சிற்பி பாலசுப்பிரமணியன்

கொங்கு தந்த தங்கம் சிற்பி பாலசுப்பிரமணியம் | Tamil Poet Sirpi Balasubramaniam - YouTube

தமிழ் எழுத்துலகில் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவரான சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இந்த வருடம் குடியரசுத் திருநாளில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 

இவர் நமது நண்பர் இந்திரன் அவர்களின் மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவர். சிற்பி அவர்களுக்கு பாராட்டுவிழா நடத்தி சிறப்பிக்கும்போது அவரைப் பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கிறார் இந்திரன் அவர்கள். 

40 நிமிட ஆவணப்படம் சிற்பி – இந்திரன் இருவரது திறமைகளையும் திறம்பட வெளிக்கொண்டு வந்துள்ளது.  அந்தக் காணொளி இங்கே தரப்பட்டுள்ளது.   

சிற்பி அவர்களைப் பற்றியத் தகவல்களை விக்கி பீடியாவிலிருந்து எடுத்து இங்கே தந்திருக்கிறோம். 

(https://ta.wikipedia.org/s/p0n)

சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

பதிவுகள்கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் (தமிழ் இலக்கியம்) கற்று, 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். 1989-இல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி ஆதீனம் கபிலர்விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பலவிருதுகள் பெற்றவர்.

1996-இல் தொடங்கப்பட்ட சிற்பி அறக்கட்டளை தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள், பரிசுகள் அளித்து வருகிறது.

கவிதை நூல்கள் (20)

 1. நிலவுப் பூ (1963) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1963
 2. சிரித்த முத்துக்கள் (1966) மணிவாசகா் பதிப்பகம் சென்னை, முதற்பதிப்பு-1968
 3. ஒளிப்பறவை (1971) அன்னம் வெளியீடு சிவகங்கை முதற்பதிப்பு-1971
 4. சர்ப்ப யாகம் (1976) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1976
 5. புன்னகை பூக்கும் பூனைகள் (1982) அன்னம் வெளியீடு சிவகங்கை முதற்பதிப்பு-1982
 6. மௌன மயக்கங்கள் (தமிழக அரசு பரிசு பெற்றது) (1982)
 7. சூரிய நிழல் (1990) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1990 இரண்டாம் பதிப்பு 1995
 8. இறகு (1996) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி
 9. சிற்பியின் கவிதை வானம் (1996)(திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) மணிவாசகா் பதிப்பகம் சென்னை, முதற்பதிப்பு-1996
 10. ஒரு கிராமத்து நதி (1998)(சாகித்ய அகாதெமி விருது பெற்றது)
 11. பூஜ்யங்களின் சங்கிலி (தமிழக அரசு பரிசு பெற்றது) (1999) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி
 12. பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு(2001)
 13. பாரதி – கைதி எண் : 253 (2002)
 14. மூடுபனி (2003)
 15. சிற்பி : கவிதைப் பயணங்கள் (2005)
 16. தேவயானி (2006)
 17. மகாத்மா (2006)
 18. சிற்பி கவிதைகள் தொகுதி – 2 (2011)
 19. நீலக்குருவி (2012)
 20. கவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு)
கவிதை நாடகம் 
 1. ஆதிரை (1992)

சிறுவர் நூல்கள் (2)

 1. சிற்பி தரும் ஆத்திசூடி (1993)
 2. வண்ணப்பூக்கள் (1994)

உரைநடை நூல்கள் (13)

 1. இலக்கியச் சிந்தனைகள் (1989)
 2. மலையாளக் கவிதை (1990)
 3. இல்லறமே நல்லறம் (1992)
 4. அலையும் சுவடும் (1994)
 5. மின்னல் கீற்று (1996)
 6. சிற்பியின் கட்டுரைகள் (1996)
 7. படைப்பும் பார்வையும் (2001)
 8. கவிதை நேரங்கள் (2003)
 9. மகாகவி (2003)
 10. நேற்றுப் பெய்த மழை (2003)
 11. காற்று வரைந்த ஓவியம் (2005)
 12. புதிர் எதிர் காலம் (2011)
 13. மனம் புகும் சொற்கள் (2011)

