Bet You Didn’t Know: Halloween Video – History of Halloween – HISTORY.com

இது தான் ஹேலோவீன் என்று சொல்லப்படும் நிகழ்ச்சியின் முக்கிய பங்கு.

முதலில்  ஹேலோவீன் என்றால் என்ன? புனித மாலை என்றும் சொல்வார்கள்.

இது ஒரு அறுவடைத் திருநாள் அதாவது வெயில் காலம் முடிந்து குளிர் காலம் வருவதற்குத் தயார் செய்யும் காலம் . நம்ம ஊர் பொங்கல் போல.

இது ஒரு இறந்தவர்களை நினைக்கும் விழா. ( நம்ம ஊர் மாளய பக்ஷம் ஞாபகம் வருகிறதா? இதுவும் அதே சமயத்தில் தான் வருகிறது. அக்டோபர் 31 அன்று ). அன்றைக்குப் பாரம்பரிய கிறித்தவர்கள் கல்லறைக்குச் சென்று இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவது வழக்கம்.  அன்றைக்கு மாமிசம் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். புரட்டாசியில் கவிச்சு கிடையாது.  உலகில் 31 நாடுகளில் கொண்டாடப்படும் நிகழ்ச்சி இது..

image
image

நம்ம ஊரிலே பூசணிக்காய் இந்தச் சமயத்தில் ஏராளமாகக் காய்ப்பதால் அவற்றை வைத்துக் கொண்டு மக்கள் திருஷ்டி என்று அவற்றை வீணடிக்கிறார்கள். 

இங்கே பரங்கிக்காய் நிறையக் காய்ப்பதால் அதை வைத்துக் கொண்டு வித விதமான   உணவு வகைகள் செய்கிறார்கள். இது ஒரு பறங்கித்  திருவிழா கூட. ஆயிரக்கணக்கான பறங்கிக்  காய்களை ஒரு இடத்தில் குவித்து  அவற்றை வைத்து விளையாடி மகிழ்கிறார்கள்.

குழந்தைகளுக்கு இது ஒரு பயமுறுத்தும் தினமாக மாறிவிட்டது. .பட்டாசு , வெடி தீபாவளியில் வெடிப்பது போல. பூதம் பிசாசு ஆவி போல உடை அணிந்து மற்றவரை விளையாட்டாக பயமுறுத்துவது இதன் சிறப்பம்சம். பைசா தருகிறீர்களா அல்லது பயமுறுத்தட்டுமா? என்று குழந்தைகள் வீடு வீடாய்ப் போய் பேய் விளையாட்டு ஆடிவிட்டு  வருவது இதன் சிற(ரி)ப்பு  அம்சம். TRICK or TREAT என்று கேட்டுக்கொண்டு வரும்  குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுத்து பயமுறுத்தலிலிருந்து மக்கள் தப்பிப்பார்கள்.

page

Bet You Didn’t Know: Halloween Video – History of Halloween – HISTORY.com