டிசம்பர் 12

முன்னாள் காதலி அல்லது காதலரை மன்னிப்பது ஏன் கடினமாக உள்ளது? - BBC News தமிழ்

அலுவலகம் விட்டு
வீடு திரும்பியதும்
ஒரு பிரளயம் நடக்கும்
என்று எதிர்பார்த்தான்
ஆனால் அமைதி
பேரமைதி

துவைப்பதற்காக
காலையில்
எடுத்துப் போட்ட
சட்டையும்
பேண்ட்டும் துவைத்து
இஸ்திரி செய்து
சோபாவின் மேல் அமர்ந்திருந்தின

அவன் கண்கள்
அவற்றைப் பார்ப்பதை
அவளும் கவனிக்கிறாள்

ஏன் ஒரு மாதிரியாய்
இருக்கிறாய் என்று
வினவுகிறாள்…..

பதில் எதுவும் சொல்லாமல்
தன் அறைக்கு சென்றான்.

அங்கு மேசையின் மேல்
அவன் மறந்து சட்டைப்பையில்
விட்டுச்சென்ற முன்னாள்
காதலிக்கு எழுதிய முதல்
பிறந்த நாள் வாழ்த்துக்  கடிதம்…
சற்று நனைந்து பொதுமிப் போயிருந்தது
பக்கத்தில் இன்று பூத்த ஒரு
ரோஜாப் பூவும்…

வெளியிலிருந்து மனைவியின்
குரல் “இந்த மாதம் எனக்குந்தான்
பிறந்த நாள் வருகிறது “

பதில் எதுவும் சொல்ல முடியாமல்
மெதுவாக
கண்களைத் துடைத்துக் கொண்டான்