வாழ்க்கை வரலாற்று நூல்கள் (8)

 1. இராமாநுசர் வரலாறு (1999)
 2. ம.ப.பெரியசாமித் தூரன் (1999)
 3. பாரத ரத்னம் சி.சுப்பிரமணியம் (1999)
 4. ஆர்.சண்முகசுந்தரம் (2000)
 5. சே.ப. நரசிம்மலு நாயுடு (2003)
 6. மகாகவி பாரதியார் (2008)
 7. நம்மாழ்வார் (2008)
 8. தொண்டில் கனிந்த தூரன் (2008)

மொழிபெயர்ப்பு நூல்கள் (11)

கவிதைகள் (5)

 1. சச்சிதானந்தன் கவிதைகள் (1998)
 2. உஜ்ஜயினி (ஓ.என்.வி.குரூப்) (2001)
 3. கவிதை மீண்டும் வரும் (சச்சிதானந்தன்) (2001)
 4. காலத்தை உறங்க விடமாட்டேன் (என்.கோபி) (2010)
 5. கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகள் (2012)

புதினங்கள் (3)

 1. அக்கினி சாட்சி (லலிதாம்பிகா அந்தர்ஜனம்) (1996) (சாகித்ய அகாதெமி விருது பெற்றது)
 2. ஒரு சங்கீதம் போல (பெரும்படவம் ஸ்ரீதரன்) (1999)
 3. வாராணசி (எம்.டி.வாசுதேவன் நாயர்) (2005)

பிற(3)

 1. தேனீக்களும் மக்களும் (1982)
 2. சாதனைகள் எப்போதும் சாத்தியந்தான் (கிரண்பேடி) (2006)
 3. வெள்ளிப்பனி மலையின்மீது (எம்.பி.வீரேந்திரகுமார்)(2009)

இலக்கிய வரலாறு (1)

 1. தமிழ் இலக்கிய வரலாறு (2010)

ஆங்கில நூல் (1)

 1. A Comparative Study of Bharati and Vallathol (1991)

அறக்கட்டளைப் பொழிவு நூல்கள் (3)

 1. கம்பனில் மானுடம் (2002)
 2. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை (2006)
 3. பாரதிதாசனுக்குள் பாரதி (2011)

உரை நூல்கள் (3)

 1. திருப்பாவை : உரை (1999)
 2. திருக்குறள் : சிற்பி உரை (2001)
 3. மார்கழிப்பாவை (2009) (திருப்பாவை,திருவெம்பாவை,திருப்பள்ளியெழுச்சி உரை)

தொகுப்பு நூல்கள்

 1. நதிக்கரைச் சிற்பங்கள் (2012)

பதிப்பித்த நூல்கள் (11)`

 1. மகாகவி பாரதி சில மதிப்பீடுகள் (1982)
 2. பாரதி – பாரதிதாசன் படைப்புக்கலை (1992)
 3. தமிழ் உலா I & II (1993)
 4. பாரதி என்றொரு மானுடன் (1997)
 5. மருதவரை உலா (1998)
 6. நாவரசு (1998)
 7. அருட்பா அமுதம் (2001)
 8. பாரதியார் கட்டுரைகள் (2002)
 9. மண்ணில் தெரியுது வானம் (2006)
 10. கொங்கு களஞ்சியம் (2006)
 11. வளமார் கொங்கு (2010)

இதழாளர்

 • வானம்பாடி (கவிதை இதழ்)
 • அன்னம் விடு தூது (இலக்கிய மாத இதழ்)
 • வள்ளுவம் (ஆசிரியர் குழு)
 • கவிக்கோ (ஆசிரியர் குழு)
 • கணையாழி (ஆசிரியர் குழு)

