நூற்றாண்டு விழா நிகழ்வைப் பற்றி நேற்றே போட்டோக்கள் மூலம் பகிர்ந்து விட்டதால் , ஒரு சிறிய குறிப்புரை மட்டும் கொடுக்கலாம் என்று தோன்றியது .
இனிப்புப் போளி , கார கட்லெட் , சுவையான காபியோடு வரவேற்பு . உஷா பாரதி அவர்களின் தமிழ்த் தாய் வாழ்த்தோடு ஆரம்பம் . நமது பாஸ்கரன் சார் அவர்கள் டி எம் எஸ் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புடன் ஆரம்பித்து சிறப்பாகத் தொகுத்து வழங்கிய நிகழ்வில் , தொடர்ந்த முக்கியப் பிரமுகர்கள்( போட்டோக்கள் நேற்றைய பதிவில் ) பேச்சுகள் மூலம் , அவர்கட்கு டி எம் எஸ் அவர்களுடன் இருந்த தொடர்பு நம்மை அவர்கள் காலத்திற்கு இட்டுச் சென்றது .
குவிகம் அமைப்பு , பிரண்ட்லைன் அமைப்பு இரண்டின் இலக்கிய சேவை , சமூக சேவை விபரங்களும் அறிந்து அந்த அமைப்புகளைப் பாராட்டி மகிழும் வாய்ப்பு .சமூக சேவகர் வெங்கடமதி அவர்கட்கு விருதும் பாராட்டும் . அவர்தம் சேவை அறிந்து வியந்து பாராட்டி மகிழ்ச்சி .
பயனாடை ( பொன்னாடையின் புதிய பெயர் , பொருத்தமான பெயர் ) போர்த்தும் நிகழ்வில் , தொகுத்து வழங்கிய பாஸ்கரன் சார் அவர்கட்கும் , தமிழ்த் தாய் வாழ்த்து பாடிய உஷா பாரதி அவர்கட்கும் பயனாடை போர்த்திப் பாராட்டியது குவிகத்தின் பண்பாடு .
இறுதியாக இசை விழா . டி கே எஸ் கலை வாணன் அவர்களின் டி எம் எஸ் பாடல்களோடு சேர்ந்து அவரின் டி எம் எஸ் அனுபவப் பகிரல்கள் . குவிகம் நடத்திய மற்றும் ஒரு நேரடி சிறப்பு நிகழ்வு . நன்றி .
திரும்பும் வழியில் , ஆட்டோக் குளிரில் , எனது துணைவி உஷா பாரதி அவர்கட்கு அந்தப் பயனாடை பயன் ஆடையாகவே அமைந்ததில் மகிழ்ச்சி .
07.01.24 குவிகம் அளவளாவல்:
சென்னை டக்கர் பாபா கல்வி நிறுவனத்தில் அமைந்திருக்கும் காந்தி கல்வி மையத்தின் தலைவர் திரு கே மோகன் அவர்கள் தென்னாப்பிரிக்காவும் காந்தியும் என்ற தலைப்பில் 07.01.24 அன்று ஓர் உரை நிகழ்த்தினார்.
காந்தியடிகளை இரயிலிலிருந்து கிழே தள்ளி அவரை நாட்டுக்காகப் போராடச் செய்த நிகழ்வினை தென்னாப்பிரிக்காவில் அந்த ரயில் நிலையத்தில் சென்ற வருடம் ஒரு விழாவாக நடத்தினர். அதில் பங்கு பெற்ற காந்தியவாதிகளில் திரு மோகனும் ஒருவர். உணர்ச்சியுடன் அவர் அந்த நிகழ்வுகளைக் கூறிய விதம் அனைவரிடமும் மகாத்மாவின் நினைவைப் பெருக்கெடுக்க வைத்தது. அதன் காணொளி இதோ:
14 .01.24 குவிகம் அளவளாவல்:
மீனைவர் வ வே சு அவர்கள் தலைமையில் பட்டிமன்றம்.
திரைப்படப் பாடல்கள் நினைவில் நிற்பதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது
கவர்ந்திருக்கும் இசையா ? கருத்துள்ள மொழியா ?
இசை அணியில் , தென்காசி கணேசன், டாக்டர் ஜெ பாஸ்கரன், ந பானுமதி பங்கு பெற்றனர்.
மொழி அணியில் ராய செல்லப்பா, ஆரக்கே ராமநாதன், மீனாட்சி பாலகணேஷ் ஆகிய மூவரும் பங்கு பெற்றனர்.
முடிவில் இசை அணியே வெற்றி பெற்றது.
ஜனவரி 3, ஜனவரி 10 ஆகிய இருநாட்களும் மகா கவியின் மந்திரச் சொற்கள் தொடரில் ஞானப் பாடல்கள் வரிசையில் பரசிவ வெள்ளம் பாடலின் வரிகளை விளக்கிக் கூறினார்.
அவற்றின் லிங்க் :


நிகழ்வுகளின் சிறந்த தொகுப்பு. வாழ்த்துக்கள்
LikeLike