
சென்ற செப்டம்பர் மாத குவிகம் கதை முற்றத்திற்கு கிடைத்த வரவேற்பு அனைவர் மனதிலும் மகிழ்ச்சி அலைகளை எழுப்பியது என்றால் அது உண்மை; வெறும் வார்த்தையில்லை.
சிறு கதைகளுக்கென்று ஒரு தளம். பத்து பன்னிரண்டு தென்னை மரம் என்று பாரதி கூறியது போல 10-12 சிறுகதைகள் இங்கே உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
பரிசு பெற்ற கதைகள் சில.
அறிமுகக் கதைகள் சில.
தொடர்ந்து எழுதும் எழுத்தாளர்களின் கதைகள் சில.
அறிவியல் , பெண்ணீயம் , புராணம் பேசும் கதைகள் சில.
இப்படிப் பலதிறப்பட்ட வாசகர்களையும் கவரும் வண்ணம் கதைகள் இருந்தன என்பதை அறியும் போது உற்சாகம் பல மடங்கு அதிகரிக்கிறது.
இன்னும் வரப் போகிற மாதங்களில் இந்தத் தளத்தில் இன்னும் பல புதுமைகளை நாம் பார்க்க இருக்கிறோம்.
எழுத்தாளர்களுக்கு அன்பு வேண்டுகோள்! உங்கள் வித்தியாசமான படைப்புகளை மட்டும் கதை முற்றத்துக்கு அனுப்புங்கள்.
கதையில், கருத்தில், நடையில், நிகழ்வில் , படைப்பில்.பார்வையில், சொல்லில், பொருளில், ஆகிய அனைத்திலும் உங்கள் கதை வித்தியாசமாக இருக்கவேண்டும்.
வாசகர்களும் உங்கள் மதிப்பீட்டை கதைகளுக்கு வழங்கும்படி வேண்டிக் கொள்கிறோம். எந்த மாதிரியான கதைகள் உங்கள் கவனத்தைக் கவருகின்றன என்பதை அறிந்துகொள்ள இந்த மதிப்பீடு உதவும்.
குவிகம் நடத்திய திருக்குறள் ‘அறிவுடைமை’ என்ற அதிகாரத்திற்குக் கதை எழுதும் போட்டியில் அப்பு சிவா அவர்கள் எழுதிய கதை சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆயிரம் ரூபாய் பரிசும் பெறுகிறது. இம் மாதக் குவிகம் கதை முற்றத்தில் முதல் கதையாக அது வெளிவந்திருக்கிறது.
வருகிற ஜனவரி 2027 மாதத்திலிருந்து குவிகம் கதை முற்றம் இதழைச் சந்தாதாரர்களுக்கு மட்டும் அனுப்பப்படும் மின்னிதழாக மாற்றலாம் என்று யோசித்து வருகிறோம்.
கதைகளை எழுதும் கதாசிரியர்களுக்கு சன்மானம் /பரிசு கொடுப்பதற்காகவே இத் திட்டத்தைத் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.
இது பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்
ஆசிரியர்: குவிகம் சுந்தரராஜன் – மின்னஞ்சல்: editor@kuvikam.com ; வாட்ஸ் அப் : 9442525191
