ரஜினி ஜோக்ஸ்

image

ஆர்ம்ஸ்டிராங்க்  சந்திரனில் காலடி வைத்ததும்  அவரை வரவேற்க ரஜினி காத்துக் கொண்டிருந்தார்.

ரஜினி இரவுகளில் தூங்குவதே இல்லை. சில சமயம் அவர் லேசாக கண்ணசைந்த நேரத்தில் தான் சுனாமி, தானே,கத்ரினா புயல் தோன்றின.

ரஜினி ராகவேந்தராக நடித்தது அனைவருக்கும் தெரியும். ஒரு சமயம் அவர் காலில் அடி பட்டு நடிக்க முடியாமல் இருந்த போது ராகவேந்த்ரா ஸ்வாமியே அவருக்காக நடித்தார் என்பது ரஜினிக்கும் எஸ்.பி. முத்துராமனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.

ரஜினி பாம்புக்கு பயப்படுவது போல் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அதற்குக் காரணம் அவர் நாக தேவதைக்குக் கொடுத்த சத்தியம் தான். 

image

கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் “நான் ரஜினி”. அதில் அந்தப் படத்தில் வரும் எல்லா  பாத்திரங்களிலும்  (கிட்டத்தட்ட 100 வேடங்கள்) ரஜினியே நடிக்கிறார். டைரக்டர்  லதா ரஜினிகாந்த்.

ஒரு சமயம் ரஜினி தெரியாமல்  ‘லைவ் வயரைத்’ தொட்டுவிட்டார். அன்றையிலிருந்து தான் தமிழ் நாட்டுக்கு பவர் கட் வந்தது.

எல்லா பௌதிக விதிகளையும் மாற்றிய ரஜினி ஒரு சமயம் ஆப்பிள் ஒன்றை தூக்கி எறிந்தார். அது கீழே விழவே இல்லை. நியூட்டன் தன் விதியைத் திருத்திக்கொண்டார்.

First Prize in Anand Flats New Year Poem Competition on Patriotism

                                   By Manasa.G (D1-47)   

               image

I do not know why you choose me
To be your child of pride
But what I do  know is your deep, unusual history
That makes you the best, an unexplained mystery

For if I was not born here ,
All my life, I would’ve lived with fear
I wouldn’t have seen great monuments or bullock carts
I wouldn’t have heard grandma stories or splendid arts
I wouldn’t have  had the knowledge I have now
That keeps other countries just wondering how

So, here is my PROMISE,
That no foreigner will accomplish
Few years from now, I will stand out of the crowd
And you will hear people exclaim ‘her mother must be so proud’

For you are My mother, My India, My light

மூலிகைக் குளியல் ( ராதை & சுந்தரம்)

மூலிகைக்  குளியல்   

                  image

இந்தக் காலத்தில் பெண்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர் அனைவரும் மூட்டு வலி,இடுப்பு வலி, தோள் பட்டை வலி, குதிகால் வலி  போன்றவற்றினால் துன்பப்படுவதை கண் கூடாகப் பார்க்கிறோம்.

ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் வலி நிவாரணி  மாத்திரைகளும், ஆய்ன்ட்மென்ட்களும் தற்காலிக நிவாரணம், மட்டுமே தருகின்றன.

மேற்கண்ட நோயுள்ளவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள அபூர்வ தைலத்தை தேய்த்துக் கொண்டு சுமார் ஒன்றரை மணி நேரம் ஊறிய பிறகு  புதியதாகத் தயாரித்த வெதுவெதுப்பான மூலிகை நீரில் குளித்து வந்தால் அவர்களின் வலிகளெல்லாம் முழுவதுமாக மறைந்து விடும் என்பது உறுதி.