விருதுகள்

 • மௌன மயக்கங்கள் – கவிதை நூல் – தமிழக அரசு விருது (1982)
 • பாவேந்தர் விருது – தமிழக அரசு (1991)
 • கபிலர் விருது – கவிஞர் கோ பட்டம் – குன்றக்குடி அடிகளார் (1992)
 • A Comparative study of Bharati and Vallathol
 • உ. சுப்பிரமணியனார் ஆங்கில நூல் பரிசு – தமிழ்ப் பல்கலைக்கழகம் (1994)
 • இந்துஸ்தான் லீவர் Know your India போட்டி முதல் பரிசு (1970)
 • பாஸ்கர சேதுபதி விருது – முருகாலயா – சென்னை (1995)
 • தமிழ் நெறிச் செம்மல் விருது – நன்னெறிக் கழகம் கோவை (1996)
 • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது – சிற்பியின் கவிதை வானம் நூலுக்கு – (1997)
 • கம்பன் கலைமணி விருது – கம்பன் அறநிலை, கோவை (1998)
 • சொல்கட்டுக் கவிஞர் விருது – திருவாரூர் இயல் தமிழ் பதிப்பகம் (1990)
 • தமிழ்ப் புலமைக்கான சென்னை கொங்கு நண்பர்கள் சங்க விருது (1997)
 • மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது (1998)
 • ராணா விருது – ஈரோடு இலக்கியப் பேரவை (1998)
 • சிறந்த தமிழ்க் கவிஞர் விருது – கேரள பண்பாட்டு மையம் (1998)
 • இருபதாம் நூற்றாண்டில் சிறந்த எழுத்தாளர் விருது – DIYA (1998)
 • பாரதி இலக்கிய மாமணி விருது – அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் மன்றம், சென்னை (1998)
 • ‘பூஜ்யங்களின் சங்கிலி’ – தமிழ்நாடு அரசு பரிசு (1998)
 • ‘The Pride of Pollachi’ விருது – பொள்ளாச்சி காஸ்மோ பாலிடன் கிளப் (1999)
 • ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பிறந்த நாள் பரிசு -மதுரைத் தமிழிசைச் சங்கம் (2000)
 • சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது – 2000 (அக்கினி சாட்சி நாவலுக்கு – 2001)
 • சாகித்ய அகாதமி படைப்பிலக்கிய விருது 2002 – (ஒருகிராமத்து நதி கவிதை நூலுக்கு – (2003)
 • பாரதி விருது – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (2002)
 • மகாகவி உள்ளூர் விருது – திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் (2003)
 • பணியில் மாண்பு விருது – ரோட்டரி சங்கம் (வடக்கு) கோவை (2003)
 • தலைசிறந்த பழைய மாணவர் விருது- ஜமால் முகமது கல்லூரி (2003)
 • பாரதி பாவாணர் விருது – மகாகவி பாரதி அறக்கட்டளை கோயம்புத்தூர் (2004)
 • பாராட்டு விருது – அரிமா மாவட்டம் 324 / 01 வட்டார மாநாடு, கோயம்புத்தூர் (2004)
 • தமிழ் வாகைச் செம்மல் விருது – சேலம் தமிழ்ச் சங்கம் (2005)
 • ராஜா சர் முத்தையா விருது (2009)
 • கவிக்கோ அப்துல்ரகுமான் விருது (2006)
 • அரிமா சங்கம் பொள்ளாச்சி, பிரம்மகுரு விருது (2007)
 • ரோட்டரி சங்கம் பொள்ளாச்சி [No Paragraph Style]For the Sake of Honour Award (2008)
 • வெற்றித் தமிழர் பேரவை விருது (2008)
 • தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது (2009)
 • ‘நல்லி’ திசை எட்டும் மொழியாக்க விருது (2010)
 • ச.மெய்யப்பன் அறக்கட்டளை – தமிழறிஞர் விருது (2010)
 • பாரதிய வித்யாபவன் கோவை, தமிழ்மாமணி விருது (2010)
 • கம்பன் கழகம் சென்னை எம்.எம்.இஸ்மாயில் விருது (2010)
 • பப்பாசி கலைஞர் பொற்கிழி விருது (2012)
 • பத்மஸ்ரீ  விருது (2022)[2]

கவிஞர் சிற்பியைக் குறித்து வெளிவந்துள்ள படைப்புகள்..

