நன்றி: விக்கிபீடியா

விட்டல் ராவ் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில்  பிறந்தவர்.  இவருக்குத்  தாய்மொழி கன்னடம்.

விட்டல் ராவ் சென்னையில்  ஓவியப்பயிற்சி பெற்றார். நண்பர்களுடன் இணைந்து மெட்ராஸ் ஆர்ட் கிளப் என்னும் அமைப்பை ஓவியத்துக்காக நடத்தினார். மாக்ஸ் முல்லர் பவன், ப்ரிட்டிஷ் கவுன்சில், ஹைதராபாத் ஆர்ட்ஸொசைட்டி, மைசூர் தஸரா மையங்களில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகளில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

விட்டல் ராவ் எழுதிய முதல் சிறுகதை ‘வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம்’ 1967-ல் ஆனந்த விகடனில் வெளியாகியது. பிரபல இதழ்களிலும் இலக்கிய சிற்றிதழ்களிலும் சிறுகதைகள் எழுதினார்

விட்டல் ராவின் முதல் நாவல் ‘இன்னொரு தாஜ்மகால்’ தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. 

1976-ம் ஆண்டில் வெளிவந்த “போக்கிடம்” நாவல் இலக்கியச் சிந்தனை விருது பெற்றது.

விட்டல் ராவ் அவர்களின் குறிப்பிடத்தக்க படைப்பான ‘நதிமூலம்’ நாவல் 1981-ம் ஆண்டில் வெளிவந்தது.  கன்னட பிராமண குடும்பத்தின் மூன்று தலைமுறை வாழ்க்கையையும், சமூக மாற்றங்களினால் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் யதார்த்தமாக விவரிக்கிறது.

 தனது தமக்கையின் நாடக அனுபவங்களை வைத்து ‘வண்ண முகங்கள்’ என்ற நாவலை எழுதினார்.

1993-ம் ஆண்டு வெளிவந்த ‘காலவெளி’ என்ற நாவல், ஒரு கலைப் பள்ளியில் சில மாணவர்கள் வாழ்வின் அடிப்படையில் இருந்தது.  

BSNL ஊழியரான விட்டல் ராவ் அவரது தொழிற்சங்க அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு  ‘காம்ரேடுகள்’ என்ற நாவலை  1996-ல்  எழுதினார். 

 ஆங்கிலோ இந்தியர்களைப் பற்றி விட்டல் ராவ் 2018-ல் எழுதியிருக்கும் ‘நிலநடுக் கோடு’ நாவல் குறிப்பிடத்தக்க ஆவணப்புனைவாகும். சென்னை நகரின் ஒரு குறிப்பிட்ட கால வளர்ச்சியை இந்நாவல் விவரிக்கிறது. சென்னையில் இருந்த திரையரங்குகளின் அமைப்பு, உணவகங்கள் பற்றி விட்டல் ராவ் எழுதியிருக்கிறார்.

விட்டல் ராவ் எழுதிய 140 சிறுகதைகள் அடங்கிய 5 சிறுகதைத் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கட்டுரைகள்
 விட்டல்ராவ் தம் வாழ்வனுபவப்பதிவுகளை  ‘ஓர் அன்னாடுகாச்சியின் சேலம்’ என்ற பெயரில்  கட்டுரைத் தொகுப்பாக 2021-ல் வெளியிட்டுள்ளார். 

சினிமா விமர்சனம், கலைவிமர்சனம் என வெவ்வேறு பேசுபொருட்களுடன் விட்டல்ராவின் 7 கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

விட்டல்ராவ்  தமிழகத்து கோட்டைகள் பற்றி ஆய்வுசெய்து ‘தமிழகத்துக் கோட்டைகள்’  என்னும் நூலை வெளியிட்டிருக்கிறார்.

கன்னட சினிமா குறித்தும் ஆய்வுசெய்து நூல்களை எழுதியுள்ளார்.

 

விருதுகள்
Kusumanjali Sahitya Samman – 2012 for ‘ வாழ்வின் சில உன்னதங்கள்’
இலக்கியச் சிந்தனை விருது – வண்ணமுகங்கள், போக்கிடம்
மா.அரங்கநாதன் இலக்கிய விருது 2026
விளக்கு விருது 2025
விஷ்ணுபுரம் இலக்கிய விருது (2026)