வாடும் தமிழ்த் திரை உலகத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது? 

அவரது புகழ் அஞ்சலி  அடுத்த குவிகம் இதழில் !!

குவிகம் இலக்கிய வாசல் – சிறுகதைச் சிறுவிழா

குவிகம் இலக்கிய வாசல் – 

நான்காவது நிகழ்வு

 

image

                                  “சிறுகதைச்  சிறுவிழா”


கலந்துகொள்வோர் தங்கள் சிறுகதைகளை வாசித்து மகிழ்விக்கக் கோருகிறோம்.

இடம்:  ஸ்ரீநிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் சாலை,                  ஆழ்வார்பேட்டை, சென்னை 600018. நாள்:   

18.07.2015 சனிக்கிழமை மாலை 6.15 – 8.00

பரிசுகளும் உண்டு.

நேரம் கருதி சிறுகதைகள்  நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

படிக்கப்படும் கதைகள் குவிகம் மின்னிதழில் பிரசுரிக்கப்படும்.

பின்னால் நடத்தத்  திட்டமிட்டு வரும் சிறுகதைப் பட்டறைக்கு இது ஓர் முன்னோட்டம்.

கதைகள் வாசிக்க விரும்பும் அன்பர்கள் பெயர்களை ilakkiyavaasal@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது  9791069435 என்ற அலைபேசியில் பதிவு செய்துகொள்ளவும்.

ஷாலு மை வைஃப்

ஒரு வழியாக ஷாலுவையும் அவள் குருஜினியையும் சிங்கப்பூர் விமானத்தில் ஏற்றிவிட்டு ஷ்யாம் ஷிவானியுடன் காரில் வந்துகொண்டிருந்தேன். 


image

அவ்வளவு அழகா ஆர்கியு பண்ணின ஷிவானி ஷாலு கிளம்பியதும் அழ ஆரம்பித்துவிட்டாள். அது தான் .குழந்தை  – அது தான் தாய்ப்பாசம்.ஷ்யாம் அழவில்லை ஆனால் உர்ரென்று இருந்தான்.எனக்கும் கொஞ்சம் சங்கடமாகத் தான் இருந்தது. 

திடீரென்று போன் அலறியது. என்னுடைய பாஸ்.ராத்திரி பதினொரு மணிக்கு போன் பண்றாரே என்று தடுமாறி எடுத்தால் ஸ்பீக்கர் வேறு ஆன் ஆகிவிட்டது. “ பெண்டாட்டி   ஊருக்குப் போயிட்டாளா? தங்கமணி … என்ஜாய்..” என்று ஜனகராஜ் பாணியில் சொல்லிவிட்டு வைத்து விட்டார். தேவை தானா? 

மறுபடியும் போன். இந்த தடவை ஷாலு.  இமிகிரேஷன்,செக்கப் கஸ்டம்ஸ் எல்லாம் முடித்துவிட்டாளாம்.  செக்யூரிட்டி செக் முடியர வரைக்கும் குழந்தைகள் கூட பேசலாம்னு போன் பண்ணினாளாம். ஷ்யாம் முதல்லே போனைப் பிடுங்கினான். ஆனால் எதுவும் பேசவில்லை. அவள் நிறைய கேள்விகள் கேட்கிறாள் போல இருக்கு. அவன் எல்லாத்துக்கும்  ஒரு  வார்த்தையிலே பதில் சொல்லிக் கொண்டிருந்தான். 

சரி.  

இம்ம்  

ஓகே .. 

சரி சரி.. 

ஓகே ஓகே . 

முடியாது. 

வேண்டாம். 

சரி சரி. 

அம்மா பிளீஸ்.. 


image

இதுக்கு மேல் ஷிவானிக்குப் பொறுமை போய் விட்டது. ’ என்கிட்டே கொடு அண்ணா ’ என்று போனைப் பிடுங்கிக் கொண்டாள். 

அதற்குப் பிறகு நடந்தது ஒரு பாசப் போராட்டம். ஷிவானி தேம்பித் தேம்பி அழ  ஆரம்பித்துவிட்டாள். கடவுளே! பத்து நிமிடம் கூட ஆகலை. இன்னும் பத்து நாளை எப்படி சமாளிப்பது?ஆனால் அந்த அழுகைக்கு மத்தியில என் ஆபீஸ் பாஸ் ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா.. என்ஜாய்!“ என்று சொன்னதை ஷாலுவிடம் போட்டுக் கொடுக்க மறக்கவில்லை. அது தான் ஷிவானி! 