 • சிற்பியின் படைப்புக்கலை – முனைவர் தே.ஞானசேகரன் (ப.ஆ.) (1993)
 • கோபுரத்தில் ஒரு குயில் – சி.ஆர்.ரவீந்திரன் (1996)
 • சிற்பி – மரபும் புதுமையும் – முனைவர் தே.ஞானசேகரன்(ப.ஆ.) (1996)
 • கவிஞர் சிற்பி -கருத்தியல்வளம் – முனைவர் இரா.சந்திரசேகரன் (ப.ஆ.) (2003)
 • கவிஞர் சிற்பி – கவிதைவளம் – முனைவர் இரா.சந்திரசேகரன் (ப.ஆ.) (2003)
 • கவிஞர் சிற்பி – கவிதைக்குள் ஒரு பிரபஞ்சம் – முனைவர் இரா.சந்திரசேகரன் (2004)
 • சிற்பியின் படைப்புலகம் – பேராசிரியர்கள் மா.நடராசன், மதியழகன் (ப.ஆ.) (2004)
 • சிற்பியின் கவிதையில் சிறைப்பட்ட சீர்திருத்தக் கவிஞர் – அ.சங்கரவள்ளி நாயகம் (2006)
 • சிற்பி துளிகளில் ஒளிரும் வெளிகள் – சொ.சேதுபதி (2011)
 • சிற்பி – மௌனம் உடையும் ஒரு மகாகவிதை – நவபாரதி (2011)
 • ஆழிக்கவிதைகளும், ஆழியாற்றுக்கவிதைகளும் – உ.அலிபாவா (ப.ஆ) (2012)
 • Sirpi Poet as Sculptor – P.Marudanayagam (2006)
 • A noon in Summer (1996)
 • Sirpi Poems – A Journey (2009)

ஆய்வுத் திட்டங்கள் UGC – பெருந்திட்டங்கள்

 • தமிழ் இலக்கியத்தில் விடுதலை இயக்கத் தாக்கம் (1989 – 1991)
 • இடைக்காலக் கொங்கு நாட்டின் சமூக – பொருளாதார அமைப்புகள் (1993- – 1997)
 • கொங்கு களஞ்சியம் – இரு தொகுதிகளின் பதிப்பாசிரியர்

மதிப்புறு பொறுப்புகள்

 • காந்திகிராம் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர்.
 • சாகித்ய அகாதமி செயற்குழு உறுப்பினர் / ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆலோசனைக் குழு (2008)
 • சாகித்ய அகாதமி பொதுக்குழு / தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் (1993 – 1998)
 • எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் செயற்குழு, விருதுக்குழு உறுப்பினர்.
 • தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் (2000 – 2005)
 • தலைவர், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் (2009)
 • தலைவர், கவிஞர் சிற்பி அறக்கட்டளை
 • தலைவர், பி.எம்.எஸ்., அறக்கட்டளை
 • செயலர், பொள்ளாச்சி இலக்கியக் கழகம்
 • உறுப்பினர், பாரதிய வித்யா பவன் நிர்வாகக் குழு, கோவை
 • உறுப்பினர், டாக்டர் NGP கல்லூரிக் குழு, கோவை
 • முன்னாள் உறுப்பினர், Afirm cancan either eitherraiseraise Money Moneyusing Equity,Equity, Equity,or using Debt DebtRKR கல்வியியல் கல்லூரிக் குழு, உடுமலைப் பேட்டை
 • தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் தேர்வுக்குழு, பாடத்திட்டக்குழு முன்னாள் உறுப்பினர்
 • பல்கலைக்கழக மானியக்குழு, மத்திய அரசு பண்பாட்டுத்துறை, மத்திய அலுவலர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு செயலர் தேர்வாணையத் தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர்
 • உறுப்பினர், நிர்வாகக்குழு, பாரதியவித்யா பவன், கோவை
 • சென்னை, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன், கொல்கத்தா, அழகப்பா, மதுரை, கேரளப் பல்கலைக் கழகங்களிலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் அறக்கட்டளை உரையாளர்
 • பப்பாசி, புதியதலைமுறை, இளையராஜா அமைத்த பாவலர் வரதராஜன் நினைவு விருதுக்கான தேர்வுக்குழு உறுப்பினர்

வலைத்தளம்
http://sirpibharati.blogspot.in/

 

https://fb.watch/aMy60bEAiT/

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.