“ டாக்டர்..
என்ன சொல்றீங்க..?
என்று கேட்டான் நாவரசு பதற்றத்துடன். அவன்
மனைவி மேகலை கவலையோடு அருகில் நின்றிருந்தாள்.
அந்த ஐந்து
மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்தது டாக்டர் செல்வராகவனின் கிளினிக்.
“ ஐ ஆம் ஸாரி..
மிஸ்டர் நாவரசு.. காயம் என்னவோ சின்னக் காயம்தான். பட்.. ஓபன் வூண்ட்.. உங்க வைஃப் நன்றாகக் கழுவி
ரெண்டு நாளா காயத்தை டிரஸ் செய்து கொண்டிருந்தது வாஸ்தவம்தான். ஆனா காயம் இன்ஃபெக்ட் ஆயிருக்கு. அது எத்தனை தூரம் புரையோடி இருக்குன்னு பார்க்கறதுக்கு
சில டெஸ்டுகளுக்கு எழுதித் தரேன். செக் பண்ணி ரிப்போர்ட் கொண்டு வாங்க.. அப்புறம்
அதன்படி மருந்து கொடுக்கலாம். இப்போ பெயின் கில்லரும் ஜெனரல் ஆன்டிபயாடிக்கும்
எழுதித் தரேன். இட் வில் டேக் கேர் ஃபார்
தி டைம் பீயிங்..” என்று கூறியபடியே ஒரு பேப்பரில் அரைப் பக்கத்துக்கு டெஸ்டுகளும், இன்னொரு பேப்பரில் சில மருந்துகளும் எழுதிக் கொடுத்தார்
டாக்டர்.
“ ஆனால் எப்படி
டாக்டர்… இதோ பாருங்க இந்த பஞ்சாலதான் அவனுடைய காயத்தைக் க்ளீன் பண்னினேன்”
என்று ஒரு பஞ்சு ரோலை எடுத்து நீட்டினாள் மேகலை.
அதைப் பார்த்த
டாக்டரின் கண்களில் ஒரு மின்னல்.
“ ஒரு
நிமிடம்.. இங்கே வாருங்க நாவரசு..” என்று அழைத்தபடியே அந்த கிளினிக்கின் ஒரு
மூலைக்குச் சென்றார் டாக்டர். அங்கு ஒரு
மேஜையில் ஒரு மைக்ரோஸ்கோப்பும்,
டேபிள் லாம்பும் இருந்தன.
அந்த டேபிள்
லாம்ப் ஸ்விட்ச்சை ஆன் பண்ணிய டாக்டர், அந்த பஞ்சு ரோலின் ஒரு பகுதியைப் பிய்த்து அந்த விளக்கு வெளிச்சத்தில் காட்டியபடி
உன்னிப்பாகப் பார்த்தார்.
அதைப்
பார்த்துக் கொண்டிருந்த நாவரசு, “
பாருங்க டாக்டர்.. இட் ஈஸ் வெரி க்ளீன்.. பாக்டீரியா ஒன்றும் தென்படவில்லையே.”
என்றான்.
“ ஒன் மினிட்..”
என்றவர் அந்த பஞ்சை மைக்ரோஸ்கோப் லென்ஸின் அடியில் வைத்துப் பார்த்தார்.
சாதாரணக் கண்
பார்வைக்குத் தெரியாத பாக்டீரியாக்கள், வைரஸ்கள் நர்த்தனமாடிக் கொண்டிருந்தன.
“ கம் ஆன்..
இப்பப் பாருங்க” என்று நாவரசையும் அழைத்துக் காட்டினார்.
மைக்ராஸ்கோப்
வழியாகப் பார்த்தவன் திடுக்கிட்டுப்போய் நின்றான். “ எப்படி.. டாக்டர்.. இந்தக் கம்பெனி, நல்ல கம்பெனி
ஆச்சே.. இது எப்படி சாத்தியம்” என்றான் நாவரசு.
“ எனக்கு வர
கேசஸ்லே திஸ் ஈஸ் நாட் தி ஃபஸ்ட் கேஸ்.
காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு.
திஸ் ஈஸ் எ ராக்கெட்..