அப்பா! அம்மா உன்கூட பேசணுமாம்!

என்னாச்சு உங்க பையனுக்கு?

என்னாச்சு?

எதைச் சொன்னாலும் அப்படியான்கிற மாதிரி பேசரான்!

அப்படியா?

இதே தான் ! உங்களை மாதிரி ஒத்தை வார்த்தையில் பதில் சொல்றான்?

ஓஹோ!

அப்படியே உங்களைக் கொண்டிருக்கான்! கல்லுளிமங்கன்!

நானா அவனா ? 

ரெண்டு பெரும் தான். 

அப்போ ஷிவானி?

அவளுக்கு என்னை மாதிரி  பூஞ்சை மனசு! ஏன் இப்படி அழறா? 

இப்போ நீ எதுக்கு அழறே? அதே மாதிரி தான் அவளும்.அவ அப்படியே உன்னைக் கொண்டிருக்கா?

ரொம்ப சரி! நீங்க உங்க பாஸ்சொன்னமாதிரி என்ஜாய் பண்ணுங்கோ!

ஷாலு! கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கோ! நீயாத்தானே சிங்கப்பூர் போகணும்னு ஆசைப்பட்டே! பாக்கிறவா எல்லாம் நான் கொடுமைப் படுத்தி உன்னைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பறேன்னு நினைச்சுப்பா!

ஆமா! என் பொறந்த வீடு என்ன சிங்கப்பூரா? பிளேன்ல  போறதுக்கு? 

உங்க ஊர் கோனேரிராஜகீழ்ப்பாக்கத்துக்கு உன்னைப் பொண்ணு பாக்க வந்த போதே  ஒத்தை மாட்டு வண்டியில தானே வந்தேன்!

இப்போ இது ரொம்ப அவசியமா? செத்தே இருங்கோ! குருஜினி ஏதோ சொல்கிறார். உங்களோட தத்துப்பித்துப்  பேச்சைக் கேட்க இப்ப நேரமில்லை. நீங்க வீட்டுக்குப்  போங்கோ! அப்பறம் கூப்பிடறேன்!

பாத்து ஷாலு! டேக் கேர்!

போன் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தது. 

வீட்டுக்குப் போய்ச் சேரும் போதே ராத்திரி பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. குழந்தைகள் இரண்டும் துவண்டு  போய் தூக்கம் பிடித்து விட்டார்கள். எனக்கு வீட்டில் ஷாலு இல்லாதது என்னவோ போலிருந்தது. தூக்கமே வரவில்லை. ஷாலு பிளைட் கிளம்ப  இன்னும்  ஒன்றரை மணி நேரம் இருக்கு. கண்டிப்பா போன் பண்ணுவா. அதுவரைக்கும் டி வி ஏதாவது பாக்கலாம்னு ரிமோட்டை எடுத்து வழக்கம் போல் ஒவ்வொரு சானலா மாற்றிக் கொண்டிருந்தேன். என் பாஷையில் டி வி பிரவுஸ் செய்துகொண்டிருந்தேன். 

ஒரு சானலைக்  கூட ஒழுங்கா பாக்க மாட்டீங்க! ! தானும் பாக்காம மத்தவங்களையும் பாக்கவிடாம அப்படியென்ன உங்க மனசில ஒரு சேடிசம்?  – ஷாலு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் நான் டி வி ரிமோட்டைத் தொட்டதும் பாடும்  முதல் பல்லவி இது! அதுக்கப்பறம் அவ அனுபல்லவி பாடுவா! நான் சரணம் என்று ரிமோட்டைக் கொடுத்துட்டு ( அப்படி தூக்கி எறியாதீங்கோ! உடைஞ்சா உங்களுக்கென்ன? என் சீரியல் தான் அம்போ ஆயிடும்) கம்ப்யூட்டர்  மவுசை எடுத்துக் கொண்டு விடுவேன். ( எப்பப் பாத்தாலும் கம்ப்யூட்டர்  

கம்ப்யூட்டர்  ! வீட்ல நாலு மனுஷா இருக்காளே அவா கூட கொஞ்சமாவது பேசணும்னு உங்களுக்குத் தோணவே தோணாதா ? – வீட்டிலே நாம மூணு பேர் தானே இருக்கோம். உன் கசின் சிஸ்டர் வந்திருக்கான்னு சொல்லவே இல்லையே! )  இந்த மொக்கை ஜோக்குக்கெல்லாம் அவள் மசிய மாட்டாள்.