 அபூர்வ தைலம் தயாரிக்கும் முறை:

புளிய இலை ஆறு கையளவு, சாதாரண கல்  உப்பு ஒரு கையளவு எடுத்துக்கொண்டு இரண்டையும் சேர்த்து                   ( தண்ணீர் தெளிக்காமல்) இடித்து தூளாக்கி ( அல்லது மிக்ஸியில் தூளாக்கி) அரை லிட்டர் நல்லெண்ணையில் ஊறப் போடவும். சுமார் ஆறு நாட்கள் ஊறிய பிறகு அபூர்வ தைலம் ரெடியாகி விடும். அபூர்வ தைலத்தை காய்ச்சவோ சூடாக்கவோ அவசியமில்லை.

மூலிகை குளியலுக்குத் தேவைப்படும் மூலிகைகள்:

  1. புளிய இலை   2. மஞ்சனத்தி இலை 3. தழுதழை               4. யூகலிப்டஸ்  இலை 5. நொச்சி இலை 6. வேப்ப இலை 7. ஆடா தொடா இலை 8. தும்பை இலை 9. குப்பைமேனி இலை

இவற்றில் எவை கிடைக்கிறதோ அவற்றை பயன் படுத்தினால் போதுமானது.

இந்த இலைகளை எல்லாம் ஒரு பக்கெட்டில் போட்டு நல்ல வென்னீரை  விட்டு வைத்தால் பத்து நிமிடத்தில் சாறு  இறங்கி விடும். காப்பி டிகாஷன் கலரில் தண்ணீர் இருக்கும். அந்த கலவையை வடிகட்டி அந்த நீரில் குளிக்க வேண்டும். வடிகட்டின மூலிகை இலைகளை ஒரு வாரத்திற்குப் பயன் படுத்தலாம்.  

                    image

இப்படி பதினைந்து நாட்கள்   குளித்தால் எல்லா வலிகளும் உங்களை விட்டுப் பறந்து விடும். நல்ல தூக்கம் வரும். தலைவலி, சைனஸ், மூச்சுத் திணறல், சளிப் பிரச்சினை போன்றவை அனைத்தும் குணமாகும்.

அனைவரும் நலமுடன் இருக்க தன்வந்திரி பகவான் அருள்வாராக

விளக்கு

image

 

ஆசை நெய்யிட்டு வேட்கைத் திரியிட்டு
காமத்தீ இட்ட விளக்கு!

விளக்கின் திரியின் நெருப்பின் நுனியில்
கலங்கித் திரிந்து தவிக்கும் மனது !

ஆண்டவன் உள்ளத்தின்  மன விளக்கு!

சூரியன் உலகுக்கு முதல் விளக்கு!

மனைவி இல்லத்தின் குல விளக்கு!

வசந்தம் பொங்கிடும்  சர  விளக்கு!

கவலையைப் போக்கிடும் விடி விளக்கு!

கார்த்திகை நாளில் அகல் விளக்கு!

மங்களம் தந்திடும் குத்து விளக்கு!

பாடம் படிக்கையில் மின் விளக்கு!

பள்ளிக்குத் தேவையோ சிறு விளக்கு!

மிட்டாய்க் கடைகளில் பளீர் விளக்கு!

தன்னை உருக்கிடும் மெழுகு விளக்கு!

தாமதத் தொழிலாம் குழல் விளக்கு!

திசையைக் காட்டிடும் கலங்கரை விளக்கு!

வீதி ஓரங்களில் மஞ்சள் விளக்கு!

வெறியைத் துப்பிடும் சிவப்பு விளக்கு!

காற்றில் அணையா லாந்தர் விளக்கு!

அமுக்கினால் ஒளி  தரும் டார்ச் விளக்கு!

மிதிக்க எரிந்திடும்  சைக்கிள்  விளக்கு!

சீமண்ணையில்  எரிந்திடும் சிம்னி விளக்கு!

வீர விளையாட்டில் தீப விளக்கு!

சபரி மலையில் மகர விளக்கு!

