13/25

கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் அக்டோபர் 17.

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24ல் பிறந்து  சிகாகோவில் 1981 அக்டோபர் ,17ல் மறைந்த கவியரசர் கண்ணதாசன். முத்தையா என்பது அவரது இயற்பெயர். 

படைப்பாற்றல் : 

மாங்கனி என்ற சிறு காப்பியம் படைத்தார்.
சங்கரர் வட மொழியில் எழுதிய கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில், பொன்மழை யாகத் தந்தார்.
பஜகோவிந்தத்தை எளிய நடையில் மொழி பெயர்த்தார்.
பகவத்கீதைக்கு உரை விளக்கம் தந்தார்.

 270 நூல்களை -நாவல்கள் ,கட்டுரைகள், நாடகங்கள், கவிதை நூல்கள் ,வாழ்க்கைச் சரித்திரம், எழுதியிருக்கிறார். 
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட  கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேல் சினிமா பாடல்கள் எழுதியுள்ளார். 

அரசவைக்  கவிஞராக இருந்திருக்கிறார் .சேரமான் காதலிக்காக சாகித்ய அகாடெமி பரிசு பெற்றவர்.

அவரது சிறப்பு கருத்து நிறைந்த  எளிமையான திரைப்படப் பாடல்கள்.

அவரது முத்துக்களில் சிலவற்றை இந்த இதழ்களின் பக்கங்களில் ஸ்பரிசிக்கிறோம் ! 

ஒரு பத்து நிமிடம் கால அவகாசம் இருந்தால் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் அறிமுகம் மேலே உள்ள வீடியோவில் கேளுங்கள்!  

ராவணன் அசோக வனத்தில்  சீதையை மயக்க எல்லா வேடமும் போட்டு சீதை முன் நின்றானாம். ஆனால் ராமன் வேடம் போட்டு அவள் முன் நிற்க முடியவில்லையாம். அதற்கான காரணத்தைக் கவிஞர் அழகாக விளக்குகிறார்!