அப்போது தான் நியூஸ் 7 சானலில் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு என்ற சேதி முக்கிய செய்தியாக வந்துகொண்டிருந்தது. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்ன என்று பார்க்க முயலும் போது திடீரென்று கரண்ட் கட்டாகி டி‌வி ஆப் ஆகிவிட்டது. இன்வர்ட்டரை சரி  பண்ணுங்கோன்னு ரெண்டு வாரமா ஷாலு சொல்லிக் கொண்டே இருந்தா. நான் தான் அசால்ட்டா இப்பெல்லாம் அம்மா கரண்ட் போறதேயில்லை தெரியுமோ? என்று சொல்லிக் கொண்டிருந்தேன். 

ஷாலுவுக்குப் போன் செய்தேன். ரிங் அடித்துக் கொண்டே இருந்தது. அவள் எடுக்கவில்லை. எனக்குப் பயத்தில் வேர்த்தது.  

image

 சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு  

 சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு  

 சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

அந்த செய்தியே என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. 

சட்டென்று வீட்டுக்கு வெளியே  வந்து பார்த்தேன். இன்னிக்கென்று எந்த வீட்டிலும் லைட்டே இல்லை. யார் தூங்கிட்டா இல்லே யார் முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கானு தெரியலை. கரண்ட் கட் ஆனாலும் இன்வார்ட்டர் கரன்ட்டில் ராத்திரி பூரா டி வி பார்க்கும் நாலாம் மாடி சில்க் ஸ்மிதா…

( அப்படி சொல்லாதீங்கோ! அவ காதிலே விழப் போகிறது! அப்பறம் அவ ஊர் கடப்பா கல்லால  தான் அர்ச்சனை  நடக்கும் –

அவ கணவனுக்கு எப்போதும்  நைட் டியூட்டி அவ என்ன பண்ணுவா?  

)

சில்க் ஸ்மிதா…

வீடு கூட இருளடைந்திருந்தது. இன்னிக்கு அந்த தாடிக்கார தெலுங்கானா பாபுவுக்கு ஆபீஸில் நைட் டியூட்டி இல்லை போலிருக்கு. 

யார் வீட்டுக் கதவைத் தட்டலாம்னு யோசிக்கும் போது மொபைல் அலறியது.  

கோனேரிராஜகீழ்ப்பாக்கத்திலிருந்து அவள் அப்பா! "மாப்பிள்ளை ! ஷாலு சௌகரியமா பிளேன் ஏறிட்டாளா?”  அவ சகட  ராசிக்காரி.எப்பவும் துருதுருன்னு இருப்பா.! என்ன!  பதிலே சொல்ல மாட்டேங்கிரேள்?  சித்தே இருங்கோ! ஏதோ டிவியில ஏதோ சொல்றான்.. மொபைல் கட்டாகிவிட்டது. ஷாலுவிற்கு ஏழெட்டு முறை போன் செய்தேன். ரிங் போகிறது. “இந்த இணைப்பாளர் உங்களுடன் பேசப் பிரியப் படவில்லை” என்ற  அர்த்தத்தில் தமிழ், ஹிந்தி, இங்கிலீஷ் பாஷையில் கைபேசி அலறியது. 

எனக்கு டென்ஷன் ஏறத் தொடங்கியது. 

பாகுபலியின் முதல் பாகம் இப்போது வெளிவந்திருக்கிறது!

பாராட்டு மழையில் குளிக்கிறார் டைரக்டர் ராஜமௌளி! 

பிரும்மாண்டத்தில் சங்கரைத் தூக்கி சாப்பிட்டுவிட்டாராம்!

பொன்னியின் செல்வன் திரையில் வரும் காலம் அதிக தூரத்தில் இல்லை! வந்தியத்தேவனையும் குந்தவையையும் ராஜராஜ சோழனையும் பார்க்கப் பொறுத்திருப்போம்!

தி.ஜா பக்கம்

வீடு!

image


ஜானகிராமனின் தனித்தன்மையான பெண்டாளும் கதை இது!