ஆஸ்பத்திரியிலே உள்ள அஸிஸ்டென்டுகளைக் கையிலே போட்டுக் கொண்டு, அங்கு டாக்டர்கள் யூஸ் பண்ணிய பஞ்சை மலிவாக வாங்கிக்கிறாங்க இந்த கூட்டம். அந்த அஸிஸ்டென்டுகளும் விளைவு தெரியாம, ‘ என்ன ஆயிடப் போறது.. அவர்கள் சுத்தம் செய்துதானே விற்கப் போறாங்க’ என்று சில சில்லரைக் காசுக்கு ஆசைப்பட்டுக் கொடுத்திடறாங்க.
இவங்க அந்தப் பஞ்சை மேல்வாரியா சுத்தம் செய்து பெயர் பெற்ற கம்பெனியின் பெயரில்
டியூப்ளிகேட் பேக் செய்து விற்றுடராங்க. ஏதோ, ஒரிஜினலாக, அதிகம் வீரியம் இல்லாத பாக்டீரியாக்கள், வைரஸ்களை க்ளீன் செய்த பஞ்சாக இருந்தால் இந்த டியூப்ளிகேட்
பஞ்சு யூஸ் பண்ணறவங்களை அதிகம் பாதிப்பதில்லை… பட், வீரியம் மிக்க வைரஸும்,
பாக்டீரியாக்களும் உள்ள பேஷன்டை க்ளீன் பண்ணிய பஞ்சு என்றால் … மை காட்.. ஐ
கான்ட் இமாஜின்..”
நாவரசின்
தண்டுவடத்தில் ஜிலீரென்றது.
“ இன்னொரு
விஷயம் தெரியுமா? இந்த வைரஸ் ஆர் பாக்டீரியாக்கள் இன்னொருத்தருக்குப்
போகக் கூடாதென்றுதான் டிஸ்போஸபிள் ஸிரிஞ்சை யூஸ் பண்ணறோம். ஆனா, அதிலே கூட இந்த ஆஸ்பத்திரியில் உள்ள அசிஸ்டென்டுகள் செய்யும் கொடுமை இருக்கே…
நார்மலி, ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்ஸ், நியூ ஸிரிஞ்சை எடுத்து மருந்தை நிறைத்து இஞ்செக்ஷன்
கொடுப்பதற்கு அசிஸ்டென்ட் ஹெல்ப் எடுத்துக்கறாங்க. ஆனா அந்த அசிஸ்டென்ட்ஸ்
ஸிரிஞ்சை மாத்தறது இல்லே. ஒருத்தருக்கு யூஸ் பண்ணிய ஸிரிஞ்சையே இன்னொருத்தருக்கும்
யூஸ் பண்ணிடறாங்க. ஆனால் நியூ ஸிரிஞ்சை
எடுத்து யூஸ் பண்ணியதா கணக்கில் எழுதிடறாங்க.
சில சில்லரைக் காசின் மீதுள்ள ஆசைக்காக, பட்.. அட்.. வாட்.. காஸ்ட் .. என்னுடைய கிளினிக்கில் இது நாலாவது கேஸ். ஆல் ரெடி போலீஸிலே ரிப்போர்ட் பண்ணி
இருக்கேன். தே ஷூட் ஹாவ் ஃபௌண்ட் அவுட்
ஸம்திங்க் பைதிஸ் டைம்..” என்று கூறியபடியே நாவரசன் மகன் காயத்துக்கு மருந்து
போட்டு டிரஸ் செய்ய ஆரம்பித்தார்.
தலை சுற்றியது
நாவரசுக்கு. அரசாங்க ஆஸ்பத்திரியில்
அசிஸ்டென்டாக வேலை பார்க்கும் அவன் டாக்டர் கூறியபடி, பேஷண்ட்ஸுக்கு யூஸ் பண்ணிய பஞ்சை வித்திருக்கிறான். ஒரு பேஷண்டுக்கு யூஸ் பண்ணிய ஸிரிஞ்சை இன்னொரு
பேஷண்டுக்கு யூஸ் பண்ணுவதும்,
புது ஸிரிஞ்ச் யூஸ் பண்ணியதாகக் கணக்குக் காட்டுவதும் அவன் விஷயத்தில் சர்வ
சாதாரணம்.
இதைத்தான் ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்று சொல்வார்களோ..?
நான் செய்து வந்த அநியாயம்,
என் பையைனையே, சுற்றி விட்ட ‘பூமராங்’ துவங்கிய இடத்துக்கே வருவது போல், பாதித்து விட்டதோ’ என்ற கலவரத்தோடு அந்தக் கிளினிக்கின் ஜன்னல் பக்கத்தில் இருந்த நாற்காலியில்
அமர்ந்தான். ஜன்னல் வழியே அந்தக் கட்டிடத்தின் மெயின் கேட்டைத் தற்செயலாகப்
பார்த்தான்.