கம்ப்யூட்டர் காதல்

கம்ப்யூட்டர்   காதல்

 

image

காதல் என்பது சாப்ட்வேர்
காமம் என்பது  ஹார்ட்வேர்
இரண்டும்  சேர்ந்து படைத்த ப்ரோக்ராம்
குழந்தை என்பது அதன் பேர்

மடியில் தவழும்  லேப்டாப்பாக
மாறிட எனக்கு வரம் தா
வளைவுகள் என்னும் கீ போர்டில்
வருடிட எனக்கு  கரம்  தா!

ஆடைகள்  என்ற விண்டோசை
மெல்லத் திறந்திடு சீசேம் !
ஓப்பன் கோர்ஸ் ஒஎஸ்சை
முழுதாய் திறந்தால் பப்பி ஷேம்!

மேனி முழு தும் அம்பாய் மாறி
தேடுவது உந்தன் மவுசா!
கிளிக் கிளிக் என்று அமுக்கி என்னை
உசுப்புவது உந்தன் ரவுசா!

கருப்புச் சேலை திரையில்
கலர் கலராக வருவாயா
கண்ணை அடித்து வெப் கேமில்
என்னைப் படமாகப் பிடிப்பாயா

எந்தன் காதல் வரிகளை
மைக்கில் கேட்டு வந்தாயா
உந்தன் மோக முனகலை
ஸ்பீக்கர் போட்டு காட்டாதே

உணர்வுகள் என்னும் வெப் சைட்டில்
உறவுகள் கொண்டோம் இன்டர்நெட்டில்
நமக்குள் இருக்கும் ரகசியம் காக்க
பாஸ்வேர்ட் அதற்குத் தேவையில்லை

நீலக் கண்ணால் பார்க்கும் போது
ப்ளூடூத்  ப்ளுரே  தெரிகிறதே
மேடம்  உந்தன் மோடத்தில்
காதல் பாடம் படித்தேனே

வைப் இல்லாவிட்டால் பரவாயில்லை
வை-பை  இருந்தால் போதும்  எனக்கு
வாடி என்றும் அருகில் அழைத்து
டிவிடியை சுழல வைத்தேன்

பென்   டிரைவ் ஒன்றை சொருகிக் கொள்
டேட்டா பேஸூம் திறந்து கொள்ளும்
உடம்பின் சூட்டை குறைத்திடவே
கூலிங்க் பேடாய் நான் வரவா

காதல் என்ற சமூக வலையில் 
உதடு தான் பேஸ்புக் வலைப் பதிவா
முத்தமிட்டு  நான் போனால்
சத்தமில்லாமல் லைக் போடு

டேப்லெட் உன்னிடம் இருக்கும் வரை
நேரடிக் காதலில் தவறில்லை
பேட்டரி நன்றாய் இருக்கும் வரை
டிஸ்சார்ஜ் பற்றிக்  கவலையில்லை

மெமரி சரியாய் இருக்கும் வரை
வைரஸ் கவலை தேவையில்லை
தேதிகள் கொஞ்சம் தவறிப் போனால்
ஆன்டி வைரஸ்  போட்டுக்கொள்

ஹார்ட் டிஸ்க்  சரியாய் இருக்கும் வரையில்
பேக்கப் பற்றி பயமில்லை
பிளக் அண்ட் பிளே வந்தபிறகு
குஷிக்கு கொஞ்சமும் குறைச்சலில்லை

காதல் டிஜிட்டலாய் மாறும் போது
மொழிகள் அதற்குத் தேவையில்லை
விண்டோஸ் மூடிச் செய்தால் காதல்
திறந்த வெளியில் செய்தால் காமம்

உடம்பின் வளைவுகளைத் தெரிந்துகொள்ள
ஸ்கேனர் எனக்குத் தேவையில்லை
காதல் பயணம் செய்யும் போது
டிரைவர் எதுவும் தேவையில்லை

யாரும் நம்மை பார்த்து விட்டால்
கண்ட்ரோல் ஆல்ட் டெல் போட்டிடுவோம்
நிறுத்து  நிறுத்து என்றாலும்
ஸ்டார்ட் பட்டனைத் தான் அமுக்க வேணும்

எல்லாம் நன்றாய்  முடிந்த பின்னர்
ஸ்லீப் மோடுக்கு போயிடுவோம்
சாதனைப் பட்டியலைப் பார்த்த பின்னர்
ரீ- ஸ்டார்ட் மீண்டும் செய்திடுவோம்!

