• டபுள்யூ.ஆர்.ஸ்வர்ணலதா என்ற பெயரில் ஆனந்த விகடனில் ‘கண்ணே கனியமுதே’ உள்ளிட்ட மர்மத் தொடர்கதைகள் எழுதியவர் மறைந்த எழுத்தாளர் ஜே.எம். சாலி.
  •  1980-களில் திசைகள் என்ற இளைஞர் இதழைச் சாவி தொடங்கினார் பொறுப்பாசிரியர் மாலன். மயன் என்ற இளைஞர் இதழை மணியன் தொடங்கினார். பொறுப்பாசிரியர் ஜே.எம்.சாலி.
  • கலைமகள் மாத இதழில் அப்புசாமி சீதாப்பாட்டி கதாபாத்திரங்களை வைத்து பாக்கியம் ராமசாமி எழுதிய தொடர் ‘வீரப்பன் காட்டில் அப்புசாமி’.
  • பட்டுக்கோட்டை பிரபாகரின் மகள் ஸ்வர்ண ரம்யா வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்.’காதலால் காதலைக் காதலி’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது.
    எழுத்தாளர் தி.சா.ராஜுவின் நூற்றாண்டு இந்த ஆண்டு கொண்டாப்படுகிறது. ராணுவத்தில் பணியாற்றியவர். ஹோமியோபதி மருத்துவர். சிறுகதை, புதினங்கள், கட்டுரை,மொழிபெயர்ப்பு என எழுத்துத் துறையில் சாதனை படைத்தவர். இவர் எழுதிய சிறந்த சிறுகதை ‘பட்டாளக்காரன்’.
  • கண்ணதாசன் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப் படுகிறது. கவிஞராக கோலோச்சிய அவர் கல்கியில் எழுதிய சரித்திர நாவல் ‘சேரமான் காதலி’ சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
  • எழுத்தாளர் ஜெயமோகன் மகன் அஜிதன். நாவலாசிரியர். திரைப்படத் துறையிலும் பணிபுரிகிறார்.
  • மறைந்த எழுத்தாளர் தமிழ்வாணன் மனைவி மணிமேகலையும் எழுத்தாளர் என்பது பலருக்குத் தெரியாது. அவர் எழுதிய நாவல் ‘உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர்.’
  • எழுத்தாளர் இந்துமதி ஆசிரியராக இருந்து வெளிவந்த இதழ் அஸ்வினி. ஜெயலலிதா அந்த இதழில் எழுதிய தொடர்கதை ‘வீம்பின் விலை’
  • அனுராதா ரமணன் ‘பசி’ என்ற சிறுகதை மூலம் ஆனந்த விகடனில் அறிமுகம் ஆனார். இவரது படைப்புகள் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.
  • கல்கியின் வாழ்க்கை வரலாறு பொன்னியின் புதல்வர் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. எழுதியவர் சுந்தா. இயற்பெயர் எம்.ஆர்.எம்.சுந்தரம்.
  • எம்.ஜி.ஆர். தனது வாழ்க்கை வரலாற்றை ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற பெயரில் எழுதியுள்ளார். ஆனந்த விகடனில் சுமார் மூன்று ஆண்டுகள் தொடராக வெளிவந்தது. வாசகர்கள் கேள்விகளுக்கு தினமணி கதிர் இதழில் பல மாதங்கள் எம்.ஜி.ஆர். பதில் அளித்துள்ளார்.