ஒரு டாக்டர். அழகான பெண்டாட்டி. நல்ல கொழந்தைகள். அருமையான வீடு. வீட்டைப் பற்றி டாக்டருக்கு எப்பவும் பெருமை. கம்பவுண்டர் மகாதேவன் வந்து சேர்ந்தான். அவனுடைய சேவையைப் பற்றிச்   சொல்கிறார். .  "பால் வாங்கி மோர் வாங்கி  ஒரு வேலைக்காரன் செய்துவிட்டான்"   என்று பாரதியார் பிரமாதமாக எழுதிவிட்டார். மகாதேவனைப் பார்த்திருந்தால் ‘மகாதேவன் பிள்ளைத் தமிழ்’ என்று காவியமே எழுதியிருப்பார்.

அப்படிப்பட்ட மகாதேவன் டாக்டர் ஊருக்குப் போய் , நடு ராத்திரி வரும் போது அவர் வீட்டில் அவர் கட்டிலில் படுத்திருக்கிறான். அவர் மனைவி சந்தோஷமா தரையில் படுத்திருக்கிறாள். அவர் கட்டிலில் அவன் உடம்பிலிருந்த சந்தன வாசனை அவருக்குக் குமட்டியது. காந்தி செத்துப் போனாப்பல இருந்தது. அவளின் தலையைப் பிடித்துக் குலுக்கினார். மகாதேவனை வேலையை விட்டுத் தொரத்தினார். அதற்குப் பிறகு அவள் தைரியமா அவன் கூட   வெளியில் சுற்ற ஆரம்பித்தாள்.

image

வீட்டை வித்து பாதியைக் கொடுத்திடு நான் போயிடறேன் என்றாள்.  வீட்டை விக்க முடியாதுன்னு ஒத்தக் காலிலே நின்னார் டாக்டர். ஒரு நாள் தலைவிரி கோலமா வந்தாள். மகாதேவன் செத்துப் போயிட்டானாம்.வீட்டை வித்துக் கொடுத்தா அவ போயிடுவா! அதனாலே வீட்டை வாங்க வர்ரவங்க கிட்டே எக்குத் தப்பா பேசி விரட்டிவிட்டுக் கொண்டே அவளுடன்  அதே வீட்டில் இருக்கிறார் டாக்டர்.

image

ஆட்டுக்கால் பகவதி தேவி – கின்னஸ் சாதனை படைத்த பக்தர் கூட்டம் Attukal Devi : 360 degree virtual tour of Attukal Devi (Attukal Bhagavathy) Temple Trivandrum, Kerala, India

image

சிறப்பு நன்றி: Leen Thobias  Powered by www.p4panorama.com © attukaldevi.com 2007 – 2015 Powered by Nakshathra Design

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஆட்டுக்கால் பகவதி அம்மன். கேட்கும் வரத்தைத் தருபவள். 

திருவனந்தபுரத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இருக்கும் இந்த அம்மனைத் தரிசிக்க இந்தியாவின் எல்லா பாகங்களிலும் இருந்து பக்தர்கள் குவிகிறார்கள். . 

தமிழக மற்றும் கேரளாவின் பாரம்பரியங்கள் இணைந்திருக்கும் கோவில் இது. .

கண்ணகி தான் இந்தக் கோவிலின் மூல நாயகி. 


கண்ணகி  கோவலன் இறந்த பிறகு மதுரையை எரித்து கொடுங்களூர் சென்று வானுலகம் அடையுமுன் வந்த இடம் தான் ஆட்டுக்கால் பகவதி என்ற ஐதீகம் உண்டு. 


பிப்ரவரி மாதம் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வருகின்றனர். காலையில் தலைமைப் பூசாரி மூல அடுப்பைப் பற்ற வைத்ததும் அந்த  நெருப்பு பொங்கல் வைக்கத் தயாராயிருக்கும் மக்களுக்கு வழங்கப்படும். வந்திருக்கும் லட்சோப லட்சம் மக்களும் மாலைக்குள் பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைத்து பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டாடுகின்றனர். 

10 கிலோமீட்டர் சுற்றளவில் பொங்கல் வைக்கப்படுகிறது.

இத்தனை பெண்கள் குவிந்து வழிபாடு செய்வதில் இந்த ஆட்டுக்கால் பகவதி  உலக சாதனையை ஏற்படுத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. 

ஆட்டுக்கால் பகவதி தேவி – கின்னஸ் சாதனை படைத்த பக்தர் கூட்டம் Attukal Devi : 360 degree virtual tour of Attukal Devi (Attukal Bhagavathy) Temple Trivandrum, Kerala, India