போலீஸ் வான்
அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது.
கம்ப்யூட்டர் , இன்டர்நெட் இவற்றை எல்லாம் தங்கள் பையன்கள் -பெண்களிடமிருந்து தெரிந்து கொள்ளத் துடிக்கும் ஆர்வக் கோளாறுள்ள அப்பா ஒருவரின் கதை. அவர் தன் பையனுடன் நடத்தும் உரையாடலைக் கேளுங்கள்! உங்கள் வீட்டிலும் நடப்பது போலத் தெரிகிறதா? வீட்டுக்கு வீடு வாசப்படி!
ஹிந்தியில் இருக்கிறதே என்று கவலைப்படாதீர்கள்! நன்றாகவே புரியும் !!
நான் வெங்கட் சாமினாதன். வெசா என்று அழைப்பார்கள் என்னை. விமரிசனாகவும் அறியப்படுகிறேன்.
கடந்த 40 வருடங்களாக தமிழ் நாட்டின் கலை மற்றும் இலக்கிய நடப்புகளைப் பற்றி மனதுக்குப் பட்டதை கஷ்ட நஷ்டங்களைப் பற்றி நினைப்பின்றி எழுதி வந்திருக்கிறேன். ஈஸ்வரோ ரக்ஷது.
ஆனால் ஈஸ்வரனும் ரக்ஷித்ததாகத் தெரியவில்லை. நான் நானாகத்தானே இருக்க முடியும்!
அன்புடன், வெசா
இப்படித் துவங்குகிறது அவருடைய பிளாக் (BLOG )
http://www.vesaamusings.blogspot.com/
இவரைப்பற்றிச் சிலர்:
என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும்
அளவுக்கு, நான் வெங்கட் சாமிநாதனின்
அபிப்ராயங்களை மதிக்கிறேன். – க.நா.சு
சாமிநாதனது பேனா வரிகள் “புலிக்கு
தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது” என்றபடி சகலத்தையும் பதம்
பார்க்கும் – சி. சு. செல்லப்பா
தமிழ் கலைத் துறைகள் மீது வெ.சா
கொண்டிருக்கும் ஆவேச ஈடுபாடு, வெகு அபூர்வமானது. தமிழ் இனத்தோடு
தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் தன்மையில் இவரை பாரதியுடன் மட்டுமே ஒப்பிட
முடியும். – சுந்தர ராமசாமி
எந்த மேல் நாட்டு விமரிசன பாணியையும்
கைக் கொள்ளாமல் தன் சுவைக்கு உட்பட்டதை, படைப்பின்
கலாச்சாரப் பின்ணணியோடு பார்க்கும் தனி ரகம், இவரது
விமரிசனம் – கோமல் சுவாமிநாதன்.
, “வெங்கட் சாமிநாதன்: தமிழ் இலக்கியவெளியில் ஒரு காட்டுக் குதிரை” என்ற கட்டுரையில் திருமாவளவன், “வெங்கட் சாமிநாதனுக்கு முன் “விமர்சனமரபு” என்று சொல்லும்படியான ஒன்று இருந்ததா என்பது இன்றைய வாசகன் எதிர்கொள்ள வேண்டிய முதற் கேள்வி,
வெங்கட் சாமிநாதன் நவீன தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். 1950 களில் “எழுத்து” இதழ் மூலமாக தமிழ் கலை-இலக்கியச் சூழலுக்குள் அடியெடுத்து வைத்தவர்
வெங்கட் சாமிநாதன் ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம்,
திரைப்படம், நாட்டார் கலைபோன்ற பல்வேறு துறைகளிலும்
ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும்
முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம்,
நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை வலியுறுத்தியவர்.
மார்க்ஸீய எழுத்தாளர்களும் , திராவிட எழுத்தாளர்களும் தமிழ் எழுத்துலகை ஆக்கிரமித்துக் கொண்ட போது , அவர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஒரே குரல் இவருடையது தான். அதற்காக இவர் CIA ஏஜண்ட் என்றும் , முதலாளித்துவத்தின் கைக்கூலி என்றும் திட்டப்பட்டவர்.
