யார் இந்த நீர்ஜா ?
மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் முடிவில் தன் உயிரைத் தியாகம் செய்த விமானப் பணிப்பெண் தான் இந்த நீர்ஜா. பான் ஆம் விமானத்தில் பணிபுரிந்தவர்.
5 செப்டம்பர் 1986 அன்று மும்பையிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் பான் ஆம் விமானத்தில் தலைமைப் பணிப்பெண்ணாக இருந்தவர்.
கராச்சியிலிருந்து அந்த விமானம் புறப்படும் சமயம் பாதுகாப்பு அதிகாரிகள் போல் விமானத்துக்கு வந்த தீவிரவாதிகள் விமானத்தைத் தங்கள் கைக்குள் கொண்டு வந்தார்கள். நீர்ஜா கொடுத்த தகவல்படி விமான ஓட்டிகள் காக்பிட்டை உள்ளிருந்து பூட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர் விமானத்தை நிர்ஜாவின் பொறுப்பில் விட்டுவிட்டு. தீவிரவாதிகள் அமெரிக்கப் பயணிகளின் பாஸ்போர்ட்டைக் கண்டுபிடித்து அவர்களைக் கொல்ல முயன்ற போது நீர்ஜா அவர்கள் பாஸ்போர்ட்டை மறைத்து வைத்து அவர்களைக் காப்பாற்றினார்.
17 மணி நேரம் கராச்சி ரன்வேயில் நடந்த போராட்டத்தில் நீர்ஜா கிட்டத்தட்ட எல்லா பயணிகளையும் தப்பிக்க வைத்தார். முதலில் அவர் தப்பியிருக்கலாம். ஆனால் நீர்ஜா மற்றப் பயணிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் திண்ணமாயிருந்தார் முடிவில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடத் தொடங்கினர். 20 பயணிகள் பலியானார்கள். மூன்று குழந்தைகளை தீவிரவாதிகள் சுடும்போது அவர்களைக் காப்பாற்ற நீர்ஜா முயன்றபோது குண்டு அவர் தலையில் பாய்ந்ததில் நீர்ஜா உயிரை இழந்தார்.
அவரின் அபார சேவையால் 380 பயணிகளில் 20 பேரைத் தவிர மற்றவர்கள் உயிர் பிழைத்தனர்.
இந்திய அரசாங்கம் அவருக்கு அசோகச் சக்கரம் விருது கொடுத்தது. பாகிஸ்தான் அரசும் அமெரிக்க அரசும் அவருக்கு உயரிய விருதுகள் கொடுத்துக் கௌரவித்தன.
இந்த உண்மைக் கதையை வாழ்க்கைச் சினிமாவாக எடுத்துள்ளார்கள்.
சோனம் கபூர் நடித்த நீர்ஜா என்ற அந்த ஹிந்தித் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்துள்ளது.