மீனங்காடி (தொடர்)

மீனங்காடி

image

மேரி  அவளது மூன்று வருட வேலையில் முதல்தர மேனேஜர் என்று பெயர் வாங்கியிருந்தாள்.

ஆபீஸுக்குசீக்கிரம் வந்து லேட்டாக வீடு திரும்பும் வர்க்கம் அவள் இல்லை என்றாலும் அவளது மேஜையில் பேப்பர் எப்பொழுதும் தங்கியிருக்காது. அவள் வேலையை அவ்வளவு அக்கறையுடன் செய்வதில் சிறிய சிறிய சிக்கல்களும் இருந்தன. மற்றவர்கள் தங்கள் வேலையையும் அவளிடம் தள்ளி விடத் துவங்கினர். மேரி செய்தால் இன்னும் சிறப்பாக அமையும் என்று சொல்லியே தங்கள் வேலையை அவளை விட்டு செய்யச் சொல்லுபவர் பலர்.

மேரி மிகவும் பொறுப்புடன் வேலை செய்கிறவள். மற்றவர்கள் சொல்லும் யோசனைகளை அக்கறையுடன் கேட்பாள்.  அதனால் எல்லோரும் அவளை எப்போதும் மதிப்போடுதான் பேசுவார்கள்.  “ மேரி என் குழந்தைக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை ! நீ என் வேலையைக் கொஞ்சம் கவனிச்சுக்கிறியா?” என்று யார் கேட்டாலும், “கவலைப்படாதே ! நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்வதுதான் மேரியின் பதிலாக இருக்கும்.  அவள் பார்த்த வர்த்தகப் பிரிவு மிகவும் சௌகரியமாக இருந்தது.  அவளும் டென்ஷன் ஏற்றிக் கொள்ளாமல் மற்றவர்களையும் டென்ஷன் படுத்தாமல் அழகாக நிர்வாகம் செய்து வந்தாள். கூட வேலை செய்பவர்களும், மேலதிகாரிகளும் மேரியையும் அவளது டீம் பற்றியும் பெருமையாகவே பேசுவார்கள்.

இதற்கு நேர்மாறாக ‘வரவு செலவு டிபார்ட்மெண்ட்’ ஒன்று மூன்றாம் மாடியில் இருந்தது. அந்த மோசமான டிபார்ட்மெண்ட் நிதிக் கம்பெனியில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருத்தவே முடியாத, தண்டமான, மோசமான, சொன்னால் கேட்காத – இன்னும் அலுவலக அகராதியில்  என்னென்ன கெட்ட வார்த்தையில்  திட்ட முடியுமோ அத்தனையையும் தாங்கிக் கொண்டிருப்பது அந்த ‘டிபார்ட்மெண்ட்’.  ‘ குப்பைதொட்டி’ ‘சாவு கிராக்கி’ என்ற சிறப்புப் பட்டப் பெயர்கள் கூட அதற்கு உண்டு.  இதிலே என்ன கொடுமை என்றால் நிதிக் கம்பெனியின் மற்ற எல்லா டிபார்ட்மெண்ட்களும்இத்துடன் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. ‘வரவு செலவு’  எல்லோருக்கும் பொது. ஆனால் அதில் இருக்கிற சாவு கிராக்கிகளுடன் பேச எல்லோருக்கும் கொஞ்சம் பயம் தான்.