இவர் திரைக்கதை எழுதி, ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளிவந்த அக்ரஹாரத்தில் கழுதை என்ற
திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு
மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
அவருடைய புத்தகங்களான கலை அனுபவம் , வெளிப்பாடு இரண்டும் விமரிசனத்துக்கு விளக்கம் கூறும் அனுபவங்கள்.
கனடாவில் உள்ள டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம்
வழங்கும் 2003ஆம் ஆண்டுக்கான இயல்விருது சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.
அவரது வெளியீடுகள்:
இலக்கிய விமர்சனம்: (கட்டுரைத் தொகுப்புகள்)
1. பாலையும் வாழையும்: அன்னம் பதிப்பகம், (1976) 2. எதிர்ப்புக் குரல், அன்னம் பதிப்பகம்(1978) 3, என் பார்வையில், அன்னம் பதிப்பகம் (1982) 4. என் பார்வையில் சில கவிதைகள்: கலைஞன் பதிப்பகம் (2000) 5. என் பார்வையில் சில கதைகள், நாவல்கள்: கலைஞ்ன் பதிப்பகம்(2000) 6. சில இலக்கிய ஆளுமைகள்: காவ்யா பதிப்பகம் (2001) 7. பான்ஸாய் மனிதன்: கவிதா பதிப்பகம், (2001) 8. இச்சூழலில்: மதி நிலையம் (2001) 9. விவாதங்கள், சர்ச்சைகள்: அமுத சுரபி பிரசுரம்(2003) 10, ஜன்னல் வழியே: சந்தியா பதிப்பகம் (2005) 11. புதுசும் கொஞ்சம் பழசுமாக: கிழக்கு பதிப்பகம்(2005) 12. யூமா வாசுகி முதல் சமுத்திரம் வரை: எனி இந்தியன் பிரசுரம் (2006) 13. க்டல் கடந்து: விருட்சம் பிரசுரம்: (2006) 14. இன்னும் சில ஆளுமைகள்; எனி இந்தியன் பிரசுரம் (2006)
நாடக விமர்சனம்:
15. அன்றைய வரட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை: அன்னம் பதிப்பகம், (1985) 16. பாவைக் கூத்து அன்னம் பதிப்பகம்.(1986) 17. இன்றைய நாடக முயற்சிகள்: தமிழினி பிரசுரம்(2004)
திரைப்படம்
18. அக்கிரகாரத்தில் கழுதை {திரைப்பட பிரதி} (இரண்டாம் பதிப்பு: காவ்யா பதிப்பகம்(1997) 19. திரை உலகில் (திரை விமர்சனங்கள்) காவ்யா பிரசுரம்(2003)
கலை விமர்சனம்
20. கலைவெளிப்பயணங்கள்: அன்னம் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு (2003) 21. கலை உலகில் ஒரு சஞ்சாரம்: சந்தியா பதிப்பகம்(2004) 22. சில கலை ஆளுமைகள், படைப்புகள்: சந்தியா பதிப்பகம் (2004)
தொகுப்புகள்
23. தேர்ந்தெடுத்த பிச்சமூர்த்தி கதைகள்: சாகித்ய அகாடமி (2000) 24. பிச்சமூர்த்தி னைவாக: மதிலையம்(2000) 25. யாத்ரா இதழ் தொகுப்பு: பாகம் ஒன்று, : சந்தியா பதிப்பகம்(2005) 26. யாத்ரா இதழ் தொகுப்பு: பாகம் இரண்டு: சந்தியா பதிப்பகம்(2005)
மொழி பெயர்ப்புகள்
27. A Movement for Literature: Ka.Naa.Subramaniam: சாகித்ய அகாடமி(1990) 28. தமஸ்: (நாவல்: ஹ’ந்தி மூலம்: பீஷ்ம சாஹ்னி) சாகித்ய அகாடமி(2004) 29. ஏழாம் முத்திரை: (Ingmaar Bergman’s filmscript); (தமிழில்) : தமிழினி, (2001)
வாழ்க்கை விமர்சன குறிப்புகள்
30. வியப்பூட்டும் ஆளுமைகள்: தமிழினி (2004).
உரையாடல்கள்:
31. உரையாடல்கள்: விருட்சம் வெளியீடு, (2004)
விருது:
டோரண்டோ பல்கலைக் கழகமும் கனடா இலக்கியத் தோட்டமும் இணைந்து அளிக்கும வாழ்நாள் சாதனைக் கான இயல் விருது 2003.
வெங்கட் சாமிநாதன் 80 வயது பாராட்டு விழாவும் , வம்சி பதிப்பகம் வெளியிட்ட, வெங்கட் சாமிநாதன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான “சினிமா என்ற பெயரில்” நூல் வெளியீட்டு விழாவும் 2013 இல் நடைபெற்றது. இந்திரா பார்த்தசாரதி, வெளி ரங்கராஜன், கணையாழி ராஜேந்திரன், சச்சிதானந்தம், பாரதி மணி, சுகா, சீனு ராமசாமி, செங்கதிர், திலிப் குமார், க்ரியா ராமகிருஷ்ணன் ஆகியோர்
நிகழ்விற்கு வந்திருந்து சிறப்பித்தவர்கள்.
அக்கிரகாரத்தில் கழுதை:
ஒரு பார்ப்பனப் பேராசிரியர் ஓய்வுபெற்றுத் தன்கிராமத்திற்கு ஒரு கழுதைக் குட்டியோடு வருகிறார். அதனால் அவருக்கும் அக்கிரகாரத்துப் பார்ப்பனர்களுக்கும் இடையில் தகராறு வருகிறது. ஆனால் பேராசிரியர் வீட்டில் வேலைபார்க்கும் தலித்பெண் லட்சுமி கழுதை மீது மிகுந்த பிரியத்தோடு இருக்கிறாள். பேராசிரியர் ஊரில் இல்லாதபோது கழுதை கோயிலில் கட்டப்படுகிறது. இந்த இடைவெளியில் லட்சுமி யாராலோ ‘கெடுக்கப்பட்டு’ கர்ப்பமாகிறாள்.
லட்சுமியின் குழந்தை இறந்து பிறக்கிறது. அதற்குக் காரணம் கழுதைதான் என்று முடிவுகட்டிக் கழுதையைக் கொன்று விடுகின்றனர் . ஊர் திரும்பிய பேராசிரியர் சுடுகாடு சென்று கழுதையின் மண்டையோட்டை லட்சுமியிடம் கொடுக்கிறார். லட்சுமி ஒரு மரண நடனம் ஆடி அதை அங்கிருக்கும் தலித்துகளிடம் கொடுக்கிறாள். மண்டையோட்டில் தீ பற்றியெரிகிறது, அந்த தீ அக்கிரகாரத்திற்கும் பரவுகிறது.
“ The Walk “ என்ற படத்தைத் தவற விடாமல் பாருங்கள். டிரைலர் மேலே! விமர்சனம் கீழே!
கயிற்றில் நடந்து வித்தை காட்டும் ஒருவனுக்கு நியூயார்க் நகரத்திலிருக்கும் 100 மாடிகள் உயரம் கொண்ட WORLD TRADE CENTER இன் இரு கட்டடத்துகளுக்கிடையே கயிற்றில் நடக்க வேண்டும் என்பது கனவு.
சட்டப்படி முடியாது என்றாலும் சட்டத்தை மீறி நாலைந்து நண்பர்களின் உதவியால் இரவில் கயிற்றைக் கட்டிவிட்டுவிடுகிறான். காலைப் பொழுது விடிந்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் போது ஒரு டவரிலிருந்து இன்னொரு டவருக்குக் கையில் குச்சியுடன் நடக்கிறான். போலீஸ் ஒரு டவரின் முனைக்கு வந்து அவனைப் பிடிக்கக் காத்திருக்க முனை வரைக்கும் வந்த அவன் திரும்ப அடுத்த முனைக்குச் செல்கிறான். இப்படி நாலைந்து முறை நடக்கிறான். நடுவில் பார்க்கும் மக்களுக்கு நன்றி வணக்கம் தெரிவிக்கிறான். கயிற்றிலேயே சற்று நேரம் படுக்கவும் செய்கிறான்.
இதெல்லாம் நடக்கிற கதையா என்று கேட்கிறீர்களா ?
உண்மையில் ஒருவன் நடந்ததைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். அவன் கயிற்றின் நுனிக்கு வரும் போது நாமும் சீட்டின் நுனிக்குப் போகிறோம்.
அது தான் படத்தின் வெற்றி. அருமையான படம். விடா முயற்சிக்கு இதை விடச் சிறந்த படம் இல்லை.
(அந்த WORLD TRADE CENTER தான் பிற்பாடு செப்டம்பர் 11, 2002 இல் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. இன்று அதே இடத்தில் அதை விடச் சிறந்த 102 மாடி டவர் – FREEDOM TOWER என்ற பெயரில் கட்டியிருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்,)