image

இன்றைக்கு அந்த ‘குப்பைத் தொட்டியில்’ என்ன நடந்தது தெரியுமா?’  அங்கே நடக்கிற சண்டை, அடிதடி, வாக்குவாதம் பற்றி இப்படித்தான் மற்றவர்கள் பேசிக் கொள்வார்கள்.  அங்கே ஏதாவது வேலையாகப் போன அத்தனை  பேரும் “ இது என்ன இழவு டிபார்ட்மெண்டோ” என்று அலுத்துக் கொண்டு தான் போவார்கள். மேரியின் கூட வேலை செய்கிறவன் ஒரு நாளைக்குச்  சொன்னான்“ மேரி இந்த வருடம் நோபல் பரிசு யாருக்குக் கிடைக்கப் போகிறது தெரியுமா? நம்ம மூணாம் மாடி சாவு கிராக்கி டிபார்ட்மெண்டில் உயிருள்ள ஒருவரைக் கண்டு பிடிப்பவர்க்குத் தானாம்”. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள் மேரி !

சில வாரங்களுக்கு முன்பு மேரிக்கு பதவி உயர்வு வந்தது. அவள் பயந்தபடியே அவளை அந்த மூன்றாம் மாடி ‘வரவு செலவு’ டிபார்ட்மெண்டுக்கு பொறுப்பாளியாகப் போட்டார்கள். உயர் அதிகாரிகளுக்கு மேரியைப் பற்றித் தெரியும்.  அவள் மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால் அவளுக்குத்தான் தயக்கமாக இருந்தது, இப்போது இருக்கும் வேலை மிகவும் சந்தோஷமான வேலை. சுறுசுறுப்பான திறமையான மக்கள் ! அதுமட்டுமல்ல !  ஜான் மறைவதற்கு முன்பே அந்த டிபார்ட்மெண்டில் இருந்து வந்தாள். எல்லோருக்கும் ஜானைப் பற்றி மேரியைப் பற்றி நன்றாகத் தெரியும். அவள் சொந்த வாழ்க்கையில் கஷ்டப் பட்ட போதெல்லாம் துணையாய் நின்றவர்கள் அவள் டீம் மக்கள் !.

image

ஜான் மறைவதற்கு முன்னால் மேரி எந்த அடாவடி வேலையையும் எடுத்துக் கொள்ளத் தயாராக இருந்தாள். ஆனால் இப்போது ‘மூணாம் மாடி மூணாம் பேஸ்து’ என்று சிலர் சொல்வதைக் காதாலேயே கேட்டாள். அதைப் பற்றி நன்கு  தெரிந்து வைத்துக் கொண்டிருந்தாள்.  ஜானின் கடைசிக் காலத்தில் ஆஸ்பத்திரி செலவிற்கு வாங்கின கடன் இன்னும் அடையவில்லை. மிகப் பெரிய தொகை அது.  இல்லையென்றால் ‘ இந்த பதவி உயர்வும் வேண்டாம் !  அந்த மூணாம் மாடி வேலையும் வேண்டாம்” என்று உதறி விட்டுப் போயிருப்பாள். அவளுக்குப் பதவி உயர்வை விட அந்த வேலை, சம்பளம் எல்லாம் மிகவும் தேவையாய் இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.  இரண்டு வருடங்களில் மூன்று பேர் வந்து ஓடிப்போன டிபார்ட்மெண்ட் அது !.

(தொடரும்) 

காதல் அல்ஜீப்ரா

காதல் அல்ஜீப்ரா

image

 காதலன் X ம்  காதலி  Y ம் கட்டிக்கிச்சாம்
( X + Y) ஹோல் ஸ்கொயர் ஆயிடிச்சாம்
காதலன் காதலி ஸ்கொயராகி
அப்பா  அம்மா ஆயிடிச்சாம்!
2XY  குழந்தையும் பொறந்திடிச்சாம்
Xம் பறந்து போயிடுச்சாம்
Y மட்டும்  அழுது பொலம்பிகிச்சாம்!